கேரளா: கரையேற முடியாமல் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த காட்டு யானை

வால்பாறை அருகே கேரள மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், காட்டு யானை ஒன்று சிக்கிக் கொண்டது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலத்தில் உள்ள அதிரப்பள்ளி வனப்பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையால் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் அருகில் உள்ள பெருங்கள்குத்து என்ற அணையும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பில்லபார என்ற இடத்தில் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை வெள்ளத்தில் … Read more

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் திருவனந்தபுரம்: கேரளாவில் மாநிலத்தில் கனமழை கொட்டி தீர்த்து வரும் காரணத்தினால், 7 மாவட்டங்களில் இந்திய வானிலை மையம் அதிகன மழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் கடந்த ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவ மழை துவங்கியது. முதல் இரண்டு வாரங்களுக்கு லேசான மழை பெய்ந்தது. பின் கடந்த சில தினங்களாக பருவ மழை தீவிரமடைந்தது. கேரள மாநிலத்தில் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் மக்களின் … Read more

வங்கியின் துப்புரவாளர் டூ AGM ஆக பதவி உயர்வு பெற்ற பிரதிக்ஷா.. பெண் குலத்திற்கே பெருமை!

விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் வாழ்க்கையின் எந்த எல்லைக்கும் பயணிக்கலாம் என்பதற்கு பிரதிக்ஷாவின் கதை ஒரு சிறந்த உதாரணம். ஏனெனில் வங்கியின் துப்புரவளராக பணிபுரிந்த ஒரு பெண், இன்று அதே வங்கியின் உதவி பொது மேலாளராக உயர்ந்திருப்பது அவரின் முயற்சிக்கு கிடைத்த பரிசாகத் தான் பார்க்கப்படுகிறது. ஆக நம்பிக்கை இருந்தால் உலகில் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு பிரதிக்ஷாவின் ஏற்றம் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகவும் உள்ளது. இந்திய அரசின் ஜிடிபி தரவுகள் போலியா..? சுப்பிரமணியன் சாமி டிவீட்.. நிர்மலா … Read more

உ.பி: `அரசு வேலை கிடைக்கவில்லை’ – வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்; யமுனை ஆற்றில் குதித்து தற்கொலை செய்த இளைஞர்?!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா நகரின் நக்லா தல்ஃபி பகுதியை சேர்ந்த் இளைஞர் கர்மவீர் சிங். இவர் கடந்த சில ஆண்டுகளாகவே அரசு வேலையில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் வேலைக்காக முயற்சி செய்திருக்கிறார். இதைத்தொடர்ந்து, இந்திய ராணுவத்தில் சேர்வதற்காகவும் முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அவருக்கு அரசு வேலை கிடைக்கவில்லை. இந்நிலையில், தனக்கு வேலை கிடைக்கவில்லை என்ற மன உளைச்சலில் இருந்த கர்மவீர் சிங் நேற்று முந்தினம் யமுனை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறேன் என தனது … Read more

மின்சார கட்டணத்தை ஆண்டுக்கு 6% உயர்த்துவது கண்டனத்துக்குரியது: ராமதாஸ் 

சென்னை: தமிழக மக்களின் வருமானம் ஆண்டுக்கு 6% உயராதபோது மின்கட்டணம் 6% உயர்த்துவது மக்களை கசக்கிப் பிழியும் செயலாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ”தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களுக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நடப்பாண்டில் 52% வரை மின்கட்டண உயர்வை அறிவித்துள்ள வாரியம், இனி மின்சாரக் கட்டணத்தை ஆண்டுக்கு 6% உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளது. … Read more

குஜராத், ராஜஸ்தானியர் குறித்த சர்ச்சை கருத்து – மன்னிப்பு கோரினார் மகாராஷ்டிர ஆளுநர்

மும்பை: மும்பையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில், மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பேசும்போது, “குஜராத் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்களை மகாராஷ்டிராவில் இருந்து குறிப்பாக மும்பை மற்றும் தானே பகுதியிலிருந்து விரட்டியிருந்தால் இங்கு பணமே இருந்திருக்காது. நாட்டின் வர்த்தக தலைநகராக மும்பை இருந்திருக்க முடியாது. இவ்விரு மாநிலத்தவர்களும் எங்கு சென்றாலும், வர்த்தகம் செய்வதோடு, பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டி மக்கள் சேவை பணியிலும் ஈடுபடுகின்றனர்’’ என்றார். ஆளுநரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக சிவசேனா … Read more

Monkeypox: அச்சுறுத்தும் குரங்கம்மை.. 21 நாட்கள் தனிமை – அரசு உத்தரவு!

கர்நாடக மாநிலம் பெங்களூரில், குரங்கம்மை நோய் பரவலை கட்டுப்படுத்த, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து, குரங்கம்மை நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில், குரங்கம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை அடுத்து, குரங்கம்மை நோயை சர்வதேச அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. இந்தியாவில், கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டு … Read more

படத் தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன், தாணுவின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி ரெய்டு – பின்னணி என்ன?

மதுரை, சென்னை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக இன்று தகவல் வெளியாகியிருக்கிறது. திரைப்படத் துறையைச் சார்ந்த பைனான்ஸியரும், தயாரிப்பாளருமான அன்புச்செழியன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, எஸ்.ஆர். பிரபு, லட்சுமணன், ஞானவேல்ராஜா, சத்யஜோதி தியாகராஜன் உள்ளிட்ட பலரின் வீடு, அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பிரகாசம் சாலையிலுள்ள தாணுவின் அலுவலகத்தில் இரண்டு வாகனங்களில் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். … Read more

இதுவரை நாம் அழியாமல் இருப்பது அதிர்ஷ்டம்தான்… ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைவர் கூறும் முக்கிய செய்தி

இதுவரை நாம் அழியாமல் இருப்பது அசாதாரண அதிர்ஷ்டத்தால்தான் என்கிறார் ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைவர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலரான அன்டோரியோ குட்டெரஸ், உலகம் அணு ஆயுதப்போரால் அழிவதற்கு ஒரு தவறான புரிதல் அல்லது தவறான கணிப்பு போதும் என்று கூறியுள்ளார். அப்படி நாம் இதுவரை அழியாமல் தப்பியது அதிர்ஷ்டம்தான் என்று கூறும் குட்டெரஸ், ஆனால், அதிர்ஷ்டம் மட்டுமே போதாது, மொத்த அணு ஆயுதங்களும் உலகிலிருந்து அகற்றப்பட்டால்தான் முழுமையான பாதுகாப்பு என்கிறார். அணு ஆயுதப் பரவல் தடுப்பு … Read more

சோசியல் மீடியா ‘டிபி’யில் தேசிய கொடியை வையுங்கள்- மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்…

டெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக, தனது டிவிட்டர் பக்கத்தில் தேசியை கொடியை வைத்துள்ள பிரதமர் மோடி,  சமூக வலைதள பக்கங்களில் தேசிய கொடியை வையுங்கள் என நாட்டு மக்களுக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே வீடுகளில் தேசியகொடி ஏற்ற அறிவுறுத்தி உள்ள நிலையில், தற்போது சோசியல் மீடியா டிபிக்களிலும் வைக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி வெகுசிறப்பாககொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், … Read more