உலகளவில் 58.26 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 58.26 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 58.26 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 64.21 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 55.30 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு உலக அளவில் 6,421,075 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64.21 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,421,075 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 582,646,408 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 553,086,680 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 42,116 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மோடிக்கு 6 வயது சிறுமி கடிதம் பென்சில், ரப்பர் விலை கூடிடுச்சு

புதுடெல்லி: விலைவாசி உயர்வால் தான் சந்திக்கும் துயரங்கள் பற்றி ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. உத்தர பிரதேசத்தின் கன்னூஜ் மாவட்டத்தில் உள்ள சிப்ராமூ கிராமத்தை சேர்ந்தவர் விஷால் துபே. இவரது 6 வயது மகள் கீர்த்தி அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், பள்ளியில் பென்சிலை தொலைத்து விட்டு, வேறு பென்சில் கேட்டதற்காக கீர்த்தியை கண்டித்து அவரது தாய் … Read more

இன்றைய மின்தடை| Dinamalar

காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 வரை கருவடிக்குப்பம் மின்பாதை: கோரிமேடு காவலர் குடியிருப்பு, பூபாலன் நகர், ஜிப்மர் குடியிருப்பு, தட்டாஞ்சாவடி மற்றும் தொழிற்பேட்டை, சுப்பையா நகர்.வில்லியனுார் இன்டர்லிங்க் மின்பாதை: கோர்க்காடு. காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 வரைகருவடிக்குப்பம் மின்பாதை: கோரிமேடு காவலர் குடியிருப்பு, பூபாலன் நகர், ஜிப்மர் குடியிருப்பு, தட்டாஞ்சாவடி மற்றும் தொழிற்பேட்டை, சுப்பையா ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை … Read more

காமன்வெல்த் போட்டியில் இந்தியா வென்ற பதக்கங்கள் ஒன்பதாக உயர்வு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பிர்மிங்ஹாம்: பிர்மிங்ஹாமில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா வென்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. நான்காவாது நாளாக நடந்த விளையாட்டு போட்டியில் ஜூடோ ஆடவர் பிரிவில் விஜய் வெண்கலமும், ஜூடோ பெண்கள் பிரிவில் சுசீலா வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளனர். எடை தூக்கும் போட்டியில் 71 கிலோ ஆடவர் பிரிவில் கர்ஜிந்தர் கவுர் வெண்கல பதக்கம் வென்றார். இதையடுத்து காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா மூன்று தங்கப் பதக்கங்களும், … Read more

கொழும்பு மாநகர பகுதிக்குள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்

கொழும்பு மா நகர எல்லை பகுதிக்குள் நடமாடும் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என கொழும்பு மா நகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பு மா நகர எல்லையில் கடமைக்காக வருபவர்கள் மற்றும் கொழும்பு நகர எல்லையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருப்பவர்கள் , அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். கொழும்பு நகர எல்லையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, பாரிய அளவு அதிகரித்துள்ளமையால் அவர் இந்த … Read more

நயன்தாரா- விக்கி நிஜக் காதலை மூட்டிவிட்டதே இந்த தாத்தாதான்; ‘நானும் ரவுடிதான்’ ஃப்ளாஷ்பேக்

தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடியாக வலம் வந்த விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களின் காதலுக்கு பாலமான இருந்தது நான் தான் என்று நானும் ரவுடி தான் ராகுல் தாத்தா கூறியள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். தொடர்ந்து 3 வருட இடைவெளியில் அவர் இயக்கிய நானும் ரவுடிதான் திரைப்படம் … Read more

கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு, வடை எடுக்கும் நேர்த்திகடன் செலுத்தும் பக்தர்கள்.! ஆடிப்பூர ஸ்பெஷல்.! 

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சந்தவாசல் பகுதியில் துரிஞ்சிகுப்பம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இதில் அருள்மிகு ஆதிபராசக்தி அம்மன் கோவில் இருக்கின்றது. இதில் இன்று ஆடிப்பூர விழா மக்களால் கொண்டாடப்பட்டது. ஆடிப்பூர விழாவை முன்னிட்டு நேற்று பொங்கல் வைத்து அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் உள்ளிட்டவை நடைபெற்றன. இன்று காலை 108 பால்குட அபிஷேகம், அலகு குத்தி தேர் இழுத்தல் மதியம் அன்னதானம் வழங்கல் உள்ளிட்டவை நடைபெற்றன. இன்று பிற்பகல் நேரத்தில் கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டு வடை எடுத்தல், மார்பில் … Read more

கரூர் அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கு குடிநீர், கழிவறை வசதியுடன் ஓய்வறை

கரூர்: கரூர் மாவட்டத்தில் அனைத்துத் துறை அலுவலகங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கு குடிநீர், கழிவறை வசதியுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. அதனை புகைப்படம் எடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க ஆட்சியர் உத்தரவிட்டதை அடுத்து அனைத்துத் துறையினர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆக. 1) புகைப்படங்களை சமர்ப்பித்து வருகின்றனர். கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அனைத்துத் துறை அலுவலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைப்படி தலைமைச் செயலாளர் அறிவுறுத்தலின்பேரில் அனைத்துத் … Read more

தெலுங்கு திரைப்பட படப்பிடிப்புகள் இன்று முதல் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு

கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின், திரைப்பட தயாரிப்பு செலவுகள் அதிகரித்திருப்பது, ஓ டி டி தளங்களில் திரைப்படங்கள் வெளியாவதால் விநியோகஸ்தர்களுக்கு ஏற்படும் இழப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளால் தெலுங்கு திரைப்பட படப்பிடிப்புகள் இன்று முதல் நிறுத்தப்படுவதாக, தெலுங்கு ஃபிலிம் சேம்பர் ஆப் காமர்ஸின் தலைவர் பசீர் ரெட்டி தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் உள்ள 24 சங்கங்கள் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், விரைவில் இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தப்பட்டு அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில் … Read more