ட்ரோன் தாக்குதலில் பழி தீர்த்தது… மரணத்தின் மருத்துவர் படுகொலை: ஜோ பைடன் நிர்வாகம் அறிவிப்பு

அல்கொய்தாவின் முக்கிய தலைவர் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது. குறித்த தகவலை நாட்டு மக்களுக்கு நேரலையில் ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அல்கொய்தா பயங்கரவாத குழுவின் நிறுவனர்களில் ஒருவரும், 2001 அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் மூளையாக செயல்பட்டவருமான 71 வயது அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் முன்னெடுக்கப்பட்ட ட்ரோன் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. மரணத்தின் மருத்துவர் … Read more

60 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்பாதி திரௌபதியம்மன் கோயிலில் இன்று பட்டாபிஷேக பூஜை

விழுப்புரம்:  விழுப்புரம் அருகே கோலியனூரில் உள்ள மேல்பாதி திரௌபதியம்மன் கோயிலில் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தா்மராஜா பட்டாபிஷேக பூஜை இன்று நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள் ஊா்வலம், புலி ஆட்டம், பொய்க்கால் குதிரை, செண்டை மேளம், உறுமி மேளம், இசைக்கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

சல்மான் கானுக்கு துப்பாக்கி லைசென்ஸ் கிடைத்தது

மும்பை: கொலை மிரட்டல் வந்ததை அடுத்து, நடிகர் சல்மான் கான் துப்பாக்கி வைப்பதற்கான லைசென்ஸ் பெற்றார். கடந்த மே 29ம் தேதி பஞ்சாபி பாடகர் சித்து முஸேவாலா சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோய் என்பவன், சல்மான் கானுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினான். அதில், உனக்கும் இந்த கதிதான் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதே போன்ற மிரட்டல் சல்மானின் அப்பா சலீம் கானுக்கும் விடுக்கப்பட்டது. இதையடுத்து தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ள துப்பாக்கி லைசென்ஸ் … Read more

காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்காக முன் கூட்டியே சித்தராமோற்சவம்| Dinamalar

தாவணகரே : கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவின் 75வது பிறந்த நாள் விழாவை ஒட்டி, தாவணகரேவில் நாளை நடக்கவுள்ள சித்தராமோற்சவத்தில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் பங்கேற்கிறார்.சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவின் 75வது பிறந்த நாள் விழாவை ஒட்டி, அவரது ஆதரவாளர்கள் சித்தராமோற்சவம் என்ற பெயரில் கொண்டாட உள்ளனர். இதற்காக தாவணகரேவில் ஷாமனுார் சிவசங்கரப்பா அரண்மனை மைதானத்தில் பிரமாண்டமான விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 12ம் தேதி பிறந்த நாள் என்றாலும், காங்கிரஸ் எம்.பி., வருகையில் அவருக்கு … Read more

ரன்வீர் சிங்கை நிர்வாணமாக பார்க்கவே ஆசை : பாலிவுட் நடிகை ஏற்படுத்திய பரபரப்பு

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் வெளியிட்ட நிர்வாண போட்டோக்கள் மிகப் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதையடுத்து அவர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. என்றாலும் பாலிவுட் சினிமாவை சேர்ந்த திரைப்பிரபலங்கள் ரன்வீர் சிங்குக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். குறிப்பாக நடிகைகளும் இவரின் போட்டோ ஷூட்டிற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்தநிலையில் பாலிவுட் நடிகையான ராக்கி சாவந்த் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வீடியோவில், ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோ சூட்டிற்கு ஆதரவு … Read more

திருமண நேரத்தில் திடீரென தொலைந்த மாலை… மணமகளை அசத்திய மாப்பிள்ளையின் செயல்!

திருமண நேரத்தில் ஏதாவது ஒரு பொருள் தொலைந்து போனால் திருமண மண்டபமே பரபரப்பு அடையும் என்பதும் குறிப்பாக திருமண வீட்டார் எந்த அளவுக்கு பதட்டமாக இருப்பார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அப்படி ஒரு நிகழ்வு ஐதராபாத்தில் நடந்த ஒரு திருமணத்தில் நடந்த போது மணமகன் செய்த சமயோசிதமான செயல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. திருமண நேரத்தில் திடீரென மணமகள் அணியவேண்டிய மாலை தொலைந்து போனதை அடுத்து மணமகன் உடனடியாக அமேசானில் ஆர்டர் செய்து மாலையை வரவழைத்தது … Read more

3 ஸ்பூன் வெந்தயம், கொஞ்சூண்டு தண்ணீர்… தளர்ந்த மார்பகங்களை வீட்டிலேயே சரி செய்ய இவ்ளோ ஈஸி வழி!

ஆண்களை விட பெண்கள் மனதளவிலும் உடலளவிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டுள்ளனர். அதேபோல் அவர்களை தாக்கும் நோய்களும் மாறுபாடானவை. ஆனால், பெண்களுக்கு இருக்கும் மார்பகங்கள் அளவு, வடிவம் மற்றும் நிறம் என அனைத்திலும் வேறுபடடை கொண்டுள்ளன. இந்த வேறுபாடுக்ள அனைத்தும் பரம்பரை பண்புகள் என்று சொல்லப்படுகிறது.. ஒரு பெண்ணின் மார்பகங்கள் சுரப்பி திசு (பால் உற்பத்தி செய்யும்) மற்றும் கொழுப்பு திசு (கொழுப்பை உருவாக்குகிறது) ஆகியவற்றை கொண்டுள்ளது. கர்ப்ப காலத்தில் மார்பகங்கள் முழுமையாக வளரும், ஈஸ்ட்ரோஜன்கள், புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் … Read more

மழைக்கால அவசர உதவிக்கான தொலைபேசி எண்.! கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.! 

அவசர உதவிக்கான தொலைபேசி எண்களை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்த வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ” கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆராய்ச்சி துறையின் அறிக்கையின்படி ஆகஸ்ட் 1 முதல் 4ஆம் தேதி வரை அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்கவும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் … Read more

காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைகிறது சென்னையின் 2-வது விமான நிலையம் – மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் அறிவிப்பு

சென்னை: காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைய உள்ளது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்ததும் அதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கும் என்று மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள மிகப்பெரிய விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம் முக்கியமானதாகும். இங்கிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த சில ஆண்டுகளில் … Read more

தேசிய விருது கமிட்டியில் சினிமா தெரியாதவர்கள்: அடூர் கோபாலகிருஷ்ணன் சாடல்

திருவனந்தபுரம்: சினிமா பார்க்காத, சினிமா  குறித்து எதுவுமே தெரியாதவர்கள் தான் தேசிய விருதுக் கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்று மலையாள சினிமா இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அடூர் கோபாலகிருஷ்ணன் பேசியது: தேசிய சினிமா விருது என்பது இப்போது ஒரு கொடுமையான பொழுதுபோக்காக மாறிவிட்டது. யார் என்றே தெரியாத விருதுக் கமிட்டினர்தான் இந்த கொடுமைகளில் ஈடுபடுகின்றனர். யாரெல்லாமோ விருதுக் கமிட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். யாருக்கெல்லாமோ அவர் விருதுகளை வாரி வழங்குகிறார். … Read more