பெரும்பாலான நாடுகளை காட்டிலும் இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: மக்களவை விவாதத்தில் நிர்மலா சீதாராமன் பதில்

டெல்லி: பெரும்பாலான நாடுகளை காட்டிலும் இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது என நிர்மல சீதாராமன் அறிவித்துள்ளார். விலைவாசி உயர்வு குறித்து மக்களவை விவாதத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். உலகிலேயே அதிக வேகத்துடன் இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருவதாக நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.இன்று கூடிய நாடாளுமன்ற கூட்ட தொடரில் மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக முதலில் 12 மணி வரையிலும் பின்னர் 2 மணி வரையிலும் இரு … Read more

’நீங்கள் பாதிக்கப்பட்டவர் இல்லை; அதனால் உத்தரவிடமுடியாது’.. நீதிமன்றம் சொன்ன விநோத காரணம்!

மனிதக் கழிவை மனிதனே அகற்றுவதை தடுக்கும் தனிப்பட்ட சட்டங்கள் இருந்தும் கழிவை அகற்றும் பணியின் போது மனித மரணங்கள் ஏற்படுவது எதனால் என்பதையும் அதனைச்சார்ந்த சட்ட வழிமுறைகள் சரியாக செயல்படுகிறதா என்ற அறிக்கையையும் அறிவிக்க உத்தரவிடக் கோரி மதுரை யாகப்பா நகரைச் சார்ந்த இருளாண்டி என்பவர் மனு ஒன்றை மதுரைக்கிளை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். கடந்த 1994 ஆம் ஆண்டு மனித கழிவை மனிதனே அகற்றும் அவலத்தை தடுத்து நிறுத்தும் பொருட்டு தேசியத் தூய்மை பணியாளர் … Read more

'காய்கறிகளை பச்சையாக சாப்பிடணுமா?'..விலைவாசி உயர்வு குறித்து மக்களவையில் காரசார விவாதம்!

மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி உள்ளிட்ட நான்கு காங்கிரஸ் உறுப்பினர்களின் இடைநீக்கம் திங்கட்கிழமையான இன்று ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மக்களவையில் இதுவரை நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. அதைத்தொடர்ந்து மழைக்கால கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட விலைவாசி உயர்வு மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் திங்கட்கிழமை காலை இரண்டு முறை ஒத்திவைப்பு நடைபெற்றதால் முடங்கிய நிலையில், இடை நீக்கம் செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் வருத்தம் தெரிவித்தால் அவர்களுடைய இடைநீக்கத்தை ரத்து செய்யலாம் … Read more

தேசிய கல்வி கொள்கைக்காக பள்ளிகளில் சிறப்பு வசதிகள்| Dinamalar

பெங்களூரு, : அடுத்த ஆண்டிலிருந்து, தேசிய கல்வி கொள்கை செயல்படுத்தப்படும். இதற்கு தகுந்தபடி, அரசு பள்ளிகளில் வசதி செய்யப்படுகிறது,” என கலால்துறை அமைச்சர் கோபாலய்யா தெரிவித்தார்.பெங்களூரில், நேற்று அவர் கூறியதாவது:மஹாலட்சுமி லே — அவுட் சட்டசபை தொகுதியில், பல இடங்களில் 50 கோடி ரூபாய் செலவில், டில்லி போன்று பப்ளிக் பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த பள்ளிகளில், அதிநவீன ஆய்வகம், நுாலகம், கணினி லேப்கள் உள்ளன. தனியார் பள்ளிகளுக்கு, எந்த வகையிலும் குறைவில்லாதபடி, உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு மாணவர்கள் அட்மிஷன் … Read more

எஸ்.ஏ.சந்திரசேகரின் வீட்டை ஜப்தி செய்ய போலீஸ் உதவிய நாடிய அதிகாரிகள்

நடிகர் விஜய்யின் தந்தை இயக்குனரான எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் வசிக்கிறார். கடந்த 2011ம் ஆண்டு வெளியான 'சட்டப்படி குற்றம்' படத்தின் விளம்பர செலவுக்காக ரூ.76,112 ரூபாயை வழங்காததை தொடர்ந்து அந்த விளம்பர உரியாமையாளர் சரவணன் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பணத்தை சந்திரசேகர் செலுத்தாததால் அவருக்கு சொந்தமாக சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் உள்ள ஏசி, டேபிள், பேன் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய … Read more

அரிசி விலை 30 சதவீதம் உயர்வு.. கதறும் மக்கள்..!

இந்தியாவில் பருவமழை இயல்பை விட 11% அதிகமாக இருக்கும் நிலையில், நாடு முழுவதும் விநியோகம் சீரற்றதாக உள்ளது மற்றும் இந்த ஆண்டு உணவு தானிய உற்பத்திக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டு உள்ள வேளையில் அரசி விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் துவங்கிய நாளில் இருந்து உணவு பொருட்கள் விநியோக சங்கிலி தடைபெற்று அதிகளவிலான வர்த்தக நெருக்கடிகள் உருவானது. இதேவேளையில் பல நாடுகளில் பல காரணங்களுக்காக உணவுப் பொருட்களின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. … Read more

முன்னறிவிப்பின்றி கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பு; சலவைத் தொழிலாளர்கள் சாலை மறியல்!

காவிரியின் வெள்ளப் பெருக்கைக் கொள்ளும் இடம் கொள்ளிடம் எனப் பெயர் பெற்ற கொள்ளிடம் ஆறு திருச்சி அருகே திருவரங்கம் தீவில் மேலணை எனப்படும் முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் திருச்சி, அரியலூர், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் பாய்ந்து சீர்காழி அருகே பழையாறு கடலில் கலக்கின்ற நதியாகும். 1/ Click to share on Twitter (Opens in new window) Click to share on Facebook (Opens in new … Read more

Laal Singh Chaddha: படத்தைப் புறக்கணிக்கும்படி கிளம்பிய டிவிட்டர் டிரெண்டிங் – ஆமிர் கான் விளக்கம்!

நடிகர் ஷாருக்கான் படம் நான்கு ஆண்டுகளாகத் திரைக்கு வராமல் இருப்பது போல் நடிகர் ஆமீர் கான் படமும் கடந்த நான்கு ஆண்டுகளாக வெளிவரவில்லை. இப்போதுதான் ‘லால் சிங் சத்தா’ என்ற படம் வெளியாவதற்குத் தயாராகி இருக்கிறது. வரும் 11-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழிலும் படம் டப் செய்யப்பட்டு அதே நாளில் திரைக்கு வருகிறது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதனைப் பார்த்த சிலர் இப்படத்தைப் புறக்கணிக்கவேண்டும் என்று டிவிட்டரில் ஹேசஷ்டேக் மூலம் டிரெண்டிங் செய்து … Read more

போடுரா தம்பி பூட்டை.. தூக்குடா தம்பி பணத்தை.. ஜலாம் சிங்கிற்கு சலாம்..! களவாணி களை மடக்கிய காவலர்

கடை உரிமையாளரை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு, கடையில் இருந்து 7 லட்சத்து 85 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் வெள்ளி நாணயங்களை   கொள்ளையடித்து சென்ற கடை ஊழியரை   இரவு ரோந்து காவலர் மடக்கிப்பிடித்த சம்பவம் சென்னை சவுகார்பேட்டையில் நிகழ்ந்துள்ளது. சென்னை சவுக்கார்பேட்டை பத்ரி வீராசாமி தெருவைச் சேர்ந்தவர் ஜாலம் சிங். பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த வியாபார கடை வைத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜாலம் சிங், கடந்த எட்டு வருடமாக இந்த பகுதியில் கடை நடத்தி … Read more

‘யானை’ படத்துக்கு எதிரான வழக்கு: தணிக்கைக் குழு மேல்முறையீட்டுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: ‘யானை’ படத்துக்கான சான்றிதழை எதிர்த்து தணிக்கை குழு முன் மேல்முறையீடு செய்ய அனுமதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான யானை திரைப்படத்துக்கு எதிராக சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தமிழ்நாடு மீனவர் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஜோபாய் கோமஸ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “யானை திரைப்படத்தில் ராமநாதபுரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதி மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை சமூக விரோதிகளாகவும், கூலிப்படையினராகவும் … Read more