தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை ஆகிய 3 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை சென்னை வானிலை மையம் விடுத்துள்ளது. தமிழகத்தின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு … Read more