சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.  2022 ஓகஸ்ட்26ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஓகஸ்ட்26ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய … Read more

Tamil news today live: கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்

Go to Live Updates பெட்ரோல் டீசல் விலை பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கனல் கண்ணனின் ஜாமின் மனு தள்ளுபடி  சண்டை கலைஞர் கனல் கண்ணனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம். பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கொடநாடு வழக்கு இன்று விசாரணை கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு … Read more

திருப்பூர்: மனைவியிடம் தகராறு செய்த கணவர் தூக்கு போட்டு தற்கொலை

திருப்பூர் மாவட்டத்தில் மனைவியிடம் தகராறு செய்த கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெரிய காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி சிவகுமார் (வயது42). இவர் முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சிவகுமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால் தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடையே தகராறு செய்து வந்துள்ளார். இதையடுத்து மீண்டும் நேற்று மது குடித்துவிட்டு வந்து மனைவியிடையே தகராறு செய்த … Read more

தாம்பத்யம்: குளிச்சு ரெடியானா மட்டும் போதாது; இதெல்லாம் ரொம்ப முக்கியம்! #VisualStory

தம்பதிக்கு நடுவே காமம் சலிப்புத் தட்டாமல் இருக்கும் வரை, வாழ்வு திருவிழாதான். அதற்கு, `இன்னிக்குதான் மொத தடவை’ என்பது போன்ற எண்ணம், மனநிலை, ஒவ்வொரு முறையும் வேண்டும். `மாசத்துக்கு ஒரு தடவையாவது’, `வாரக் கடைசியிலயாவது’ என டார்கெட் வைத்து ஈடுபடுவதில்லை காமம். காமம் என்பது கண்ணாடி வளையல்களில், பட்டுநூல் சுத்துவது போல. பலமுறை அதை அனுபவித்திருந்தாலும், ஒவ்வொரு முறையும் ரசனையோட அந்தப் பட்டுநூலை சுற்ற வேண்டும். அதனால், ஒவ்வொரு முறையும் முதல் தடவை போன்ற சந்தோஷமும், திருவிழா … Read more

விஞ்ஞானபூர்வ ஊழல் வித்தைகள் காட்டுவதில், திமுகவினர் தங்கள் தலைமயையே விஞ்சி விட்டனர்” – அண்ணாமலை!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி திமுக எம்எல்ஏ நடத்திய மொய் விருந்தின் மூலம், விஞ்ஞானபூர்வ ஊழல் வித்தைகள் காட்டுவதில், திமுகவினர் தங்கள் தலைமையை விஞ்சி விட்டனர் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், திமுக எம்எல்ஏ அசோக் குமார் நடத்திய மொய் விருந்தில் 11 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இரண்டு இலட்சத்திற்கு மேல் காசோலைகளை தான் பயன்படுத்த வேண்டும், வங்கியில் 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் செலுத்தினால் வருமானவரித்துறை … Read more

தஞ்சை கொத்தங்குடி திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையத்தில் மழையால் நெல் மூட்டைகளுக்கு பாதிப்பு இல்லை: நுகர்பொருள் வாணிபக் கழகம் விளக்கம்

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் கொத்தங்குடி திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையத்தில் மழையால் நெல் மூட்டைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம், கொத்தங்குடி திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையத்தில் சுமார் 6 ஆயிரத்து 933 டன் நெல் இருப்பு வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. மழையால் நெல் மூட்டைகள் நனைந்துவிட்டது என்று சில பத்திரிகைகளில் … Read more

திருக்குறளின் ஆன்மாவை சிதைத்தவர் ஜியு போப். ஆளுநர் ரவி

புதுடெல்லி: திருக்குறளில் இருந்து பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே சிதைக்கப்பட்டுள்ளது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார். தலைநகர் டெல்லியில் லோதி எஸ்டேட் பகுதியில் டெல்லி தமிழ் கல்வி கூட்டமைப்பின் (Delhi Tamil Education Association – DTEA) சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். விழாவில் ஆர்.என்.ரவி பேசியதாவது: பிரிட்டிஷாரின் கிழக்கு இந்திய கம்பெனியும், ஜி.யு.போப் போன்ற மிஷனரிக்களும் திருக்குறளின் பக்தி என்ற ஆன்மாவை வேண்டுமென்றே மறைத்துள்ளனர் திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி … Read more

Pegasus Case: உளவு மன்னன் பெகாசஸ்! பெகாசஸ் தனி மனிதரை எப்படி பாதிக்கும், எப்படி தப்பிப்பது?

சமீபத்தில் உலகையே உலுக்கிய பெகாசஸ் என்ற ஸ்பைவேரை யாரும் மறந்திருக்க மாட்டோம். பெரிய பெரிய அரசியல் புள்ளிகள் முதல் பிரபலங்கள் வரை பயந்து கொண்டிருந்த தருணம். ஒரு வேளை இருக்குமோ? என எல்லார் மனதிற்குள்ளும் அச்சம் ஊஞ்சலாடி கொண்டிருந்த சமயம். வேறொன்றுமிலை சில மாதங்களுக்கு முன்பு இஸ்ரேலை சேர்ந்த பெகாசஸ் என்ற உளவு பார்க்கும் மால்வேர்(malware) தான் இப்படி பலரையும் பீதியில் ஆழ்த்தியது. ஒரு மெசேஜ், மெயில், ஏன் ஒரு வாட்சப் மிஸ்ட்கால் மூலமாக கூட உங்கள் … Read more

அரசாங்க தொழிலை எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அரச துறையில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்களுக்கு ஓர் வாய்ப்பு இலங்கையில், ஆசிரியர் துறையில்வேலைவாய்ப்பினை எதிர்பார்த்திருக்கும் நபர்களுக்கு ஒரு சிறந்த சந்தர்ப்பம். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி நேரத்தில் தொழிவாய்ப்பு தேடி காத்திருக்கும் இலங்கையர்களுக்கு  ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. வடமத்திய மாகாணசபை பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெற்றிடங்கள் அதிகரிப்பு குறித்த வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தமிழ், … Read more

கோப்ரா முன்னோடத்தில் சீயான் விக்ரம் உருக்கமான பேச்சு

இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’. இந்த படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படப்புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் ஏராளமான முன்னணி நட்சத்திர பட்டாளங்களும் நடித்திருக்கிறார்கள். ‘இசைப்புயல்’ ஏ ஆ ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ … Read more