மாறி வரும் சூழலுக்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும் – தொழிலாளர் மாநாட்டில் பிரதமர் அறிவுரை

திருப்பதி: திருப்பதியில் உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலில் 2 நாட்கள் நடைபெற உள்ள தேசிய தொழிலாளர் நல மாநாட்டை நேற்று மத்திய சுற்றுச்சூழல், வனம், தொழிலாளர் நலம், மற்றும் ஊரக வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில், 25 மாநில மற்றும் யூனியன் பிரதேச தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில், காணொலி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: உலகில் வளர்ச்சி பெற்ற, வலிமை பெற்ற நாடாக நம் நாடு … Read more

இந்திய மாணவர்களுக்கு கனடா விசா கிடைப்பதில் காலதாமதம் – விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிக்க இந்திய தூதரகம் வலியுறுத்தல்

புதுடெல்லி: கனடாவில் அடுத்த மாதம் கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில் இந்திய மாணவர்களுக்கு விசா கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிக்க வேண்டும் என இந்திய தூதரம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஒட்டாவா நகரில் உள்ள கனடாவுக்கான இந்திய தூதரகம் கூறியிருப்பதாவது: கனடாவில் அடுத்த மாதம் கல்வியாண்டு தொடங்குகிறது. கனடா கல்லூரிகளில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் விசா கோரி விண்ணப்பித்துள்ளனர். ஆனால் விசா கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் பெறப்பட் டுள்ளன. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் … Read more

ராமநாதபுரம் ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு

National Award for Teachers: 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதை, தமிழ்நாட்டில் இருந்து ஒரே ஓர் ஆசிரியர் அதுவும் தொடக்கப் பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் பெற்றுள்ளார். மாணவர்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றி, இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அவரின் பணிகளைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதை அடுத்து நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு, இந்த நாளில் மத்திய … Read more

திருத்தணி ஒன்றியத்தில் உள்ள சுடுகாடுகள் சீரமைக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை

திருத்தணி: திருத்தணி ஒன்றியத்தில் உள்ள அனைத்து சுடுகாடுகளையும் சீரமைக்கவேண்டும் என்று மக்களும் சமூகநல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்தில் அடங்கிய 27 ஊராட்சிகளில் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள அனைத்து கிராமங்களிலும் இந்து, கிறிஸ்தவர், முஸ்லீம் என மூன்று மதத்தினருக்குமான சுடுகாடு, இடுகாடுகள் தனித்தனியாக உள்ளது. இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான சுடுகாடு, இடுகாடுகள் பராமரிப்பின்றி விடப்பட்டதால் கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டிக் காணப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் அனைத்து சுடுகாடு … Read more

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மாநகரில் பாதுகாப்பு பணியில் 20 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். காசிமேடு, பட்டினப்பாக்கம், எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் ஆகிய இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜாமீனில் வெளியே வந்த பாஜ எம்எல்ஏ மீண்டும் கைது

ஐதராபாத்: முகமது நபிகள் குறித்து இழிவாக பேசியதாக தெலங்கானாவில் பாஜ எம்எல்ஏ ராஜா சிங்கை கடந்த 23ம் தேதி அம்மாநில போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி போலீசார் அவரை கைது செய்யாததால் அன்றைய தினமே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதை கண்டித்தும், எம்எல்ஏ ராஜா சிங்குக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், ஜாமீனில் வந்த எம்எல்ஏ ராஜா சிங், தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவின் மகன் ராமராவ், வாக்கு வங்கி அரசியலில் … Read more

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வருவாய்த் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதாலும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதாலும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் எந்த நேரத்திலும் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவிரி … Read more

ஹரியானா பாஜக பிரமுகர் சோனாலி போகத் கொலை- உதவியாளர்கள் 2 பேரை கைது செய்த கோவா போலீஸ்

News oi-Mathivanan Maran பனாஜி: ஹரியானா பாஜக பிரமுகர் சோனாலி போகத் கொலை தொடர்பாக அவரது உதவியாளர்கள் 2 பேரை கோவா போலீசார் கைது செய்துள்ளனர். நடிகை சோனாலி போகத் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர். பின்னர் நடிகையானார். 2020-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சோனாலி போகத் கலந்து கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவில் இணைந்த சோனாலி, 2019-ல் ஆதம்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். ஹரியானாவின் ஆதம்பூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் … Read more

சோனாலி போகத் உடலில் ஏகப்பட்ட காயங்கள்.. இது கொலை தான் என வந்த பிரேத பரிசோதனை அறிக்கை.. இருவர் கைது

மும்பை: கோவாவுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் பிக் பாஸ் பிரபலமும் அரசியல்வாதியுமான சோனாலி போகத் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல் கட்ட விசாரணையாக சோனாலி போகத் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், சோனாலி போகத்தின் அம்மா, உணவு சாப்பிட்ட பிறகு தனக்கு அசெளகர்யமாக இருந்ததாக சோனாலி தன்னிடம் போனில் சொன்னார் என சந்தேகத்தை கிளப்பினார். படு கொலை மாரடைப்பு ஏற்பட்டு விட்டது என கடந்த திங்கட்கிழமை சோனாலி போகத்தை செயின்ட் … Read more