ரூ.7300 கோடியில் புதிய ஆலை. சுசுகி மோட்டார் நிறுவனத்தின் வேற லெவல் திட்டம்!

இந்திய வாகன உற்பத்தி நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்று சுசுகி மோட்டார் என்பதும், இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சுசுகி நிறுவனம் ரூபாய் 7300 கோடியில் புதிய ஆலை ஒன்றை குஜராத்தில் திறக்க உள்ள நிலையில் இந்த ஆலையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்தியாவில் சுசுகி நிறுவனம் தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் இந்த புதிய ஆலை திறக்கப்பட … Read more

சண்டை; மன்னிப்பு; சமாதானம்; முடிவுக்கு வந்தது உதவி இயக்குநரை அறைந்த விவகாரம்!

கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் `கண்ட நாள் முதல்’. அருண், நவீன் என இரண்டு ஹீரோக்கள் நடித்திருக்கும் இந்தத் தொடரின் ஷூட்டிங்கில் நவீனுக்கும் உதவி இயக்குநர் குலசேகரனுக்கும் இடையில் வாக்குவாதத்தில் குலசேகரனை நவீன் அறைந்த சம்பவத்தில் தற்போது இருதரப்பும் சமாதானமாகி உள்ளனர். சமாதானத்துக்கு உதவி புரிந்த சின்னத்திரை இயக்குநர் சங்கத் தலைவர் தளபதியிடம் பேசிய போது, ‘’படப்பிடிப்பில் எங்களது உறுப்பினர் தாக்கப்பட்டது குறித்து எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்த எங்களது சக உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு நன்றி … Read more

ஆதார், வாக்காளர் அட்டை நகல் வழங்க அவசியம் இல்லை; வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைக்க ‘6பி’ படிவம் போதும்: தலைமை தேர்தல் அதிகாரி

சென்னை: வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைப்புக்காக ‘6பி’ படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். ஆதார், வாக்காளர் அட்டை யின் நகல்களை அளிக்க வேண்டியது இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரிசெய்யும் நோக்கில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவு இருப்பதால், ஆதார் எண்ணை கட்டாயம் தரவேண்டும் என்று அறிவுறுத்தாவிட்டாலும், வாக்காளர் … Read more

அக்னிபாதை திட்டத்துக்கு எதிரான மனு – மத்திய அரசு பதிலளிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. முப்படைகளில் 17.5 வயது முதல் 21 வரையிலானவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நான்கு ஆண்டுகள் பணிபுரியும் அக்னிபாதை திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூன் 14-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் வேலைக்கு தேர்வு செய்யப்படுவோரில் 25 சதவீதம் பேர் மேலும் 15 ஆண்டுகளுக்கு பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. … Read more

தேர்தலின் போது மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி10,000 டாலர் கல்வி கடன் தள்ளுபடி – ஜோ பைடன் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலின் போது மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, அவர்கள் வாங்கிய கல்விக் கடனில் 10,000 டாலரை தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை அதிபர் ஜோ பைடன் வெளியிட்டார். அமெரிக்காவில் படிக்கும் லட்சக்கணக்கான கல்லூரி மாணவர்கள் கல்விக் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாமல் தவித்துவருகின்றனர். கரோனா பெருந்தொற்று காரணமாக அவர்களால் கல்விக் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. கடந்த 2020-ம் ஆண்டில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில், மாணவர்களுக்கு கல்விக் கடனில் சலுகை வழங்குவேன் … Read more

உறவினர் மகளை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனுக்கு பத்தாண்டு சிறை தண்டனை

கடலூர்: மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம்  தீர்ப்பளித்தது. உறவினரே 15 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் கடலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது. சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த அந்த நபர், தன்னைப் பற்றி யாரிடாமவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி இருக்கிறார். ஆனால், அச்சத்தில் மாணவி பெற்றோரிடம் விஷயத்தை சொன்னதால் குற்றவாளிக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை கிடைத்திருக்கிறது. இது போன்ற … Read more

சீனாவை எதிர்கொள்ள தயாரான தைவான்…பலமடங்கு உயர்வுடன் வெளியான பாதுகாப்பு பட்ஜெட்!

தைவானின் பாதுகாப்பு இராணுவ செலவினங்களில் 14 சதவிகிதம் உயர்வு. 2022ம் ஆண்டில் 980 சீன போர் விமானங்கள் தைவான் வான்பரப்பில் அத்துமீறல். சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் 2023-ம் ஆண்டுக்கான பாதுகாப்பு இராணுவ செலவினங்களில் 14 சதவிகிதம், ஆண்டுக்கு ஆண்டு 19 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரிப்பதற்கான திட்டங்களை தைவான் அறிவித்துள்ளது. தைவானை சீனா தனது இறையாண்மை பிரதேசமாக அறிவித்து வரும் நிலையில், தைவானோ தன்னை சுகந்திர பிரதேசமாக தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் … Read more

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கன மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கன மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளி மண் டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி, திருப்பத்துார், வேலுார் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ய்புள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டமாக காணப்படும் … Read more

7-வது வார்டு நேரு பஜார் பகுதி கழிவுநீர் கால்வாய்களில் உற்பத்தியாகும் கொசுக்கள்; மருந்து அடிக்க வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை போரூராட்சியில் உள்ள 7வது வார்டான நேரு பஜார் பகுதியில், உற்பத்தியாகும் கொசுக்களால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த மருந்து அடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் அம்பேத்கர் நகர், சிட்ரபாக்கம், ரெட்டி தெரு, செட்டி தெரு, சாவடி தெரு, கலைஞர் தெரு, சிவன் கோயில் தெரு, நேரு பஜார், திருவள்ளூர் சாலை, அண்ணா நகர், நாகலாபுரம் சாலை, சத்தியவேடு சாலை, கால்வாய் கரை என 15 வார்டுகள் … Read more

6-9ம் வகுப்புக்கு சிறார் திரைப்படங்கள் வெளியிட வழிகாட்டுதல் வெளியீடு

சென்னை: அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் திரையிட புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. திரைப்படத்துக்கென ஒதுக்கப்பட்ட பாட வேளைகளில் மட்டுமே சிறார் படங்களை திரையிட வேண்டும். சிறார் படங்களை திரையிடும் முன்பும், பின்னரும் அது குறித்து மாணவர்களிடம் ஆசிரியர்கள் கலந்துரையாட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.