விவசாய நிலங்களை சேதப்படுத்தி கொடைக்கானலில் ஒற்றை யானை அட்டகாசம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் தொடந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் ஒற்றை யானையை விரட்ட வேண்டுமென பொதுமக்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் பாரதி அண்ணா நகர், பேத்துப்பாறை, அஞ்சு வீடு உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்கள் உள்ளன. மலைப்பகுதியில் வன விலங்குகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் ஒற்றை யானை நடமாட்டமும் அதிகரித்துள்ளது. மேலும், வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் இந்த யானை, காட்டெருமை, … Read more

Happy street நிகழ்ச்சியை முன்னிட்டு, துரைப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: Happy street நிகழ்ச்சியை முன்னிட்டு, துரைப்பாக்கம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். ராஜிவ்காந்தி சாலை, துரைப்பாக்கம் சாலை சிக்னல் சந்திப்பில் இருந்து கார்ப்பரேசன் சாலை சந்திப்பு சிக்னல் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அனைத்து இலகு ரக வாகனங்கள் துரைப்பாக்கம் சிக்னல் சந்திப்பில் இருந்து இடதுபுறமாக திரும்பி செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் முதல்வரின் உதவியாளர் வீட்டில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் பறிமுதல்: 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வரின் உதவியாளர் வீட்டில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சுங்கச்சாவடி ஒதுக்கீட்டில் ஊழல் செய்ததாக எழுந்த புகாரை தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளரான ராஞ்சியை சேர்ந்த தொழிலதிபர் பிரேம் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 11 இடங்களில் ஒன்றிய அமலாக்க துறையினர் அண்மையில் அதிரடி சோதனை நடத்தினர். அவர்கள், முக்கிய ஆவணங்களை தேடி சென்றனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு … Read more

`கலப்பு திருமணம் செய்ததற்காக ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதா?’ – நீதிமன்றத்தில் கிடைத்த நீதி!

புதுக்கோட்டை, பொன்னமராவதி நல்லூர் கிராமத்தில் கலப்புத் திருமணம் செய்த 25 குடும்பங்களிடமிருந்து தலைக்கட்டு வரி வசூல் செய்யவும், திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்க கோரியும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த வேலு என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது கிராமத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் குறிப்பிட்ட சமூகத்தை (பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் ஒரு பிரிவு) சேர்ந்தவர்கள். நல்லூர் கிராமத்தின் தலைவர்களாக (அதே சமூகத்தை சேர்ந்த) பிச்சன், சொக்கலிங்கம், பெருமாள் ஆகியோர் உள்ளனர். நான் மாற்று (பிற்படுத்தப்பட்ட) … Read more

பாலியல் வன்கொடுமையால் பிறந்த மகனாலேயே 28 ஆண்டுக்கு பிறகு தாய்க்கு கிடைத்த நீதி!

சிறுமியாக இருந்தபோது பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு அதனால் பிறந்த மகனாலேயே 28 வருடங்களுக்குப் பிறகு அப்பெண்ணுக்கு நீதி கிடைத்த நெகிழ்ச்சி சம்பவம் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம், ஷாஜகான்பூரின் சர்தார் பஜார் பகுதியை சேர்ந்த பெண், கடந்த 1994ம் ஆண்டு அவரது 12 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். உறவினர் வீட்டில் வசித்து வந்த அந்த சிறுமியை, வீட்டில் தனியாக இருக்கும் சமயத்தில் முகமது ரஜி என்ற குட்டு ஹாசன் மற்றும் நாக்கி ஹாசன் என்ற இரு … Read more

தற்காப்பு கலை கற்கும் சமந்தா

சாகுந்தலம், யசோதா ஆகிய படங்களில் நடித்துள்ளார் சமந்தா. இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன. ‛தி பேமிலிமேன்' வெப்சீரிஸ் மூலம் ஹிந்தியிலும் பிரபலமான சமந்தா தற்போது ஹிந்தியில் மீண்டும் ஒரு வெப்சீரிஸில் நடிக்கிறார். ராஜ் டிகே இயக்க, வருண் தவான் நாயகனாக நடிக்கிறார். இந்த சீரிஸில் சமந்தாவிற்கு ஆக் ஷன் காட்சிகள் உள்ளன. இதனால் தற்காப்பு கலைக்கான பயிற்சியினை சமந்தா தற்போது மேற்கொண்டு வருகிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

விஜய்யுடன் 3 வது முறையாக கைகோர்க்கும் ஜானி மாஸ்டர்…எந்த படத்தில் தெரியுமா ?

சென்னை : விஜய் தற்போது டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் வாரிசு படத்தின் பிஸியாக நடித்து வருகிறார். விஜய்யின் 66 வது படமான இந்த படத்தின் மூலம் விஜய் தெலுங்கிலும் என்ட்ரி கொடுக்க உள்ளார். வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஃபிலிம்ஸ் பேனரில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறது. செப்டம்பர் மாதத்துடன் இந்த படத்தின் ஷுட்டிங் நிறைவடைய … Read more

IMF-ல் முக்கியப் பதவி.. முன்னாள் CEA சுப்ரமணியன்-க்கு அடித்த ஜாக்பாட்..!

நரேந்திர மோடி அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர்-ஆக இருந்த கிருஷ்ணமூர்த்திச் சுப்ரமணியன் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழுவில் இந்தியாவுக்கான நிர்வாக இயக்குநராக வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். இந்தியன் ஸ்கூல் ஆஃ பிசினஸில் பேராசிரியராகவும் (நிதி) இருக்கும் சுப்ரமணியன், சிறந்த பொருளாதார நிபுணரும் கட்டுரையாளருமான சுர்ஜித் எஸ் பல்லா-வுக்குப் பின் நியமிக்கப்பட உள்ளார். கிருஷ்ணமூர்த்திச் சுப்ரமணியன் இந்திய பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் பகுதிநேர உறுப்பினராகவும் (EAC-PM) பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Cyber Attack: … Read more

‘திருக்குறள் மொழிபெயர்ப்பில் பக்தி கண்ணோட்டம் நீக்கப்பட்டுள்ளது’ – ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

டெல்லித் தமிழ்க் கல்விக்கழக மேனிலைப்பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் திருவுருவச் சிலையை திறந்து வைத்துப் பேசிய, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ஜி.யு. போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பில் பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டுள்ளது என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள தமிழ் கல்விக்கழகம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தரை அடி உயரமும், ஆயிரத்து 500 கிலோ எடையும் கொண்ட இந்த திருவள்ளுவர் சிலையை, வி.ஜி.பி. உலக தமிழ் சங்கத்தின் தலைவர் … Read more

வறுமையிலும் நேர்மை வேண்டும்! |My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் “திருடாதே பாப்பா திருடாதே” என்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய வரிகள் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்கும் ஒன்று. அதே கருத்தை வலியுறுத்தும் இலக்கியம் மற்றும் சினிமா குறித்த கட்டுரை இது. குழந்தைகள் நலனில் அதிக அக்கறை கொண்டவர் எழுத்தாளர் ராம்தங்கம். அவர் எழுதிய … Read more