தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் ஒரு நம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை.!

தமிழகத்தில் லாட்டரி டிக்கெட் விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், வாட்ஸ் அப் மூலம் ஆட்களை ஒருங்கிணைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்யும் கும்பல்களிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க தமிழக காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி அசாம், கேரளா போன்ற மாநிலங்களில் விற்பனையாகிறது. அதனை ஆன்லைன் மூலம் வாங்கும் கும்பல், ஈரோடு, நாமக்கல், மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் கூலி தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை … Read more

கழிவுநீர்த் தொட்டிக்குள் மரணிக்கும் மனிதர்கள்: இந்திய அளவில் தமிழகம் 2-வது இடம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 1993-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 218 பேர் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும்போது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கும், கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கும் மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என்று தொடர்ந்து கூறி வந்தாலும், நாடு முழுவதுமே ஏதோ ஒரு பகுதியில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துகொண்டே உள்ளன. தமிழகத்தில் இவ்வாறு மரணம் ஏற்பட்டால் வழக்குப் பதிவு செய்து, இழப்பீடு வழங்கப்பட்டாலும், மறுபுறம் … Read more

கல்விக் கட்டணம் செலுத்தாத காரணத்தால் ஒடிசாவில் மாணவர்களை நூலகத்தில் பூட்டி வைத்த பள்ளி

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பயிலும் சிலமாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. கட்டணம் செலுத்தாத 3 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் 34 மாணவர்களை கடந்த 22-ம் தேதி பள்ளி நிர்வாகம் நூலகத்தில் வைத்து பூட்டியதாகக் கூறப்படுகிறது. காலை 9.30 முதல் மதியம் 2.30 மணி வரை மாணவர்கள் அறைக்குள்ளேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் … Read more

உக்ரைனின் சுதந்திர தினத்தன்று ரஷ்யா தாக்குதல்: 22 பேர் பலி

கீவ்: உக்ரைனின் சுதந்திரத் தினமான நேற்று ரஷ்யா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 22 பேர் பலியாகினர். 31-வது உக்ரைன் சுதந்திர தின விழா நேற்று எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் அமைதியாக கொண்டாடப்பட்ட நிலையில், ரஷ்யா நடத்திய தாக்குதலால் உக்ரைன் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்தத் தாக்குதல் குறித்து கீவ் நகர் பாதுகாப்பு அதிகாரிகள் கூறும்போது, “நேற்று சுதந்திர தினத்தையொட்டி அணிவகுப்புகள் நடத்தப்பட்டன. அப்போது சாப்லின் நகரில் ரஷ்ய பாதுகாப்புப் படை இரண்டு முறை தாக்குதல் நடத்தியது. இதில் … Read more

அதிமுக அலுவலக வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் – தமிழக அரசு தகவல்!

சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ராயப்பேட்டையில் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அந்த சமயத்தில், ஓ.பன்னீா்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்கள் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையாக மாறியது. கட்சி அலுவலகத்தை உடைத்து உள்ளே சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள், கட்சி அலுவலகத்தை கைப்பற்றினர். இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினா் சீல் வைத்தனர். இதனை அகற்றக் கோரி ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனித்தனியே தாக்கல் … Read more

சி.வி சண்முகம் தாக்கல் செய்த மனு: வழக்குகள் சிபிசிஐடி-க்கு மாற்றம், விசாரணை தள்ளிவைப்பு

அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக பதிவான நான்கு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் தாக்கல் செய்திருந்த மனுவில், ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்குள் புகுந்த ஓ.பன்னீர்செல்வம்  மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக அளித்த புகாரில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் … Read more

பணப்பரிமாற்ற வழக்கில் இடைத்தரகர் பிரேம் பிரகாஷ் வீட்டில் சோதனையிட்ட போது சிக்கிய ல் ஏகே 47 துப்பாக்கிகள்!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுரங்க ஏலம் தொடர்பான பணப்பரிமாற்ற வழக்கில் இடைத்தரகர் பிரேம் பிரகாஷ் வீட்டில் சோதனையிட்ட போது ஏகே.47 துப்பாக்கிகளும் தோட்டாக்களும் சிக்கியுள்ளன. பிரேம் பிரகாஷின் வீடு உள்ளிட்ட 17 இடங்களில் பல மணி நேரம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.அங்கு பணியில் இருந்த காவலர்களுக்கு சட்டவிரோதமாக இந்த துப்பாக்கிகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இரு காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். Source link

பெகாஸஸ் விவகாரம்: நிபுணர் குழு  விசாரணை குழுவுக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என உச்சநீதிமன்றம் குற்றச்சாட்டு

டெல்லி: பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் குறித்து, உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுவினரின் விசாரணைக்கு மத்தியஅரசு ஒத்துழைக்கவில்லை என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என தலைமை நீதிபதி குற்றம் சாட்டியுள்ளார். மோடி தலைமையிலான பாஜக அரசு,  இஸ்ரேலை சோ்ந்த என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள முக்கிய தலைவர்கள், நீதிபதிகள்,  எதிா்க்கட்சியினா், சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட சுமாா் 300 பேரின் கைப்பேசிகள் உளவு பாா்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக … Read more

பெத்தநாயக்கன்பேட்டையில் புதிய பள்ளி கட்டவேண்டும்: பெற்றோர்கள், மாணவர்கள் கோரிக்கை

பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே கிளாம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பெத்தநாயக்கன்பேட்டை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இங்கு 1 முதல் 5  வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது இந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையின் ஓடுகள் பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சுக்கள் உதிர்ந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. … Read more

அதிமுக அலுவலக கலவரம், ஆவணங்கள் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

சென்னை : அதிமுக அலுவலக கலவரம், ஆவணங்கள் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.