“அரசு மருத்துவர்கள் இடமாற்றம், பதவி உயர்வில் முறைகேடு” – புகார்களை அடுக்கும் சட்டப் போராட்டக் குழு

சென்னை: “அரசு மருத்துவர்களுக்கான இடமாற்றம் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு நீதி கேட்டும், அரசாணை 354-ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்பட வலியுறுத்தியும், வரும் செப்.28-ம் தேதி குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்” என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவின் தலைவர் டாக்டர் பெருமாள் பிச்சை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: “தமிழகத்தில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்ற மருத்துவர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு … Read more

“2024 தேர்தலில் நாம் இணைந்து போராட வேண்டும்” – நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற முதல்வர் நிதிஷ் அழைப்பு

பாட்னா: பிஹார் மாநிலத்தின் புதிய மெகா கூட்டணி அரசு, சட்டப்பேரவையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. பிஹார் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்த முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து புதிய மெகா கூட்டணியை ஏற்படுத்தினார். இதையடுத்து பிஹார் முதல்வராக 8-வது முறையாக கடந்த 10-ம் தேதி நிதிஷ் குமார் பொறுப்பேற்றார். துணை முதல்வராக ராஷ்ட்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் பதவி ஏற்றார். அதன்பின் அமைச்சரவையில் … Read more

வைகோ 56: துரை வைகோ எடுக்கும் முக்கிய முன்னெடுப்பு!

வைகோ பொதுவாழ்வில் அடியெடுத்து 56 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அவர் குறித்த ஆவணப்படம் வெளியாக உள்ளது. தமிழ்நாட்டு அரசியலில் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் முக்கியமானவர் வைகோ. மாணவப் பருவத்திலேயே திராவிட இயக்க அரசியலில் ஈர்க்கப்பட்டு களத்துக்கு வந்தவர். திமுகவில் இருந்தபோதும் மதிமுகவை தொடங்கிய பின்னரும் தமிழ்நாட்டு நலனுக்காக, தமிழ் ஈழ மக்கள் நலனுக்காக தொடர்ந்து பேசி வருகிறார். மேடைகளில் கருப்பு துண்டை சரி செய்துகொண்டே அவர் பேசும் பேச்சுக்கு கட்சி தாண்டியும் ரசிகர்கள் இருக்கின்றனர். வயது முதிர்ச்சி காரணமாக … Read more

பிளைட்ல இருந்து சி.எம் ஓவர்… ஓவர்… வெள்ளத்துல மக்களும் ஓவர்… ஓவர்- ம.பி அட்ராசிட்டி!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 30 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் மழையால் பல மாநிலங்கள் வெள்ளக் காடாகின. பல ஆயிரம் பேர் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர். லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கின. வெள்ள நீர் சூழ்ந்து கொண்டதால் வீடுகளை விட்டு வெளியேறவும், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமலும் தவித்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விமானத்தில் சென்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பார்வையிட்டார். உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை … Read more

Online Game Addiction: ஆன்லைன் கேம் மோகம், தந்தையின் மரணத்திற்கு காரணமான 12 வயது சிறுவன்!

உலகம் முழுவதிலும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பணம் கட்டி விளையாட கூடிய ஆன்லைன் விளையாட்டுகள் அதிகரித்த பின்னர் அதற்காக தற்கொலை செய்து கொள்வதும் பிறரை கொலை செய்வதும் கூட தற்போது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. சீனாவை சேர்ந்த ஹுவாங் ஜெங்சியாங் என்ற கட்டுமான தொழிலாளி சமீப காலமாக மூளையில் புற்றுநோய் ஏற்பட்டு அதனால் அவதி பட்டு வந்தார். இவருக்கு 12 வயதில் ஒரு மகனும், 15 வயதில் … Read more

இலங்கையில் மீண்டும் எரிபொருள் வரிசைகள்! மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு இருப்பும் இல்லை என இலங்கை பெட்ரோலிய தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி.சாந்த சில்வா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மீண்டும் வரிசைகள் இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மீண்டும் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன. … Read more

RBI: கார்டு தொடர்பான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் அனைத்தும் அக்டோபரில் இருந்து கட்டாயம்

புதுடெல்லி: டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் அனைத்தும் அக்டோபர் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வர வேண்டும் என்று கார்டு நிறுவனங்களுக்கு மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, இது தொடர்பான விதிகளை உருவாக்கிய இந்திய ரிசர்வ் வங்கி, கார்டு நிறுவனங்கள் அனைத்தும், விதிமுறைகளை ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. எனினும், சில விதிமுறைகளை அமல்படுத்த கூடுதல் கால அவகாசம் வேண்டும் என … Read more

அவர் அடிச்ச 10 பேருமே டான்தான்…! – பீனிக்ஸ் மனிதர் விஜயகாந்த் பிறந்த நாள்!

சினிமா வருகை! புரட்சிக் கலைஞர், கேப்டன், கறுப்பு எம்.ஜி.ஆர் என பலவிதப் பெயர்களில் ரசிகர்களாலும் தொண்டர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜயகாந்த். வெற்றிகரமான நடிகர் மட்டுமல்லாது வெற்றிகரமான அரசியல்வாதி எனவும் பெயர் எடுத்த விஜயகாந்துக்கு இந்த இடம் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. கிராமத்திலிருந்து சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த பலருள் ஒருவர்தான் விஜயகாந்த். ஆரம்பத்தில் வில்லனாக சின்ன ரோல்களில் நடித்துக்கொண்டிருந்த விஜயகாந்த் தூரத்து இடி முழக்கம் எனும் படத்தில்தான் கதாநாயகனாக நடித்தார். சினிமாவில் சாதனை அவர் நடித்த … Read more

எப்புடிலாம் யோசிக்குறாய்ங்க… திருமண அழைப்பிதழில் தெறிக்கவிட்ட மதுரை மாப்பிள்ளை!

ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் திருமணம் என்பது முக்கியமான ஒரு நிகழ்வு, ஆண்-பெண் இருவரும் ஒரு உன்னதமான பந்தத்தில் இணைந்து அடுத்த சந்ததியை உருவாக்க நடத்தப்படும் இந்த திருமண நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.  ஒவ்வொருவருக்கும் திருமணம் பற்றிய கனவு இருக்கும், நமது திருமணம் எங்கே நடக்க வேண்டும், எப்படி நடக்க வேண்டும் என்று இளமை பருவத்திலிருந்தே ஒரு திட்டத்தை வைத்திருப்பார்கள்.  அதிலும் திருமணம் நிச்சயமாகிவிட்ட நாளிலிருந்தே மணமகனும் சரி, மணமகளும் சரி தங்களது திருமணத்தில் தங்களுக்கு பிடித்தமாதிரி என்னவெல்லாம் … Read more

Rajinikanth ட்விட்டரில் பின்தொடரும் பிரபலங்கள் இவர்கள்தான்!

இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாத நபர்கள் மிகக்குறைவு. அந்த வகையில் சினிமா நட்சத்திரங்களும் தங்களது படங்கள் குறித்தும் பர்சனலான விஷயங்கள் குறித்தும் ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக பேஸ்புக் மற்றும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இணைந்து, அவர்கள் குறித்த தகவல்களை ரசிகர்ளுடன் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த்தும் கடந்த 2013 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ட்விட்டரில் இணைந்தார். ரஜினிகாந்த் ட்விட்டரில் இணைந்ததும் அவரைப் பலரும் ஃபாலோ செய்யத் தொடங்கினர். அந்தவகையில் ரஜினியை தற்போது … Read more