உக்ரைனை விட்டு வெளியே போங்கள்… ரஷ்யாவுக்கு சுவிட்சர்லாந்து கடும் கண்டனம்

உக்ரைனை ஊடுருவியுள்ள ரஷ்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சுவிட்சர்லாந்து, உடனடியாக ரஷ்யப் படைகள் உக்ரைனிலிருந்து வெளியேறவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. சுவிஸ் வெளியுறவு அமைச்சரான Ignazio Cassis வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், ரஷ்யாவின் உக்ரைன் ஊடுருவலைக் கடுமையான வார்த்தைகளால் கடுமையாக கண்டித்துள்ளார். உக்ரைனின் பிராந்திய ஒற்றுமையும் இறையாண்மையும் உடனடியாக முந்தைய நிலைமைக்குத் திரும்பவேண்டும் என்று கூறியுள்ள Cassis, ரஷ்யா கைப்பற்றிய கிரீமியா முதலான பகுதிகளிலிருந்தும் அந்நாடு வெளியேற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். நடுநிலை நாடு என அறியப்படும் சுவிட்சர்லாந்து, முதலில் … Read more

70வது பிறந்தநாள்: தொண்டர்களை பார்த்து கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயகாந்த்

சென்னை:  தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், இன்று தனது 70வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி னார். இதையடுத்து, அவர் தனக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த தொண்டர்களை பார்த்து கை அசைத்து நன்றி தெரிவித்தார். தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். விஜயகாந்த் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, … Read more

லோடு ஆட்டோவில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ராணிப்பேட்டை:  ராணிப்பேட்டை ஆட்டோ நகரில், முக்கியம்மன்கோயில் அருகே நேற்று ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் வாலாஜா வட்ட வழங்கல் அலுவலர் ராஜ லட்சுமி, ராணிப்பேட்டை வருவாய் ஆய்வாளர் தியாகராஜன், தனி வருவாய் ஆய்வாளர் ஆர்.பாஸ்கரன் ஆகியோருடன் திடீர் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1,085 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து லோடு ஆட்டோவுடன் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி வாலாஜா … Read more

புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே சாதிமறுப்பு திருமணம் செய்த 25 குடும்பத்தினர் திருவிழாவில் பங்கேற்க அனுமதி

மதுரை: புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே சாதிமறுப்பு திருமணம் செய்த 25 குடும்பத்தினர் திருவிழாவில் பங்கேற்க நடவடிக்கை தேவை என ஐகோர்ட் கிளை நீதிபதி உத்தரவிட்டார். மேலும், 25 குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் தலைக்கட்டு வரி வசூல் செய்து திருவிழாவில் பங்கேற்க நீதிமன்றம் அனுமதியளித்தது.

சுரங்க துறையில் முறைகேடு வழக்கு: ஜார்கண்ட் முதல்வர் பதவி பறிபோகிறது?

ராஞ்சி: ஜார்கண்ட் முதல்வரின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டுள்ளதால் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூனில் ஜார்க்கண்ட் சுரங்க துறை சார்பில் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அவர், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சுரங்க ஒதுக்கீட்டை பெற்றிருப்பதாக பாஜ குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக அக்கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்று கொண்டுள்ளனர். இதனிடையே, மக்கள் பிரதிநிதித்துவ … Read more

மின்சாரம் தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு… உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு

மின்சாரம் தாக்கி நெல்லை கல்லூரி மாணவரும், அவரது தந்தையும் இறந்த விவகாரத்தில் அவர்களது குடும்பத்திற்கு 26 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மின்சாரம் தாக்கி தனது தந்தையும் சகோதரரும் உயிரிழந்த நிலையில், இழப்பீடாக தலா 20 லட்சம் வழங்கக்கோரி முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் “திருநெல்வேலி மாவட்டம் களக்காடு கிராமத்தில் உள்ள எங்களது நிலத்தில் விவசாயம் செய்வதற்காக சென்றபோது, மின் கம்பி அறுந்து வேலியில் தொங்கியிருக்கிறது. இதை … Read more

வேன் மீது லாரி மோதி கோர விபத்து: குழந்தைகள் உள்பட 9பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடக மாநிலம் ராயச்சூரு மாவட்டத்திலிருந்து  குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என கூலித் தொழிலாளர்கள் 24 பேர் வேனில்  கூலி வேலை செய்வதற்காக பெங்களூருக்கு நேற்று இரவு புறப்பட்டுச் சென்றுள்ளனர். வேன் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் ஷிரா தாலுகா காலம்பெல்லா என்ற பகுதியில், … Read more

பாகிஸ்தான் ரூ.30,000 கொடுத்தாங்க.. இந்திய ராணுவத்தினரை தாக்க வந்தோம்.. பிடிபட்ட தீவிரவாதி வாக்குமூலம்

India oi-Jackson Singh ஸ்ரீநகர்: இந்தியாவில் பயங்கர தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பு அனுப்பி வைத்த தீவிரவாதியை நமது ராணுவத்தினர் சுட்டுப் பிடித்துள்ளனர். இதில் அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதலாக தீவிரவாதிகள் மூலம் இந்தியாவுக்கு அதிக குடைச்சலை பாகிஸ்தான் தந்துக் கொண்டிருந்தது. இதன் உச்சக்கட்டமாக, கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காஷ்மீருக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள் உரி ராணுவத் தளத்தில் பயங்கர தாக்குதலை நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த … Read more

பாட்டியின் பிணத்துடன் பேரன், பேத்திகள் காட்டிய சிரிப்பு போஸ்: கேரளாவில் சர்ச்சை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் திருவனந்தபுரம்: கேரளாவில் இறந்துபோன 95 வயது பாட்டியின் உடலோடு ஒரு குடும்பமே சிரித்த முகத்துடன் குழுவாக புகைப்படம் எடுத்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மல்லப்பள்ளியைச் சேர்ந்தது பனவெலில் குடும்பம். அந்த குடும்பத்தில் மூத்தவரான 95 வயது மூதாட்டி மரியம்மா வர்கீஸ் கடந்த வாரம் இறந்துபோனார். இவரது கணவரான கிறிஸ்தவ மதபோதகர் வர்கீஸ் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டார். இவர்களுக்கு 9 குழந்தைகள், 19 பேரக்குழந்தைகள். அனைவரும் உலகின் பல்வேறு … Read more

பெண் வேடத்தில் நவாசுதீன் சித்திக் : அசர வைக்கும் ஹட்டி போஸ்டர்

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ஆனந்திதா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நவாசுதீன் சித்திக் நடிக்கும் பாலிவுட் படம் 'ஹட்டி'. இப்படத்தை அக்ஷத் அக்சத், அஜய் சர்மா இயக்குகிறார்கள். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் நவாசுதீன் சித்திக் பெண் வேடத்தில் இருக்கிறார். இந்த படத்தில் அவர் பெண் தாதாவாக நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது அவரது தோற்றம் வைரலாக பரவி வருகிறது. இந்த தோற்றத்தை வெளியிட்டு நவாசுதீன் சித்திக் கூறியிருப்பதாவது: நான் வித்தியாசமான சுவாரஸ்யமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் … Read more