அடி மேல் அடி வாங்கும் பாகிஸ்தான்.. இது போறாத காலம்.. என்ன செய்ய போகிறது?

அடுத்த இலங்கையாக பாகிஸ்தான் மாறலாமோ? என நிபுணர்கள் பலரும் எச்சரித்து வருகின்றனர். எனினும் எப்படியேனும் மீண்டு விட மாட்டோமா? என பல வகையிலும் துரிதமாக செயல்பட்டு வரும் பாகிஸ்தானுக்கு உதவ சமீபத்தில் தான் பல நாடுகளும் முன் வந்தன. அப்பாடா ஏதோ கொஞ்ச தூரத்தில் வெளிச்சம் தெரிகிறேதே என எட்டி பார்க்க ஆரம்பித்த பாகிஸ்தானுக்கு, மீண்டும் வெள்ளம் மூலம் பெரிய தடுப்பு போடப்பட்டுள்ளது. இதிலிருந்து எப்படி மீண்டு வருமோ என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. பாகிஸ்தானில் வரலாறு … Read more

கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் முடிவுக்கு வரும்

நாட்டில் நிலவும் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் முடிவுக்கு வரும் என நம்புவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். கோதுமை மாவுக்கான தீர்வாக துருக்கியில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் உரையாற்றியபோது சைக்கிளில் சுற்றி வந்த குழந்தை

சிலி நாட்டில் புதிய அரசியலமைப்பை ஆதரித்து வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்து அதிபர் கேப்ரியல் போரிக் உரையாற்றினார். அவர் ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்தபோது, சூப்பர்மேன் உடையணிந்த சிறுவன் ஒருவன் தனது சைக்கிளில் அவரை சுற்றி சுற்றி வந்தான்.  சைக்கிளில் அவரை சுற்றி வந்த சிறுவன், பின்பு சைக்கிளை நிறுத்திவிட்டு அவரது பேச்சை சிறிது நேரம் கேட்டு விட்டு மீண்டும் அவரை சுற்றி வருவது போல் இந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோவை ட்விட்டரில் 1.33 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.  … Read more

நாமக்கல்: தனியார் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு.!

நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் வேப்பநந்தம்புதூர் பகுதியை சேர்ந்தவர் தச்சு தொழிலாளி பொன்னுசாமி (வயது 59). இவரது மனைவி காமாட்சி. இவர்களுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் பொன்னுசாமி நேற்று பி.மேட்டூரில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு, இரவு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆண்டகளூர் கேட் அருகே வந்தபோது, பின்னால் வந்த தனியார் பேருந்து … Read more

பட்டியலினச் சிறுவனைத் தாக்கி, தலையை தரையில் தேய்த்த ஆசிரியர்! – விசாரணையில் உ.பி காவல்துறை

உத்தரப்பிரதேச மாநிலம், பதோஹி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஏழு வயது பட்டியலின மாணவனை பள்ளியின் ஆசிரியர் தாக்கி, சிறுவனின் தலையைத் தரையில் தேய்த்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பதோஹி மாவட்டத்தின், கியோரௌனா பகுதியில் உள்ள கங்காபூர் தாலியா கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் பட்டியலின சிறுவன், பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அந்த வழியே கடந்து போன ​​பள்ளியின் ஆசிரியர் ஒருவர் அந்த சிறுவனைக் … Read more

அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம், வரும் 15ஆம் தேதி மதுரையில் துவக்கம்

காலை சிற்றுண்டி திட்டம் – 15ந் தேதி துவக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார் அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம், வரும் 15ஆம் தேதி மதுரையில் துவக்கப்பட உள்ளதாக தகவல் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான காலை சிற்றுண்டி திட்டத்தை, செப்.15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார் Source link

சுத்துது… சுத்துது… சுத்திக்கிட்டே இருக்கு – பத்திரப்பதிவு துறையில் தொடரும் சர்வர் பிரச்சினை

தமிழகம் முழுவதும் தொடரும் சர்வர் பிரச்சினையால் பத்திரப்பதிவு தாமதமாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் மாநில அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் முக்கிய துறை பத்திரப்பதிவு துறையாகும். இத்துறையில் வீட்டுமனை விற்பனை பதிவு, விவசாய நிலம் விற்பனை பதிவு, திருமண பதிவு, வில்லங்க சான்றிதழ் விண்ணப்பம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆன்லைன் வழியாக நடைபெறுகின்றன. பத்திரப்பதிவு துறையில் பதிவுக்காக பயன்படுத்தப்படும் சர்வரின் வேகம் கடந்த சில நாட்களாக குறைந்துள்ளது. பதிவுத்துறை சர்வருக்குள் நுழைந்தால் அடுத்தடுத்து பக்கங்களுக்குள் … Read more

பிரதமர் பதவி மீது ஆசை இல்லை: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் திட்டவட்டம்

புதுடெல்லி: பிரதமர் பதவியின் மீது தனக்கு எந்தவித ஆசையும் இல்லை என பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் திட்டவட்டமாக தெரிவித்தார். புதுடெல்லியில் இடதுசாரி கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரியை நேற்று சந்தித்து பேச்சு நடத்திய நிதிஷ் குமார் மேலும் கூறியது: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப் பதற்காகவே டெல்லி வந்துள்ளேன். 2024-ல் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற் கான ஆதரவை திரட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவே டெல்லி வந்துள்ளதாக கூறப்படுவது தவறான செய்தியாகும். பிரதமர் பதவிக்கு உரிமை … Read more

தட்டி தூக்க போகும் ஓபிஎஸ்; தரமான சம்பவம் காத்திருக்கு!

அதிமுக தலைமை பதவியை பிடிப்பதில், மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இதுவரை இலைமறை காயாக இருந்து வந்த பனிப்போர் மோதலாக வெடித்துள்ளது. இந்த மோதல் விவகாரம், உச்சநீதி மன்றம் வரை சென்று உள்ளது. இந்த சட்ட போராட்டத்தில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது புரியாத புதிராக உள்ளதால், எந்த பக்கம் சாய்வது? என தெரியாமல் தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏற்கனவே கீழமை நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ்சுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியான நிலையில் … Read more

Delhi Firecrackers Ban: ஜனவரி 1 வரை பட்டாசு விற்க, வெடிக்க தடை: டெல்லி அரசு அதிரடி!

டெல்லியில், வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி வரை, பட்டாசு விற்பனை, வெடிக்க மற்றும் சேமித்து வைக்க அம்மாநில அரசு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலைநகரான டெல்லியில், எப்போதும் காற்று மாசு அதிகரித்து காணப்படும். டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மற்றும் தேவையற்ற பயிர்களை, விவசாயிகள் … Read more