புதிய அமைச்சரவையை அமைக்கும்படி லிஸ் ட்ரஸ்ஸைக் கேட்டுக்கொண்ட பிரித்தானிய மகாராணியார்: வெளியான புகைப்படங்கள்

கன்சர்வேட்டிவ் கட்சியினரால் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள லிஸ் ட்ரஸ் நேற்று மதியம் பிரித்தானிய மகாராணியாரைச் சென்று சந்தித்தார். புதிய அமைச்சரவையை அமைக்கும்படி லிஸ் ட்ரஸ்ஸைக் மகாராணியார் கேட்டுக்கொண்டார். பிரித்தானியாவில் புதிய அரசு பொறுப்பேற்கும்போது, புதிதாக பிரதமராக தெர்ந்தெடுக்கப்பட்டவர் முதலில் பிரித்தானிய மகாராணியாரை சந்திப்பார். பிரதமரின் கைகளில் மகாராணியாரும், மகாராணியாரின் கைகளில் பிரதமரும் முத்தமிடுவார்கள். இது பிரித்தானிய மரபு. மகாராணியார் புதிய அமைச்சரவையை அமைக்கும்படி பிரதமரைக் கேட்டுக்கொள்வார். பிரதமரும் அதை ஏற்றுக்கொள்வார். அதன் பின்னரே, பிரதமர் இல்லம் முன்பு … Read more

5வது ஆண்டாக நீட்டிப்பு: டெல்லியில் 2023 ஜனவரி 1 வரை பட்டாசு விற்பனை வெடிக்க தடை!

டெல்லி: தலைநகர் டெல்லியில் தொடர்ந்து 5வது ஆண்டாக பட்டாசு வெடிக்க கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு தடை விதித்துள்ளது. 2023 ஜனவரி 1 வரை பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக, உச்சநீதிமன்றம் பட்டாசு வெடிக்க பல்வேறு தடைகளை போட்டுள்ளது. மேலும், பசுமை பட்டாசு மட்டுமே தயாரிக்க வேண்டும் என வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அறிவித்து உள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிகமோசமாக உள்ளதால், அங்கு தீபாவளி பண்டிகைக்குகூட பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும், தடை … Read more

கேரளாவில் நாளை மகாபலி மன்னனை வரவேற்கும் திருவோணம்

கூடலூர் : கேரளாவில் ஓணம் பண்டிகை ஜாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுகிறது. மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்க மாதத்தில், பருவ மழைக்காலம் முடிந்ததும் கொண்டாடப்படும் ஓணத்தை அறுவடைத்திருநாள் என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி சித்திரை, சோதி, விசாகம், அனிஷம், திரிக்கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம், திருவேணம் என 10 நாட்கள் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் ஓணம் பண்டிகை கடந்த 29.08.22 அன்று … Read more

காலை சிற்றுண்டி திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப். 15-ல் மதுரையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : காலை சிற்றுண்டி திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் பயிலும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்த உள்ளது.  

கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடரும் கனமழை!: பல இடங்களில் நிலச்சரிவு.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோழிக்கோடு அருகே மலையின் ஒரு பகுதி சரிந்து விழும் பரபரப்பு காட்சி வெளியாகியுள்ளது. பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டையம், கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மரிப்புழா மலைப்பகுதியில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டியது. இதனால் மலையின் ஒருபகுதியை … Read more

சென்னையில் நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் ரூ.33.57 கோடிக்கு எல்இடி விளக்கு அமைக்கும் பணி!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் ரூ.33.57 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 5,594 புதிய தெருவிளக்கு மின்கம்பங்கள் மற்றும் 85 உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட தெரு விளக்குகள் விடுபட்ட பகுதிகள், காவல்துறை சார்பாக பரிந்துரைக்கப்பட்ட இடங்கள் மற்றும் போதிய வெளிச்சம் இல்லாத பகுதிகளில் புதிய தெருவிளக்கு மின்கம்பங்கள் இறுதி செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.  மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மண்டலங்களான திருவொற்றியூர் மணலி அம்பத்தூர் மாதவரம் வளசரவாக்கம் சோளிங்கநல்லூர் … Read more

அனிதா ராதாகிருஷ்ணன் செல்வாரா? திருமாவளவன் ஏற்றுக் கொள்வாரா? கனிமொழிதான் சொன்னாங்க.. பாஜக பொளேர்

Tamilnadu oi-Vishnupriya R திருச்செந்தூர்: திராவிட மாடல் ஆட்சி என்றால் லஞ்சம், ஊழல் இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என பாஜக மாநில துணைத் தலைவர் திருப்பதி நாராயணன் குற்றச்சாட்டியுள்ளார். பாஜக மாநிலத் துணைத் தலைவர் திருப்பதி நாராயணன் திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட தற்காலிக மார்க்கெட் அமைய உள்ள இடத்தையும், புதியதாக மார்க்கெட் கட்டப்படுவதையும் பார்வையிட்ட பிறகு வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்: ராகுல் காந்தி இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொள்வதால், … Read more

போலி நன்கொடை பெற்ற கட்சிகள்: வருமான வரித்துறை ரெய்டு!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: போலியாக நன்கொடை மற்றும் வரி மோசடி தொடர்பாக அரசியல் கட்சிகளை குறிவைத்து நாடு முழுவதும் பல மாநிலங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 12க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நடக்கும் சோதனை நடந்த நிலையில், அரசியல் கட்சிகள், உரிய விதிகளை பின்பற்றாமல், நன்கொடையை பெற்றுக்கொண்டு வரி மோசடியில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. சட்ட விதிகளை பின்பற்றாமல் வருமான வரி விலக்கு கோரிய அரசியல் கட்சிகள் … Read more

யானையின் காதில் பேசிய ஜெயம் ரவி.. கூல் பண்றதுக்கு என்னல்லாம் செஞ்சிருக்காரு!

சென்னை :பொன்னியின் செல்வன் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு சென்னையில் நேற்றைய தினம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தப் படத்தின் ட்ரெயிலரை 5 மொழிகளில் 5 முன்னணி நடிகர்கள் வெளியிட்டுள்ளனர். ட்ரெயிலர் மிரட்டலாக அமைந்துள்ளது. சில மணி நேரங்களிலேயே இந்த ட்ரெயிலர் யூடியூபில் 3 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது. பொன்னியின் செல்வன் பாகம் 1 நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷமி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் … Read more

வெறும் 1000 டாலர்.. SpaceX-க்கு போட்டியாக ISRO..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை வடிவமைத்து, உருவாக்க விரும்புவதாகப் பெங்களூரு ஸ்பேஸ் எக்ஸ்போ 2022 இன் போது ISRO தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்தார். விண்வெளி ஆராய்ச்சி மற்றும் விண்வெளி பயணத் துறையைத் தலைகீழாக மாற்றி வரும் தனியார் நிறுவனமான SpaceX தான் முதன் முதலில் ஒரு முறை பயன்படுத்திய ராக்கெட்-ஐ 2வது முறையும் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. இதன் மூலம் பெரும் புரட்சியை உண்டாக்கிய எலான் மஸ்க் தற்போது … Read more