வீடு புகுந்து தாய், மகள் மீது தாக்குதல்; தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் கைது: எஸ்.பி. அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடி: பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் வீட்டில் அத்துமீறி நுழைந்து  தாய், மகளை தாக்கியதாக தூத்துக்குடி ஆயுதப்படை காவலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும்  பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று  மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளார். தூத்துக்குடி  மாவட்டம் ஆத்தூர் ஆவரையூரைச் சேர்ந்த பெருமாள் மகன் மாகாளி ராஜா (27). இவர் தூத்துக்குடி ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஆத்தூர் அருகே உள்ள முக்காணியை … Read more

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவிப்பு

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மொத்தம் உள்ள 24,341 இடங்களுக்கு நாளை முதல் செப்.16 வரை WWW.tngasa.gov.in-ல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் செப்.20ல் வெளியிடப்பட்டு செப்.21 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் செப்.12 முதல் விசாரணை: விரிவான விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவு

புதுடெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு வரும் 12ம் தேதி முதல் விசாரிக்கப்பட உள்ள நிலையில், அதற்கான விரிவான விபரங்களை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கு (பொதுப்பிரிவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டது. முதன்முறையாக உயர்சாதி வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரில் ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை வருமானம் உள்ளோர், 5 ஏக்கர் நிலம் … Read more

”தயவு செய்து மது விற்பனையை தடை செய்யுங்க”.. மது குடித்துவிட்டு ரகளை செய்த குடிமகன்!

கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் மதுக்கடையை மூடக்கோரி, குடித்துவிட்டு பஞ்சாயத்து கட்டடத்தின் மீது ஏறி ஒருவர் ரகளை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாகல்கோட் மாவட்டம் பாதாமி தாலுக்கா கக்கானூர் கிராம பகுதியில் காகப்பா மதரா என்ற குடிமகன் குடித்துவிட்டு சரக்கு விற்பனை செய்வதை தடை செய்யுங்கள் என்று ரகளை செய்துள்ளார். பஞ்சாயத்து கட்டிடத்தின் மேல் ஏறி நின்று ரகளை செய்தவர், ”அரசாங்கத்திடம் நான் வீடு கேட்கவில்லை, வயல் கேட்கவில்லை. பீர், சரக்கு விற்பனையை மட்டும் தடை செய்யுங்கள்” … Read more

அட்டூழியம்.. துப்பாக்கி முனையில் காரைக்கால் மீனவர்கள் 12 பேரை சிறைப்பிடித்த இலங்கை மீனவர்கள்

News oi-Nantha Kumar R காரைக்கால்: காரைக்கால் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் சிறைப்பிடித்து சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் செய்யும் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். தொடரும் மீனவர் பிரச்சனை இந்த பிரச்சனை காலம் காலமாக … Read more

ஹிருத்திக் ரோஷனுக்கு பவுன்சராக பணியாற்ற விரும்பும் தமன்னா

தமன்னா நடிப்பில் தற்போது இந்தியில் தயாராகியுள்ள படம் பப்ளி பவுன்சர். பிரபல இயக்குனர் மதூர் பண்டார்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான பெண் பவுன்சர் கதாபாத்திரம் நடித்துள்ளார் தமன்னா. பாடி பில்டிங்கில் ஆர்வம் கொண்ட ஒரு பெண் சூழ்நிலை காரணமாக பவுன்சராக மாறுவதையும் அதன்பிறகு அவர் சந்திக்கும் சுவாரசியமான பிரச்சனைகளை மையப்படுத்தியும் இந்தப் படம் உருவாகி உள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் 23ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த … Read more

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த ரஜினிகாந்த்.. டிரெண்டாகும் வீடியோ!

சென்னை: பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். வீட்டில் இருந்து அவரது கார் கிளம்பியது முதல் நிகழ்ச்சி நடக்கும் நேரு ஸ்டேடியத்தில் உள்ள அவரது கேரவனுக்கு என்ட்ரி கொடுப்பது வரை ஏகப்பட்ட வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன. விழா மேடையையும் சற்று முன் ரஜினிகாந்த் அலங்கரித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆடியோ லாஞ்ச் வாரம் நடிகர் சிம்பு நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி உள்ள வெந்து … Read more

எலான் மஸ்க்-கிற்கு பித்து பிடித்துள்ளதா? வருடத்திற்கு 2 கோடி டெஸ்லா கார் உற்பத்தி இலக்கு..!

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் இதுவரை உலகில் எந்த ஆட்டோமொபைல் நிறுவனமும் கனவு காணாத வகையில் பிரம்மாண்ட விரிவாக்கப் பாதையில் அமைத்துள்ளார் 2030 ஆம் ஆண்டுக்குள் வருடத்திற்கு 2 கோடி டெஸ்லா கார்களை விற்பனை செய்ய வேண்டும் என்கிற பிரம்மாண்ட இலக்கை எலான் மஸ்க் இலக்கு நிர்ணயம் செய்துள்ளார். இதுதான் டெஸ்லா-வின் வளர்ச்சிக்கு மையப்புள்ளியாக அமைந்துள்ளது, இந்த இலக்கை அடைய தேவையான விரிவாக்கம் தான் டெஸ்லா-வின் எதிர்காலம் அமைந்துள்ளது. டெஸ்லா இந்த இலக்கை … Read more

எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

கொழும்பு, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, குருநாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறும் குறித்த நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், 24 மணி நேரத்துக்குள் களனி ஆற்றின் தாழ்வான பகுதிகள், கொழும்பு, கொலன்னாவ, கடுவெல, சீதாவக்க, அவிசாவளை, ஹன்வெல்ல, பியகம, தொம்பே, வத்தளை, தெஹியோவிற்ற, ருவன்வெல்ல, மற்றும் தெரணியகலை ஆகிய பிரதேச … Read more

2 பேருமே இன்றைய முன்னணி ஹீரோஸ்: அடையாளம் தெரிகிறதா?

நடிகர் சூர்யா திரைத்துறையில் தனது 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அவரது தம்பி கார்த்தி அவர்களின் சிறுவயது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த முன்னனி ஹீரோக்களின் புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவர்களை அடையாளம் கண்டு அக மகிழ்ந்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சூர்யா. பின்னர் நந்தா, காக்கா காக்கா, கஜினி மற்றும் சிங்கம், சிங்கம் 2 போன்ற வெற்றிகரமான படங்களில் … Read more