இன்று மாலை கொச்சி வருகை பிரதமர் மோடி 2 நாள் கேரளாவில் சுற்றுப்பயணம்

திருவனந்தபுரம்: பிரதமர் மோடி இன்று மாலை 4 மணியளவில் டெல்லியில் இருந்து கொச்சி வருகிறார். கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் கவர்னர் ஆரிப் முகம்மது கான் தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் விமான நிலையத்தின் அருகிலுள்ள  அரங்கத்தில் நடைபெறும் பாஜவின் பொது மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார். இதன்பின் மாலை 6 மணியளவில் கொச்சி விமான நிலைய அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.கொச்சி மெட்ரோ ரயில் விரிவாக்கம் … Read more

அமலுக்கு வந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வு: கடும் அதிருப்தியில் விக்கிரவாண்டி வாகன ஓட்டிகள்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் பல மடங்கு கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் பலரும் தங்களின் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை அருகே … Read more

மருத்துவமனையின் அலட்சியப்போக்கு – தாயின் மார்பிலேயே 5 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்

மருத்துவமனையின் அலட்சியத்தால் தாயின் மார்பிலேயே 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உடல்நலம் குன்றிய தங்களுடைய 5 வயது மகன் ரிஷியை சஞ்சய் பாந்த்ரே மற்றும் அவரது குடும்பத்தார் ஜபால்பூரிலுள்ள அரசு சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மணிக்கணக்கில் காத்திருந்தும் ஒரு மருத்துவர் அல்லது சுகாதார ஊழியர்கள்கூட சிறுவனுக்கு என்ன பிரச்னை என்று ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இதனால் மருத்துவமனை வளாகத்தில் வைத்தே பெற்றோர்கள் கண்முன் தாயின் மார்பில் சாய்ந்தபடி உயிரிழந்தார் சிறுவன் ரிஷி. … Read more

ஒரே \"பேட்டர்ன்\".. 72 மணி நேரத்தில் அடுத்தடுத்த கொலைகள்! சிட்டிக்குள் \"சீரியல் கில்லர்\"? பதறிய மக்கள்

India oi-Shyamsundar I போபால்: மத்திய பிரதேசத்தில் கடந்த 72 மணி நேரத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலைகள் போலீசார் இடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. அமெரிக்க படங்களில் காட்டுவது போல இந்தியாவிலும் பல சீரியல் கில்லர்கள் இருந்துள்ளனர். இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் சீரியல் கில்லர்கள் இருந்துள்ளனர். தொடர் கொலைகள்.. ஒரே மாதிரி ஸ்டைலில் கொலை செய்யும் ஆட்கள் என்று பல சீரியல் கொலைகாரர்கள் இந்திய கிரைம் வரலாறு முழுக்க நிறைந்து கிடைக்கிறார்கள். இந்த … Read more

ஆக., மாத ஜிஎஸ்டி வசூல் 1.43 லட்சம் கோடி: 28% அதிகம்| Dinamalar

புதுடில்லி: கடந்த ஆக., மாதம், 1.43 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி ஆக வசூலாகி உள்ளது. இது கடந்த ஆண்டு ஆக.,மாத வசூலை விட 28 சதவீதம் அதிகம் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆக., மாதம் ஜிஎஸ்டி ஆக ரூ.1,43,612 கோடி வசூலாகி உள்ளது. அதில்,சிஜிஎஸ்டி – ரூ. 24,710 கோடிஎஸ்ஜிஎஸ்டி – ரூ.30,951ஐஜிஎஸ்டி – ரூ.77,782 கோடி( இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.42,067 கோடி உட்பட)செஸ் – … Read more

குக் வித் கோமாளி புகழ் திருமணத்தில்.. கையை பிடித்துக் கொண்டு விடாத சசிகுமார்.. டிரெண்டாகும் பிக்ஸ்!

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ். அதன் பின்னர் காமெடி நடிகராக வலிமை, எதற்கும் துணிந்தவன், சபாபதி உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், புகழுக்கும் அவரது நீண்ட நாள் காதலியான பென்ஸியாவுக்கும் இன்று எளிமையான முறையில் விநாயகர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. சசிகுமார், சமுத்திரகனி உள்ளிட்ட சில சினிமா பிரபலங்கள் மட்டுமே அதில் கலந்து கொண்டனர். காதலியை கரம்பிடித்த புகழ் காமெடி நடிகராக வலம் … Read more

13 நாடுகளில் 2 பெட்ரூம் அபார்ட்மெண்ட் வீட்டின் விலை.. இந்தியாவில் எவ்வளவு?

இந்தியா உள்பட உலகம் முழுவதும் ரியல் எஸ்டேட் பிசினஸ் உச்சத்தில் இருக்கும் நிலையில் வீடுகளின் விலை உயர்ந்து கொண்டே வருவதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இரண்டு பெட்ரூம் அப்பார்ட்மெண்ட் வீடுகளின் விலை 13 நாடுகளில் என்னவாக இருக்கும் என்பது குறித்து தற்போது பார்ப்போம் குறிப்பாக இந்தியாவில் இரண்டு பெட்ரூம் வீடு விலை என்ன என்பதையும் பார்ப்போம். ஓரே நாளில் ஸ்பைஸ்ஜெட் CFO, ரெக்கிட் பென்கிசர் CEO ராஜினாமா.. என்ன காரணம் தெரியுமா..? 13. பின்லாந்து … Read more

சென்னையில் இந்த முறை எவ்வளவு வெள்ளம் வந்தாலும் மக்களை பாதிக்காது: கே.என் நேரு உறுதி

மேட்டூரில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்து காணப்படுவதால், திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வரும் நீர் 1 லட்சம் கன அடியை தாண்டியதால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியாற்றில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து நடத்திய வெள்ளம் ஏற்படும் போது மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகையை தொடங்கி வைத்து பார்வையிட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் … Read more

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கன மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு  தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், … Read more

சேலம்: காங்கிரஸ் துணை மேயரை தூக்க, கவுன்சிலர்களிடம் கையெழுத்து வாங்கிய திமுக மேயர்! – நடந்தது என்ன?

தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக தற்போது தேர்வுசெய்யப்பட்டு முதல்வர் கரங்களில் விருது பெற்ற சேலம் மாநகராட்சியில், அதிகாரிகளுக்கிடையேயும், அரசியல்வாதிகளுக்கு மத்தியிலும் பெரும் குழப்பங்கள் நிலவி வருகின்றன. தி.மு.க தனது கூட்டணிக் கட்சிகளுக்கு சில இடங்களில் மேயர் பதவிகளையும், பெரும்பாலான இடங்களில் துணை மேயர் அந்தஸ்தையும் கொடுத்திருக்கிறது. அந்த வகையில், சேலம் மாநகராட்சியில் துணை மேயர் பதவியை தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு வழங்கியிருக்கிறது தி.மு.க. அதன் மூலம் சேலம் மாநகராட்சியின் துணை மேயராக இருந்து வருபவர் சாரதாதேவி. தி.மு.க-வைச் … Read more