கேரளாவில் கவர்னர் அதிகாரத்தை குறைக்கும் மசோதா நிறைவேற்றம்| Dinamalar

திருவனந்தபுரம்: கேரளத்தில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை கவர்னர் நியமிக்கும் அதிகாரத்தை குறைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்து வந்ததால் இந்த முடிவை முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.இந்நிலையில் துணைவேந்தர் நியமனத்தில் கவர்னர் அதிகாரத்தை குறைக்கும் பல்கலைக்., மசோதா கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. காங்., தலைமையிலான எதிர்கட்சிகள் வெளி நடப்பு செய்தனர். திருவனந்தபுரம்: கேரளத்தில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை கவர்னர் நியமிக்கும் அதிகாரத்தை குறைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.nsimg3112774nsimgமாநில … Read more

டைட்டானிக் ஹீரோ இளம் ஹாலிவுட் நடிகை இடையேயான காதல் முடிவுக்கு வந்தது: வயசு வித்தியாசம் தான் காரணமா?

அமெரிக்கா: டைட்டானிக் படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ 47 வயதான லியோனார்டோ டிகாப்ரியோவுக்கும் 25 வயது இளம் ஹாலிவுட் நடிகையான கமிலா மோரோனுடன் டேட்டிங் செய்து வந்தார். இந்நிலையில், இருவரும் அவர்களது உறவு குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். டைட்டானிக் ஜாக் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியான ‘டைட்டானிக்’ படத்தை அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது. பிரம்மாண்டமான கப்பலை பின்னணியாகக் கொண்டு உலகமகா காதல் காவியமாக … Read more

2.9 பில்லியன் நிதியுதவி.. ஆனா ஒரு கண்டிஷன்.. இலங்கை-க்கு செக் வைத்து IMF..!

பொருளாதாரச் சரிவாலும், நிதி நெருக்கடியாலும் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு இருக்கும் இலங்கை மக்கள் போராட்டம் எழுந்த நாளில் இருந்து சர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவிக்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் தான் இலங்கை அரசியல் தலைகீழாகப் புரண்டது, இத்தகைய சூழ்நிலையில் புதிதாக அமைந்த அரசு எடுத்த பல முடிவுகள் குறிப்பாக வரியை உயர்த்தி அரசின் வருமானத்தை உயர்த்தும் நடவடிக்கைகள், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் திட்டங்களை அறிவித்து ஐஎம்எப் அமைப்பிற்கு நம்பிக்கை கொடுத்த நிலையில் தற்போது … Read more

பூலித்தேவர் பிறந்தநாள்: மோடி- ஸ்டாலின் வாழ்த்து

Puli thevar Birthday Tamil News: சுதந்திர போராட்ட வீரரும் மாமன்னருமான பூலித்தேவரின் 307-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுதும் விமரிசையாக கொண்டாப்பட்டு வருகிறது. இதனையொட்டி தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும் செவலில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நினைவு மாளிகையில் உள்ள பூலித்தேவன் முழு உருவ வெண்கல சிலைக்கு தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்பிலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் மாலை அணிவித்து … Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிய இளைஞர் கொலை.. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..!

இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அம்பேத்கர் பகுதியை சேர்ந்தவர் ராபின். இவர் நேற்றிரவு அவரது பகுதியில் நடந்த திருமண நிகழ்விற்கு சென்று விட்டு அவரது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று ராபினை வழிமறித்தனர். அரிவாள் கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில், அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து … Read more

சட்டவிரோதமாக வாங்கி விற்கப்பட்ட ரூ.28 கோடி டிக்கெட்டுகள்! – ரயில்வேயை அதிரவைத்த சாஃப்ட்வேர் ஹேக்கிங்

இந்திய ரயில்வேயின் வலைதளமான, இந்திய ரயில்வே கேட்டரிங் & டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) போர்ட்டலிலிருந்து, சுமார் 28 கோடி ரூபாய் மதிப்பிலான உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டுகளை, சட்டவிரோத மென்பொருளைப் (software) பயன்படுத்தி வாங்கி, பயணிகளுக்கு அதிக தொகைக்கு விற்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இது தொடர்பாக மேற்கு ரயில்வே, குஜராத் மாநிலம், ராஜ்கோட் பிரிவின் ரயில்வே போலீஸ் படை, இதுவரை 6 பேரை கைதுசெய்து, அவர்களிடமிருந்து ரூ.43.42 லட்சம் மதிப்பிலான 1,688 விற்கப்படாத டிக்கெட்டுகளை மீட்டிருக்கிறது. இந்திய ரயில்வே … Read more

தமிழகத்தின் 10 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை!

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், சேலம், கரூர், நாமக்கல், திருச்சி உட்பட 17 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது. நாளை 9 மாவட்டங்களில் கனமழை … Read more

வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு 

சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு … Read more

அதிமுகவில் மாற்றம்.. அண்ணன் ஓபிஎஸ்.. இபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த கே.பி.முனுசாமி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் அதிமுக நிர்வாகியின் இல்ல திருமண நிகழ்ச்சியில் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி பேசியதாவது: “ – எடப்பாடி பழனிசாமி இருவராலும் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் புகழேந்தி, அவர் இப்போது எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பது அவருக்கே தெரியாது. தற்போது பக்கம் நின்றுக்கொண்டு அதிமுகவை விமர்சிக்க அவருக்கு எந்த தகுதியும் இல்லை. பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். நீங்கள் ராஜினாமா … Read more

பிள்ளையாருக்கு ஆதார் கார்டு: அட்ரெஸ் என்ன தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் ஆவணியில் வரும் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற நிலையில், இந்தாண்டு வழக்கமான உற்சாகத்துடன் பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். விநாயகர் சதுர்த்தியையொட்டி, தெரு முனைகளிலும், சாலைகளின் முக்கிய சந்திப்புகளிலும் பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பின்னர் அவை ஊர்வலமாக … Read more