அம்மான்னா சும்மா இல்லடா.. விநாயகர் சதுர்த்தியில் மீண்டும் நிரூபித்த ஐஸ்வர்யா ரஜினி!

சென்னை : இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி தன்னுடைய சினிமா கேரியரில் 2 படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படங்கள் திரைக்கதைக்காக பாராட்டுக்களை பெற்றன. இந்நிலையில் நடிகர் தனுஷுடன் தன்னுடைய 18 ஆண்டுகால திருமண உறவை முடித்துக் கொள்ளும் முடிவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார். இதையடுத்து இவரது வாழ்க்கையில் பல ரொட்டீன்கள் மாறியுள்ளன. தன்னுடைய உடல்நலன், மனநலனில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி இயக்குநரும் பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா … Read more

வீழ்ச்சி காணும் கச்சா எண்ணெய்.. 2020க்கு பிறகு தரமான சம்பவம்.. பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

கச்சா எண்ணெய் விலையானது சர்வதேச சந்தையில் தொடர்ந்து மூன்றாவது மாதமாக சரிவினைக் கண்டுள்ளது . இது அமெரிக்காவின் மத்திய வங்கியானது பொருளாதாரத்தில் தாக்கம் இருந்தாலும், வட்டி விகிதத்தினை அதிகரிக்கும் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் சீனாவின் ஜீரோ கோவிட் பாலிசி என பலவும் தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் தேவையானது குறையலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. இனி எண்ணெய்-க்கும், தங்கத்திற்கும் எந்த பிரச்சனையும் இல்லை..!! தற்போதைய நிலவரம்? … Read more

பெண்களுக்கு மாதம் ரூ1000 திட்டம் எப்போது? கோவையில் ஸ்டாலின் விளக்கம்

தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் பேத்தியும் – திமுக மாநில இளைஞரணி இணைச்செயலாளருமான பைந்தமிழ்பாரி – கீதா தம்பதியின் மகளான ஸ்ரீநிதிக்கும் பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான -மதியழகன் – விஜயா தம்பதியின் மகனுமான கெளசிக் தேவ் ஆகியோரது திருமண விழா கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்றது. தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இத்திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். மணமக்கள் இருவரும் முதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய … Read more

இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம் – உயர்கல்வித்துறை!

அனைத்து வகை கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2-ஆவது செமஸ்டர் தேர்வில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, தாய் மொழியான தமிழ் மொழியினை மாணவர்கள் அனைவரும் கற்க வேண்டும் எனவும், தாய் மொழியில் கல்வி கற்பதை ஊக்குவிக்க வேண்டும் எனவும்  மாணவர்களை ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில், சில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தமிழ் மொழி பாடத்தை நடத்தவில்லை என புகார் எழுந்ததை அடுத்து அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் … Read more

`2 மணி நேரமா ஆம்புலன்ஸ் வரல'… நிறைமாத கர்ப்பிணி மனைவியை தள்ளுவண்டியில் அழைத்து சென்ற அவலம்

மத்திய பிரதேசத்தின் தாமோ மாவட்டத்தின் ரானேஹ் கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு செவ்வாயன்று பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து கைலாஷ் அஹிர்வார் என்பவர் 108 அரசு ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்திருக்கிறார். சுமார் இரண்டு மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகிலிருந்த சுகாதார மையத்திற்கு தனது மனைவியை அழைத்துச் சென்றார். அங்கு செவிலியர்கள், மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் மனம் உடைந்து போனார். இதையடுத்து ஒரு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தனது மனவியை … Read more

'இந்திய விடுதலை வரலாற்றின் முதல் ஏட்டை இயற்றிய மாவீரன் பூலித்தேவன்' – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “ஆங்கிலேயரை விரட்டியடித்து இந்திய விடுதலை வரலாற்றின் முதல் ஏட்டை எழுதிய மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளில் அவருக்கு என் வீரவணக்கம்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “சல்லிக்காசு தரமுடியாது” என ஆங்கிலேயரை விரட்டியடித்து இந்திய விடுதலை வரலாற்றின் முதல் ஏட்டை எழுதிய மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளில் அவருக்கு என் வீரவணக்கம்.நெற்கட்டும் செவலில் நினைவு மாளிகை அமைத்து அவர் தியாகத்தைப் போற்றியது கழக … Read more

மக்களே இன்று அடித்து வெளுக்கும் மிக கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், “வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 01.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, … Read more

மீண்டும் பழைய கலால் வரி கொள்கை; இனி அரசே மது விற்பனை செய்யும்

புது டெல்லி: இன்று (வியாழன்) முதல் தேசியத் தலைநகரில் பழைய கலால் கொள்கை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. இதனால் தனியார் விற்பனையாளர்கள் மதுபானக் கடைகள் நேற்றுடன் மூடப்பட்டன. இனி டெல்லி அரசாங்கமே மதுவிற்பனையை மேற்கொள்ளும். மேலும் தனியார் மது விற்பனை கடைகள், அரசு மது விற்பனை நிலையங்களால் மாற்றப்படும். தற்போது டெல்லி நகரில் 300 மதுபான கடைகள் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கலால் துறை கூறியுள்ளது. இந்த கடைகளில் சுமார் 240 மது கடைகள் முதல் நாளில் … Read more

கர்ப்பப்பையில் இருந்த 6 கிலோ கட்டி அகற்றம்… நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கிய அமைச்சர்!

விழுப்பும் மாவட்டம் செஞ்சி அடுத்த அனையேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. கூலி வேலை செய்து வரும் இவரது மனைவி ராணியுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், இவர் யின் மனைவி ராணி. 50 வயதாகிய ராணிக்கு கடந்த சில காலமாக வலி ஏதுமின்றி வயிறு வீங்கிய வண்ணம் இருந்துள்ளது. இவரது வயிறு கனத்தும், பெருத்தும் காணப்பட்டது.  இதையடுத்து பாதிக்கப்பட்ட ராணி செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அணுகினார். அப்போது ராணியை பரிசோதித்த மருத்துவர்கள் ராணியின் கர்ப்பப்பையில் கட்டி ஒன்று … Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..!

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் அணியை இந்திய அணி வீழ்த்தியது. 4-வது லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற ஹாங்காங் அணி இந்திய அணியை முதலில் ஆட பணித்தது. முதலில் ஆடிய இந்திய அணி 20ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 59ரன்களும் சூர்யகுமார் யாதவ் 68ரன்களும் எடுத்தனர். ஹாங்காங் அணி 20ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் … Read more