‘தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு.. காலணிகளுக்கு கூட நிகரில்லை’ – பிடிஆர் vsஅண்ணாமலை ட்விட்டரில் வார்த்தை போர்

மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன், காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தார். அவரது உடல் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வந்தபோது அரசு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் விமான நிலையத்திலிருந்து அமைச்சர் புறப்பட்ட போது அவரின் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பாஜகவினர் 11 பேர் கைது செய்யப்பட்டனர். மகளிரணியைச் சேர்ந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த … Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி.! ரயில் மோதி பலி.!

திருப்பத்தூர் மாவட்டத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி தொழிலாளி உயிரிழந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் பெரியங்குப்பம் எம்.சி.ரோடு பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவரது மகன் தொழிலாளி கலையரசன் (54). இவருடைய மனைவி தமிழரசி. இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கலையரசன் விண்ணமங்கலம்-ஆம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, காட்பாடி பகுதியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் … Read more

IND vs HKG: ராகுலிடம் இல்லாத இன்டென்ட்டை வெளிப்படுத்திய ஹாங்காங்; இந்தியா சரிசெய்ய வேண்டியது என்ன?

இந்திய ஏபிடி சூர்யக்குமாரின் பேட் ஹாங்காங் பந்துவீச்சை சூறையாடி, சூப்பர் 4-க்குள் இந்தியாவை எடுத்துச் சென்றுள்ளது. ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், லீக் சுற்றில் இரண்டு போட்டிகளையுமே இந்தியா வென்று, அதிரடியாக சூப்பர் 4-ல் நுழைந்துள்ளது. சர்வதேச டி20 தரப்பட்டியலில் வேண்டுமென்றால் இடங்கள் மாறலாம், ஆனால், இந்தியாவின் தற்போதைய தலைசிறந்த டி20 பேட்ஸ்மேன் என்றால் அது சூர்யக்குமார் யாதவ்தான். “ரிலே”வில் ஓடும் வீரர்களில், அணியின் தலைசிறந்த வீரர், எப்பொழுதும் இறுதி நபராகத்தான் … Read more

’ஐய் அம்மாவ பாத்துட்டேன்….’ 3 நாட்கள் தேடுதலுக்கு பின் தாயிடம் சேர்ந்த குட்டி யானை..!

உதகை அருகே ஆற்றில் அடித்து வரப்பட்ட குட்டி யானையை மீட்ட வனத்துறையினர், 3 நாட்கள் தேடுதலுக்கு பின் தாய் யானையிடம் கொண்டு சேர்த்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன் மாவனல்லா பகுதியில் ஆற்றில் அடித்து வரப்பட்ட குட்டி யானை மீட்கப்பட்ட நிலையில், 8 குழுக்களாக பிரிந்து தாய் யானையை தேடி வந்தனர். நேற்றிரவு சீகூர் வனப்பகுதியில் பெண் யானை ஒன்று தனியாக இருப்பதை அறிந்த வனத்துறையினர், உடனடியாக குட்டியை அப்பகுதியில் விட்டனர். பின்னர் தாய் யானை, குட்டியை … Read more

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் 

கோவை: “பெண்களுக்கு இலவச பேருந்து ,பால்விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு போன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றபட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் படித்து, உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000-ம் உதவித்தொகை வழங்கும் திட்டம் வரும் 5-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 ரூபாய் உரிமை தொகை நிதி நிலைமை சரியானவுடன் விரைவில் வழங்கப்படும்” என கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். முன்னாள் அமைச்சரும், திமுக சொத்து பாதுகாப்புக்குழு துணைத் தலைவருமான பொங்கலூர் பழனிசாமி – … Read more

நான் இயேசுநாதர் அல்ல; இருமடங்கு திருப்பி அடிப்பேன் – அண்ணாமலை ஆவேசம்!

ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும்போது, பாஜகவை சேர்ந்த சிலர் விமான நிலையத்தில் அவரின் கார் மீது செருப்பை வீசினர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பாக அண்ணாமலை மற்றும் மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் சுசீந்திரன் ஆகியோர் செல்போனில் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த ஆடியோ தமிழகம் … Read more

முக்கிய சேவைகளை முடக்கும் Google, Meta, Amazon, உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள்!

மெட்டா நிறுவனத்தின் பகுதியான முகநூல், கூகுள் , மைக்ரோசாப்ட் , அமேசான் ஆகிய நிறுவனங்கள் பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் வழங்கி வரும் சேவைகளை நிறுத்த போவதாக அறிவித்துள்ளனர். மெட்டா மெட்டா நிறுவனத்தின் பகுதியான முகநூல் நிறுவனம்தான் இந்த பட்டியலில் அதிக சேவைகளை மூட இருக்கிறது. Facebook gaming, facebook live shopping, facebook social app for couples ஆகிய மூன்று சேவைகளையும் முகநூல் நிறுத்த போவதாக அறிவித்துள்ளது. பொதுமுடக்க காலத்தில் தங்களின் பயனர்களுக்காக துவங்கிய Tuned … Read more

தலைதெறிக்க ஓடிய ரஷ்ய படைகள் – உக்ரைன் வெளியிட்ட காணொளி

கெர்சன் பகுதியில் உள்ள ரஷ்ய துருப்புக்களை ஓடு அல்லது செத்து மடி என உக்ரைன் கடுமையான எச்சரித்துள்ளது. இது குறித்து உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள காணொளியில் ரஷ்ய வீரர்கள் தப்பி ஓடுவதைக் காட்டுகிறது. தற்போது கெர்சன் ஒப்லாஸ்டில் உள்ள ரஷ்ய விருந்தினர்களுக்கு ஒரு செய்தி என்று அந்த காணொளியில் கூறப்பட்டுள்ளது. உக்ரேனிய வீரர்கள் ஏவுகணைகள், ராக்கெட்டுகள் மற்றும் ரஷ்ய துருப்புக்களை குறிவைக்கும் உக்ரேனிய துப்பாக்கி சுடும் வீரர்களின் காட்சிகளுக்கு இடையில் காணொளி வெளியாகியுள்ளது. … Read more

உயிரிழந்த நடிகை சோனாலி போகத்தின் உடலில் 46 இடங்களில் காயம் இருப்பதாக புதிய தகவல்!

மாரடைப்பால் காலமானதாக அறிவிக்கப்பட்ட பாஜக பிரமுகரும் நடிகையுமான சோனாலி போகத்தின் உடலில் 46 இடங்களில் காயங்கள் இருந்ததாக தகவல் வெளியானது. மர்மமான முறையில் சோனாலி இறந்ததும் அவர் உடல் கோவாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அவர் உடலுக்கு நடத்தப்பட்ட உடற்கூராய்வு சோதனையின் போது இந்த காயங்கள் பற்றி ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் அவர் போதைப் பொருள் உட்கொண்டாரா என மருத்துவர்கள் நிபுணர்களுடன் ஆலோசித்து வருகின்றனர். Source link

குக் வித் கோமாளி புகழ் திருமணம் விமரிசையாக நடைபெற்றது! பிரபலங்கள் வாழ்த்து.. புகைப்படங்கள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற புகழ் – பென்சியா தம்பதிக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்கப் போவது சாம்பியன் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, அதில் தனித்துவம் பெற்று, பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அதீத கவனம் பெற்று, அந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமானவர் புகழ். இவர் தற்போது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் புகழ் தனது நீண்ட கால தோழி பென்சியாவை மணந்துள்ளார். View … Read more