அந்தரங்க உறுப்பில் ஷாக் – போலீஸ் மீது பகீர் புகார்!!

விசாரணை என்ற பெயரில் தனது அந்தரங்க உறுப்பில் ஷாக் கொடுத்து சித்திரவதை செய்ததாக பட்டியலின இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநில மனித உரிமைகள் ஆணையம் மற்றும் பெங்களூரு காவல்துறை ஆணையர் ஆகியோரிடம் பட்டியலின இளைஞர் ஒருவர் தன்னை காவல்துறையினர் விசாரணை என்ற அழைத்து சென்று சித்திரவதை செய்ததாக புகாரளித்துள்ளார். அதில், கடந்த மாதம் 4ஆம் தேதி பெங்களூரு பி.நாராயணபுரா பேருந்து நிலையத்திலிருந்து தன்னை காவல்துறையினர் காரில் ஏற்றிக்கொண்டு காவல் … Read more

மக்கள் முன் விழுந்து மன்னிப்பு கேட்ட பிரதமர் – ஏன் தெரியுமா?

குஜராத்தில் பல கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி அங்கிருந்து பனஸ்கந்தா பகுதியில் உள்ள அம்பாஜி கோவிலில் தரிசனம் செய்தார். இரவு 10 மணிக்கு ராஜஸ்தானில் அபு சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களைச் சந்திக்க வந்திருந்தார் . தாமதமாக வந்ததற்கு பிரதமர் மேடையில் மக்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார். மேலும் 10 மணிக்கு மேல் விதிமுறைப்படி அதிக ஓசையை எழுப்பக் கூடாது என்று மைக் இன்றி மக்களிடம் உரையாடினார். மீண்டும் வந்து மக்களைச் … Read more

சாலையில் திடீரென பற்றி எரிந்த சொகுசு கார்!!

சென்னையை அடுத்து வண்டலூர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்குடியைச் சேர்ந்தவர் சதீஷ் என்பவர் சென்னை அடுத்துள்ள நொளம்பூரில் உள்ள அக்கா வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் வண்டலூர் செல்வதற்காக காரில் சதீஷ், பிரதீப் ஆகிய இருவரும் சென்றுள்ளனர். திருநீர்மலை அருகே சென்றபோது திடீரென காரின் முன் பகுதியிலிருந்து புகை வந்துள்ளது. இதைப்பார்த்த சதீஷ் உடனே காரை நிறுத்தியுள்ளார். பின்னர் இருவரும் காரை விட்டு இறங்கியுள்ளனர். சிறிது … Read more

புதுச்சேரியில் இன்று ஆர்எஸ்எஸ் பேரணி

புதுச்சேரி: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் அக்.2 காந்தி ஜெயந்தி தினமான இன்று பேரணிக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அணிவகுப்பு பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் சார்பில் அனுமதி கோரப்பட்டது. சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு காரணங்களைக் காட்டி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இந்நிலையில், புதுச்சேரியில் இன்று (அக்.2) இந்தப் பேரணியை நடத்த ஆர்எஸ்எஸ் அனுமதி கேட்டிருந்தது. இதற்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஆர்எஸ்எஸ் … Read more

வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறையவில்லை வர்த்தக காஸ் விலை ரூ.35.50 குறைப்பு; சென்னையில் ரூ.2,009 என நிர்ணயம்

சேலம்: நாடு முழுவதும் வீடுகளில் பயன்படுத்தும் காஸ் விலை குறைக்கப்படாத நிலையில், கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.35.50 குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இந்நிலையில், இம் மாதத்திற்கான (அக்டோபர்) புதிய விலையை நேற்று அதிகாலை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டது. அதில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,549,842 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.49 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,549,842 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 623,194,703 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 602,940,122 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,629 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாஜ அரசை விமர்சித்து வந்த மேகாலயா ஆளுனர் மாலிக் ஓய்வு: அருணாச்சல் கவர்னருக்கு கூடுதல் பொறுப்பு

புதுடெல்லி: மேகாலயா மாநில ஆளுநராக இருந்து வருபவர் சத்யபால் மாலிக், இவர் முன்னதாக ஜம்மு காஷ்மீர், கோவா மாநிலங்களில் ஆளுநராக பொறுப்பு வகித்துள்ளார். ஆளுநரான சத்யபால் மாலிக், ஒன்றிய அரசு கொண்டு வந்த  வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசினார். அதே போல்  அக்கினி வீரர்கள் திட்டம்  உள்ளிட்ட ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்களை விமர்சித்தது சர்ச்சையானது. இந்நிலையில், ஆளுனராக இருந்து கொண்டு பாஜ அரசை விமர்சனம் செய்து வந்த சத்யபால்  நாளை … Read more

Stampede Deaths: ஜகார்த்தாவில் கால்பந்து போட்டி வன்முறையில் நெரிசலில் 127 பேர் பலி

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் கால்பந்துப் போட்டி ஒன்றின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 127 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த செய்தியை இந்தோனேஷிய அரசு உறுதி செய்துள்ளது. அரேமா மற்றும் பெர்செபயா என்ற இரு அணிகளுக்கு இடையே நடந்த கால்பந்துப் போட்டியில் நடைபெற்ற  வன்முறையில் இந்த சோகமான சம்பவம் நடைபெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு கலகத் தடுப்புப் போலீசார் மைதானத்தை சுற்றி வளைத்தனர். விளையாட்டு மைதானத்தின் ஆடுகளத்தில் கூடிய கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். கூட்ட … Read more

இன்று இறைச்சி கடைகள் திறந்திருக்காது!!

இன்று காந்தி ஜெயந்தி என்பதால் இறைச்சி கடைகளை மூட கோவை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இன்று ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சி விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, கோழி, பன்றி இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. உக்கடம், சத்தி ரோடு மற்றும் போத்தனுாரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான அறுவைமனைகள் மற்றும் துடியலுாரில் உள்ள மாநகராட்சி வணிக வளாக இறைச்சி கடைகள் செயல்படக்கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை … Read more

உளுந்தூர்பேட்டையில் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் சுங்கச்சாவடியில் கட்டணமின்றி பயணிக்கும் வாகனங்கள்

கள்ளக்குறிச்சி: சக ஊழியர்களை சுங்கச்சாவடி நிர்வாகம் பணி நீக்கம் செய்ய நோட்டீஸ் வழங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பணியில் உள்ள சக ஊழியர்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னை-திருச்சி-சேலம் சாலையில் செல்லும் வாகனங்கள் சுங்கக் கட்டண பிடித்தமின்றி பயணிக்கின்றன. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த செங்குறிச்சியில் 2009 முதல் சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. ‘ஃபாஸ்ட் டேக்‘ கட்டண வசூல் முறை வந்த பிறகு ஆட்குறைப்பில் சுங்கச்சாவடி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. ஊழியர்களில் 28 பேரை … Read more