மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அமித்ஷாவுடன் சந்திப்பு| Dinamalar

புதுடில்லி: செர்பியாவில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்று சாதனை படைத்த இந்திய வீரர் பஜ்ரங் புனியா, டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று(அக்.,01) சந்தித்தார். பின்னர், பஜ்ரங் புனியா வெளியிட்ட அறிக்கை: “நாட்டின் புகழ்பெற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தேன், விளையாட்டு பற்றி விவாதிப்பது மிகவும் நன்றாக இருந்தது. எப்போதும் உங்கள் ஆசீர்வாதங்களைப் வழங்குங்கள், அவர் வழங்கிய வழிகாட்டுதல் நாட்டிற்கு சிறப்பாகச் செய்ய எப்போதும் ஊக்கமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். புதுடில்லி: … Read more

நடிகர் மீதான புகாரை வாபஸ் பெற்ற பெண் தொகுப்பாளர்

கடந்த வாரம் மலையாளத்தில் சட்டம்பி என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள இளம் நடிகர் ஸ்ரீநாத் பாஷி என்பவர் அந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக யு-டியூப் சேனல் ஒன்றில் கலந்துகொண்டு பேட்டியளித்தார். அப்போது அந்த நிகழ்ச்சியின் பெண் தொகுப்பாளர் கேட்ட சில கேள்விகளால் எரிச்சலடைந்த அவர், தொகுப்பாளினியை அநாகரிக வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறை அவரை கைது செய்தது. பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார் ஸ்ரீநாத் … Read more

புதையலுக்காக நண்பனையே கொன்ற கொடூரம்!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே புதையலுக்காக நண்பனையே நரபலி கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். கெலமங்கலம் அடுத்த புதூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் கடந்த 28ஆம் தேதி அவரது விவசாய தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். இந்த விவகாரத்தில் லட்சுமணனின் நண்பரான மணி என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, விவசாய தோட்டத்தில் புதையல் எடுப்பதற்காக நண்பனையே கொன்று நரபலி கொடுத்தது தெரியவந்தது. லட்சுமணனின் விவசாய தோட்டத்தில் புதையல் இருப்பதாகவும், … Read more

தூய்மை இந்தியா தரவரிசையில் தமிழகம் கடைசி இடம்; கோவை – போத்தனூருக்கு மட்டுமே விருது!

சென்னை: தூய்மை இந்தியா தரவரிசை பட்டியலில் தமிழகத்தின் பெரிய நகரங்கள் ஒரு சில இடங்கள் மட்டுமே முன்னேறி உள்ளன. சிறிய நகரங்கள் அனைத்தும் 200-வது இடத்திற்கு மேல்தான் பிடித்துள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தில் தூய்மை நகரங்கள் தொடர்பான ஆய்வு 2016-ம் ஆண்டு முதல் மத்திய அரசு நடத்தி வருகிறது. ஸ்வச் சர்வேக்‌ஷன் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த ஆய்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஆய்வு 75-வது சுந்திர தின நிறைவு விழாவை … Read more

பிரேத பரிசோதனை பதிவேற்றும் சாஃப்ட்வேர்: மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு!

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் முகமது காதர் மீரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவ ஆய்வு மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளை பதிவேற்றம் செய்யும் மென்பொருளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இதுதொடர்பாக கடந்த 2012ஆம் ஆண்டு பஞ்சாப் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேசிய தகவல் மையம் ஒரு மென்பொருளை உருவாக்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த (MedLeaPR – Medico Legal Examination and Postmortem Reporting) மென்பொருள் மூலம் பல்வேறு மருத்துவ … Read more

விபரீதம் அறியாமல் முத்தம் கொடுக்க முயற்சி.. இளைஞர் உதட்டை பதம் பார்த்த பாம்பு வீடியோ!

கர்நாடக மாநிலம் சிவமோகா(shivamogga) பகுதியில் குடியிருப்பு பகுதியில் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அந்த பகுதியில் பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வரும் அலெக்ஸ் என்ற இளைஞருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அலெக்ஸ் சுமர் 2 மணிநேரம் போராடி புதர் பகுதியில் ஒளிந்திருந்த விஷ பாம்பை லாவகமாக பிடித்தார். பாம்பை பிடித்த கையோடு அதனை வனப்பகுதியில் கொண்டு சென்று விடாமல் வீரமாக செயல்படுவது போல் நினைத்த அலெக்ஸ் பாம்புக்கு முத்தம் … Read more

அரசு அளித்த தடையை நீக்கிய நீதிமன்றம் விரும்பத்தகாத செயல்களுக்கு பொறுப்பேற்குமா?… சீமான் கேள்வி

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணியை நவம்பர் 6 அன்று நடத்திக் கொள்வதற்கு அனுமதியளித்துத் தீர்ப்பு வழங்கியிருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் முடிவு பெரும் ஏமாற்றமளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் பேரணி நடத்தப்பட்டால், சட்டம் ஒழுங்கும், சமூக அமைதியும் குலைக்கப்படுமெனக் கருதி, தமிழக அரசு அதற்கு அனுமதி மறுத்திருக்கும் நிலையில், சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பல முன்மாதிரி வழக்குகளில் அறிவுறுத்தியிருக்கிற … Read more