புதுச்சேரியில் 4-வது நாளாக மின் துறை ஊழியர்கள் போராட்டம்; மின் தடை பாதிப்பால் பொதுமக்கள் சாலை மறியல் 

புதுச்சேரி: புதுச்சேரியில் மின் துறை தனியார்மயத்தை எதிர்த்து மின் ஊழியர்கள் இன்று 4-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், மின்சார தடையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரி அரசின் மின் துறையை தனியார்மயமாக்க டெண்டர் அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, மின் துறை பொறியாளர்கள், ஊழியர்கள் உருவாக்கிய போராட்ட குழு செப்.28-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி மின் துறை தலைமையகத்தில் இன்று 4-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்குழு … Read more

முத்தமிட்ட நபரை உதட்டில் தீண்டிய பாம்பு | வைரல் வீடியோ

கர்நாடகாவில் நாகப் பாம்பு ஒன்றை பிடித்த பாம்பு மீட்பர் அதனை முத்தமிட முயற்சித்தபோது, அது அந்த நபரின் வாயில் தீண்டியது. பாதிக்கப்பட்ட அந்த நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கர்நாடகா மாநிலம் ஷிவ்மோகா மாவட்டத்தில் பொம்மக்கட்டேவில் நடந்துள்ளது. இவர் வழக்கமாக பாம்புகள் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்துவிட்டால் அதை பிடித்து வனப்பகுதியில் விடுவார். அதனால், அப்பகுதியில் சற்றே பிரபலமானவர். இந்நிலையில்தான் பாம்பைப் பிடித்ததோடு இல்லாமல், அதை வைத்து சாகசம் செய்ய நினைத்தபோது அவர் தீண்டப்பட்டு சிகிச்சையில் உள்ளார். … Read more

2023 ஆகஸ்ட் 15 முதல் பிஎஸ்என்எல் 5ஜி சேவையை வழங்கும்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

புதுடெல்லி: இந்தியாவில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ல் பிஎஸ்என்எல் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வு தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வு மொத்தம் நான்கு நாட்கள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்வில் தான் பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். ஏர்டெல், ஜியோ மற்றும் … Read more

தரமற்ற பொருட்களை விநியோகித்த நிறுவனங்களுடன் மீண்டும் ஒப்பந்தமா? – மநீம கண்டனம்!

ரேஷன் கடைகளுக்கு தரமற்ற பொருட்களை விநியோகித்த நிறுவனங்களுடன் மீண்டும் ஒப்பந்தமா என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் பருப்பு, ரவா, கோதுமை ,வெல்லம், நெய், அரிசி, கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் பொருட்கள் தரமற்று இருப்பதாக புகார்கள் எழுந்தன. இது முதல்வரின் கவனத்திற்கு செல்ல தரமற்ற உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் … Read more

Breaking: மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி..!

பாஜகவின் மூத்த தலைவரும் மாநிலங்களவையின் முன்னாள் எம்.பி.யான இல.கணேசன் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க ஆளுநராக கடந்த ஆண்டு ஆகஸ்டில் நியமிக்கப்பட்டார். இவர் தமிழகத்தில் பாஜக தலைவராகவும் இருந்தவர். மேலும், பாஜகவின் தேசிய குழு உறுப்பினர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்போது மேற்கு வங்க ஆளுநராக இருந்து வரும் இல.கணேசன் திடீர் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொல்லை செய்யாதீர்கள்… தற்கொலை செய்துகொண்ட நடிகை – பாலிவுட்டில் பரபரப்பு

திரைத்துறையில் இருப்பவர்களுக்கு என்ன கவலை என்று பலர் பேசுவதுண்டு. ஆனால் அவர்களும் சாதாரண வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என அவர்களுக்கு மட்டுமே தெரியும். அதனால்தான் திரைத்துறையிலும் தற்கொலை நிகழ்கின்றன. குறிப்பாக பாலிவுட்டில் சுஷாந்த் சிங் தற்கொலை பெரும் விவாதத்தை கிளப்பின. ஆனாலும் தற்கொலைகள் நின்றபாடில்லை. தற்போது மீண்டும் ஒரு இளம் நடிகை தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அகன்ஷா மோகன் என்பவர் மாடலிங் துறையில் பணியாற்றிவந்தார். இவர் கடந்த 16ஆம் தேதி ரிலீஸ் ஆன சியா என்ற படத்தில் ஷிபெய்ல் என்ற … Read more

புதுச்சேரி மாநிலத்தில் நாளை மாலை ஆர்எஸ்எஸ் பேரணி… காவல்துறை அனுமதி..

புதுச்சேரி: தமிழ்நாட்டில் நாளை ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழகஅரசு அனுமதி வழங்காத நிலையில், புதுச்சேரி மாநிலத்தில்  இரண்டு இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது. மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள் மற்றும் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு நிறைவு, வள்ளலாரின் 200வது பிறந்த ஆண்டு ஆகியவற்றை இணைத்து  கொண்டாடும் வகையில் புதுச்சேரி மாநில ஆர்.எஸ்.எஸ் அமைப்பு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்கனவே மாநில அரசிடம் … Read more

புனித ஜெபமாலை அன்னை சர்ச் தேர்த்திருவிழா; போப் ஆண்டவர் தூதர் பங்கேற்பு

சோமனூர்: கிபி 1600ம் ஆண்டில் கட்டப்பட்ட கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை ஆலயம், கோவை மறை மாவட்டத்திற்கு முதன்மை கோவிலாகவும், தாய் கோயிலாகவும் விளங்கி வருகிறது. வரலாற்று சிறப்புபெற்ற இத்திருக்கோவில் கடந்த 2019 பசிலிக்கா திருத்தலமாக தரம் உயர்த்தி போப்பாண்டவர் அறிவித்தார். இதனால் தமிழகத்தில் 6வது திருத்தலமாக செயல்படுகிறது. இந்த ஆண்டு தேர்பவனி நாளை (ஞாயிறு) நடைபெறுகிறது. நேற்று மாலை கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாசுக்கு நன்றி வளைவில் இருந்து பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. … Read more

திராவிட இயக்கம் – கம்யூனிஸ்ட் இயக்கம் இடையே ஆரம்ப காலம் முதலே நட்பு உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருவனந்தபுரம்: திராவிட இயக்கம் – கம்யூனிஸ்ட் இயக்கம் இடையே ஆரம்ப காலம் முதலே நட்பு உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். நாம் ஒரே கொள்கை உடையவர்கள் என்பதால் தான் அகில இந்திய அளவில் கூட்டணி வைத்துள்ளோம் எனவும் பேசியுள்ளார்.

பேசுவதற்கு மனசாட்சி தடுக்கிறது; வட்டியுடன் திருப்பி தருவேன்! ராஜஸ்தானில் மோடி உரை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நேற்றிரவு நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க தாமதமானதால் அவர் தனது மைக்ரோஃபோன் மைக் இணைப்பை துண்டித்து சுருக்கமாக உரையாற்றினார். பிரதமர் மோடி நேற்று குஜராத்தில் வந்தே பாரத் ரயில் சேவை உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் தனது 7வது நிகழ்ச்சியாக ராஜஸ்தான் மாநிலம் சிரோஹியில் உள்ள அபு ராட் பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்றார். ஆனால் பிரதமர் மோடி அங்கு சென்றடைய இரவு 10 மணியாகிவிட்டது. திட்டமிடப்பட்ட பேரணியில் … Read more