சுட்ட இடத்துக்கு வரும் இம்ரான் கான்; பாகிஸ்தான் அரசு பரபரப்பு உத்தரவு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த 3ம் தேதி பஞ்சாப் மாகாணத்தின் வாஜிராபாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்று இருந்தார். அப்போது அவரை அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டார். நாட்டு மக்களை தவறாக வழிநடத்தியதால் இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்டதாக, கைதான நபர் போலீசாரிடம் வாக்குமூலம் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தார். இதனிடையே துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இம்ரான் கான் லாகூரில் உள்ள அவருக்கு சொந்தமான … Read more

பிலடெல்பியாவில் மிகப்பெரிய துப்பாக்கி சூடு: 12 பேர் வரை உயிரிழப்பு

அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் துப்பாக்கி சூடு. 12 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். பொலிஸார் விசாரணை. பிலடெல்பியா மாகாணத்தில் உள்ள மதுபான விடுதி ஒன்றுக்கு வெளியே நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். பிலடெல்பியா மாகாணத்தின் கிழக்கு அல்லெக்னி மற்றும் கென்சிங்டன் பகுதியில் உள்ள மதுபான விடுதிக்கு வெளியே மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 12 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தகவல் … Read more

விளைபொருட்களை சேதப்படுத்திய குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்

கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலை பகுதியில் விவசாய விளைபொருட்களை சேதப்படுத்தி வந்த குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். திண்டுக்கல்  மாவட்டம், கொடைக்கானல் தாலுகா மன்னவனூர் பகுதியில் விளை  நிலங்களில் புகுந்து விளைபொருட்களை குரங்குகள் சேதப்படுத்தி வந்தன. இது  குறித்து வனத்துறையினரிடம் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள்  புகார் தெரிவித்தனர். இதனடிப்படையில் மன்னவனூர் வனத்துறை  ரேஞ்சர் நாதன் மற்றும் வன ஊழியர்கள் விலை நிலங்களுக்குள் புகுந்து  சேதப்படுத்தி வந்த குரங்குகளை பிடிக்க கூண்டு வைத்தனர். தொடர்ந்து கூண்டில் சிக்கிய  குரங்குகளை, … Read more

பூவை: கழிவு நீருடன் குடியிருப்பை சூழ்ந்துள்ள மழை நீர் – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பூவிருந்தவல்லியில் மழை நின்று 2 நாட்கள் ஆகியும் கழிவு நீரோடு கலந்த மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதோடு நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பூவிருந்தவல்லி நகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு முல்லாத் தோட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக மழை நீருடன் சேர்ந்த கழிவு நீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. தேங்கியுள்ள கழிவு நீர் துர்நாற்றம் வீசுவதோடு கொசு உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுவரை முலலாத் தோட்டத்தில் 10-க்கும் … Read more

வாரிசு படத்தின் கேரளா ரைட்ஸ்- 6 கோடிக்கு விற்பனையானது!!

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் நிலையில் தற்போது அப்படத்தின் பிரமோஷன் வேலைகளை பரபரப்பாக தொடங்கி விட்டார்கள். நேற்று விஜய் பின்னணி பாடி நடித்துள்ள ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியிருக்கிறது. இந்த பாடலை சோசியல் மீடியாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது வாரிசு படத்தின் கேரளா உரிமை குறித்த ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இப்படம் கேரளாவில் … Read more

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஐ.நா பொதுச் செயலாளரை இன்று சந்தித்தார்.

எகிப்தின் கெய்ரோவைச் சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அங்கே ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை சந்தித்தார். இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி அரசாங்கத்தின் தேசிய சுற்றாடல் கொள்கை தொடர்பில் செயலாளர் நாயகத்திற்கு விளக்கமளித்தார். இதன் போது 1978இல் இலங்கைக்கான தனது முதலாவது விஜயம் தொடர்பில் செயலாளர் நாயகம், ஜனாதிபதியிடம் நினைவுகூர்ந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி இன்று (06) காலை எகிப்து பயணமானார். … Read more

குடும்பத்தில் 4 பேரை கொலை செய்த சிறுவன்!!

15 வயது சிறுவன், தனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுவன், இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவனது தாத்தா, தாய், இளைய சகோதரி மற்றும் அத்தை ஆகியோரை ஈவு இரக்கமின்றி கோடாரியால் வெட்டி படுகொலை செய்தான். பேருந்து நடத்துநராக பணிபுரியும் சிறுவனின் தந்தை காலையில் வீட்டிற்குள் வந்தபோது, அங்கு இரத்தம் சிதறியிருப்பதையும், நால்வரின் உடல் … Read more

35 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மணிரத்னம் – கமல்ஹாசன்!!

உலக நாயகன் கமல்ஹாசனை இயக்குநர் மணிரத்னம் 35 ஆண்டுகளுக்கு பிறகு இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம் ஆகிய இருவரும் சமீபத்தில் மிகப்பெரிய வெற்றிப்படங்களை கொடுத்துள்ளனர். இந்நிலையில் நாயகன் படத்திற்கு பிறகு, அதாவது 35 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1987ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடத்த நாயகன் படம் வெளியானது. மணிரத்னம் இயக்கிய நாயகன் படம் இன்றளவும் உலக அளவில் ரசிகர்களால் பேசப்படும் படமாக உள்ளது. இந்நிலையில் தற்போது … Read more

IND v ZIM: சுழன்றடித்த சூர்யா; ஜிம்பாப்வேயை வீழ்த்தி டேபிள் டாப்பராக அரையிறுதிக்குச் சென்ற இந்தியா!

சூர்யாவின் அதிரடி அரை சதத்தால் ஜிம்பாப்வேயை வீழ்த்தி டேபிள் டாப்பராக, அரையிறுதிக்குள் கம்பீரமாக நுழைந்திருக்கிறது இந்தியா! Toss தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஓங்கிய நெதர்லாந்தின் கரத்தால் சூப்பர் 12-ல் ஜிம்பாப்வேவுடன் கடைசிப் போட்டியில் ஆடுவதற்கு முன்னதாகவே அரையிறுதிக்கு தேர்வாகி விட்டது இந்தியா. இருப்பினும், இந்தியா அரையிறுதியில் சந்திக்க வேண்டிய எதிரணியையும் நாளையும் தீர்மானிப்பதற்கான போட்டியாக ஜிம்பாப்வே உடனான இப்போட்டி மாறியது. பேட்டிங் செய்து கடின இலக்கை ஜிம்பாப்வேக்கு நிர்ணயிப்பார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல, பவர்கட் ஆனதாகவே இந்திய பவர்பிளே … Read more

கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூரில் ஆர்எஸ்எஸ் பேரணி: போலீஸ் பலத்த பாதுகாப்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆர்எஸ்எஸ் பேரணி: தமிழகம் முழுவதும் அக்.2-ம் தேதி 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கோரப்பட்டது. இந்த ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நவ.6-ம் தேதியன்று நிபந்தனைகளுடன் ஆர்எஸ்எஸ் … Read more