தான்சானியாவில் ஏரிக்குள் விழுந்த விமானம்: மீட்பு பணி தீவிரம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டொடோமா: தான்சானியாவில் விமானம் தரையிறங்கும் நேரத்தில் மோசமான வானிலை காரணமாக, ஏரிக்குள் விழுந்தது. விமானத்தில் இருந்து இதுவரை 23 பேர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.தான்சானியாவின் வான்ஜா என்ற நகரில் இருந்து புகோபா என்ற நகருக்கு 49 பயணிகளுடன் விமானம் சென்று கொண்டிருந்தது. புகோபா விமான நிலையம் அருகே தரையிறக்க வேண்டிய நேரத்தில் விமானம், மோசமான வானிலை காரணமாக, விமான நிலையத்தில் இருந்து 100 மீட்டர் … Read more

ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள், விட்டுச்சென்ற பெற்றோர்; வளர்த்தெடுக்க முன்வந்த மாவட்ட நிர்வாகம்!

சேலம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் சேலத்தை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த மாதம் 20-ம் தேதி பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகள் மிகவும் எடை குறைவாக இருந்ததால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். குழந்தைகளின் தாயும் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திடீரென குழந்தையின் பெற்றோர், `எங்களுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக, எங்களால் மூன்று பெண் குழந்தைகளையும் வளர்த்தெடுக்க முடியாது. … Read more

புத்தேரி – கீழ்கட்டளை ஏரிகள் இடையே நிரந்தர மழைநீர் வடிகால்: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: பல்லாவரம் புத்தேரியில் இருந்து கீழ்கட்டளை ஏரிக்கு தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள தனியார் நிலம் கையகப்படுத்தப்பட்டு, நிரந்தர மழைநீர் வடிகால் அமைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் பகுதியில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக தற்கால மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆய்வு செய்தார். இந்தப் பகுதிகளில் கடந்தாண்டு மழை வெள்ளத்தின்போது பெருமளவில் பாதிப்புகள் இருந்தன. பல்லாவரம் அருகில் இருக்கின்ற புத்தேரி என்ற … Read more

அந்தம்மா மூஞ்சியிலேயே முழிக்கக்கூடாதென்னுதான்… செமயாய் சமாளித்த அண்ணாமலை!

சென்னை மாத்தூரில் பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மேற்கு வ:ங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்காதது ஏன் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘இல.கணேசன் பாஜகவின் மூத்த நிர்வாகியாக இருந்தவர்; தமது இல்ல விழாவுக்கு வரும்படி தொலைபேசியில் அன்போடு அழைப்பு விடுத்திருந்தார். நானும் வருவதாக சொல்லியிருந்தேன். ஆனால் அந்த விழாவில் மேற்கு … Read more

ஏழுமலையானுக்கு இவ்வளவு.. சொத்தா?; தெறிக்கவிட்டது திருப்பதி தேவஸ்தானம்!

உலகில் அதிக மக்கள் தினமும் வந்து, சாமி தரிசனம் செய்யும் இடமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் விளங்கி வருகிறது. திருப்பதி வந்து, ஏழுமலையானை தரிசித்தால் வாழ்வில் திருப்பம் நிச்சயம் என, பரவலாகவே பேசப்படுகிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் திருப்பதி நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தை ஒட்டிய திருவேங்கட மலை மீது ஏழுமலையான் கோயில் உள்ளது. சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி மற்றும் வேங்கடாத்ரி ஆகிய 7 மலைகளுக்கு அதிபதி … Read more

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலை வாய்ப்பு – முழு விவரம்

தமிழ்நாடு அரசு சமூகப்பாதுகாப்புத்துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ வாட்சாலயா வழிகாட்டுதல்‌ நெறிமுறைகளின்‌படி மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு இயங்கி வரும்‌, அரியலூர்‌ மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு அலுவலகத்திற்கு ஆற்றுப்படுத்துநர்‌ பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.  பாதுகாப்பு அலுவலக காலிப் பணியிடங்கள்: ஆற்றுப்படுத்துநர்‌ எனப்படும் Counsellor பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. Counsellor வயது வரம்பு: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு … Read more

"நான் யாருக்கும் இத்தனை முறை போன் செய்ததில்லை!"- தெலுங்கு நடிகர் மீது கடுப்பான இயக்குநர் அர்ஜுன்

பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ள நடிகர் அர்ஜுன் இயக்குநராகவும் சில படங்களை எடுத்துள்ளார். இவர் தற்போது தனது மகள் ஐஸ்வர்யாவை தெலுங்குத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தும் விதமாக படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதற்கான படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகரான விஸ்வக் சென் முக்கியக் கதாபத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், விஸ்வக் படப்பிடிப்பிற்குச் சரியாக வரவில்லை என்றும் அதனால் அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன. விஸ்வக் சென், ஐஸ்வர்யா, … Read more

சென்னையில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் கழன்றது: டிரைவரின் சாமர்த்தியதால் பயணிகள் தப்பினர்

திருவள்ளூர்: சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்ட சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரு பெட்டிகளின் இணைப்பு துண்டானது. ஆனால் டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரிய உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு புறப்பட்டது. இதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். இந்த ரயில், திருவள்ளூர் அருகே நள்ளிரவு 11 மணி அளவில் வந்தபோது எஸ் 7, எஸ் 8 ஆகிய 2 பெட்டிகளில் பயங்கர சத்தம் ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். … Read more

கடலூரில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடங்கியது: 1000-ம் போலீசார் பாதுகாப்பு

கடலூர்: கடலூரில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் பேரணி தேரடி தெரு, சுப்பராய செட்டி தெரு, பெருமாள் கோயில் தெரு, போடி செட்டி தெரு வழியாக செல்கிறது. திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெரு தனியார் மண்டபம் அருகே தொடங்கிய ஆர்.எஸ்.எஸ். பேரணி பொதுக்கூட்ட திடலில் முடிகிறது.

நிறைமாத கர்ப்பிணியான நடிகை அலியா பட் மருத்துவமனையில் அனுமதி

மும்பை: நிறைமாத கர்ப்பிணியான நடிகை அலியா பட், இன்று காலை மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாலிவுட் நடிகை அலியா பட், கடந்த ஏப்ரல் மாதம் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூன் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக அலியா பட் தெரிவித்தார். நிறைமாத கர்ப்பணியான அலியா பட், இன்று காலை 7.30 மணியளவில் மும்பையில் உள்ள எச்என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அலியா பட்டின் தந்தை மகேஷ் பட் … Read more