சூறைக் காற்றுடன் கனமழை; ராமேஸ்வரத்தில் 10 படகுகள் சேதம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த பலத்த மழைக்கு 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதமடைந்தன. ராமேஸ்வரத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இரவு நேரத்தில் கடலில் பலத்த காற்றும் வீசி வருகிறது. அது போல் நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியது. இதில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் படகு நிறுத்தும் ஜெட்டி பாலத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி பக்கப்பலகைகள் உடைந்தன. இதில் பத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் விசைப்படகுகள் … Read more

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கனமழை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை பெய்து வருகிறது. சோதனை சாவடி, அம்மன்கோவில் தெரு, டோல்கேட், விராலூர் உள்ளிட்ட ஊர்களில் கனம்ழை பெய்து வருகிறது.

உத்தரகாண்டிலும் இந்தியில் எம்பிபிஎஸ்

டேராடூன்: நாட்டிலேயே முதல் முறையாக கடந்த அக்டோபர் 16ம் தேதி மத்தியப்பிரதேசத்தில் இந்தியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து இரண்டாவது மாநிலமாக உத்தரகாண்டிலும் இந்தியில் மருத்துவ படிப்பு தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பாக அம்மாநில கல்வி துறை அமைச்சர் தான் சிங் ராவத் கூறுகையில், ‘‘இந்தி மொழிக்கு ஒன்றிய அரசு சிறப்பு கவனம் செலுத்துவதை கருத்தில் கொண்டு அடுத்த கல்வியாண்டு முதல் அரசு மருத்துவ கல்லூரிகளில் ஆங்கிலம் … Read more

திருச்சி-தஞ்சை இடையே வர்த்தகம் மேம்பட புதிய முயற்சி!- தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் – தஞ்சை திருக்காட்டுப்பள்ளி இடையே, கல்லணை கொள்ளிடம் புதிய ஆற்று பாலம் வழியாக செல்லும் வகையிலான பேருந்து சேவையினை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார். வரலாற்றில் முதல் முறையாக இந்த தடத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதால், திருச்சி- தஞ்சை இடையே வேளாண் வர்த்தகமும், கிராம பகுதி மக்களின் வேலை வாய்ப்புகளும் மேம்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி – தஞ்சை இடையிலான கல்லணை கதவணை பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல … Read more

இந்தியாவில் ட்விட்டர் ப்ளூ டிக் கட்டண அமல் எப்போது… தகவல் அளித்த எலான் மஸ்க்!

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியபின் பல்வேறு அதிரடி மாற்றங்களை அமல் படுத்தி வருக்கிறார். முதல் வேலையாக ட்விட்டர் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் அனைவரையும் வெளியேற்றிவிட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், நிறுவனத்தின் கொள்கைத் தலைவர் விஜயா காடே மற்றும் பலரை நிறுவனத்தில் இருந்து நீக்கினார். தொடர்ந்து ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகிறார்.  எலோன் மஸ்க் இன்று டிவிட்டர் நிறுவன பணி நீக்கங்களுக்கு பதிலளிக்கையில், ஒரு … Read more

காஞ்சிபுரம் || தண்டவாளத்தில் தவறி விழுந்த 14 வயது சிறுவன் உயிரிழப்பு.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தண்டவாளத்தில் தவறி விழுந்த 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காளிமேடு பகுதியில் வசித்து வசிப்பவர் காளிதாஸ். இவரது மனைவி அன்னபூரணி. இவர்களுக்கு ரித்திஷ்(14), யுவனேஷ், விக்னேஷ் என்ற 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகனான ரித்திஷ் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.  இந்நிலையில் ரித்தீஷ் நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து பேசி கொண்டிருந்தான். பின்பு … Read more

தமிழக விவசாயிகளுக்கு வேளாண்துறை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!

விவசாயிகள் நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு வருகிற 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தற்போது, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழு வீச்சில் நடக்கிறது. 24.13 லட்சம் ஏக்கர் நெற்பயிரில், 5.90 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை 10.38 லட்சம் விவசாயிகள் இதுவரை காப்பீடு செய்துள்ளனர். தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், … Read more

“ஆர்.எஸ்.எஸ் பேரணி ஓர் ஆபத்தான அறிகுறி… இது நல்லதல்ல!" – எச்சரிக்கிறார் திருமாவளவன்

இந்திய கடற்படையினர் தமிழக மீனவர்கள்மீது நடத்திய துப்பாக்கிச்சூடு, இந்தித் திணிப்பு, மாநில உரிமைகள் பறிபோவது உள்ளிட்ட பிரச்னைகளை மையப்படுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தி முடித்த சூட்டோடு அமர்ந்திருந்த வி.சி.க தலைவர் திருமாவளவனை, அவரது சென்னை அலுவலகத்தில் சந்தித்தேன். தகிக்கும் தமிழ்நாட்டு அரசியல் குறித்த கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இங்கே… “கோவை குண்டு வெடிப்புச் சம்பவம், 1998-ல் நிகழ்ந்த கோவை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை நினைவுபடுத்துவதாக விமர்சிக்கப்படுகிறதே?” “கோவைச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று. … Read more

ராமேசுவரத்தில் சூறைக் காற்றுடன் கனமழை; படகுகள் சேதம்

ராமநாதபுரம்: ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் இரவு சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் நங்கூரம் அறுந்து ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன. இதில் வின்னரசன், கென்னடி, கிருபை, அந்தோணிராஜ், முருகன், சவரிமுத்து, ஜெராண்டோ உள்ளிட்ட 10 பேரின் படகுகள் கடும் சேதமடைந்தன. மேலும் 20 படகுகளில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது. 5 படகுகள் நங்கூரம் கழன்று கரை ஒதுங்கின. இந்த படகுகளை சூறைக்காற்று நின்றதும் இரவோடு இரவாக மீனவர்கள் … Read more