செய்யாறு அருகே நெல்வாய் கிராமத்தில் 9ம் நூற்றாண்டு அய்யனார் சிலை, கருடாழ்வார் சிற்பம் கண்டெடுப்பு

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா நெல்வாய் கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர் எறும்பூர் செல்வக்குமார் ஆய்வு நடத்தியதில், வயல்வெளி நடுவில் செல்லியம்மன் கோயில் அருகே புதைந்து கிடந்த அய்யனார் சிலை, கருடாழ்வார் சிற்பம் பொறித்த கல்தூண், ஸ்தூபக்கல், சந்து தெருவில் கோமாரிக்கல் ஆகியவற்றை கண்டெடுத்தார். இதுகுறித்து செல்வகுமார் கூறியதாவது: அய்யனார் சிற்பம் 34 சென்டிமீட்டர் உயரமும், 22 சென்டிமீட்டர் அகலமும் உடையது. அய்யனாரின் தலையை அடர்ந்த ஜடா பாரம் அலங்கரிக்கிறது. காதில் பத்திர குண்டலமும், கழுத்திலும் கால்களிலும் … Read more

ஒன்டைம் செட்டில்மென்ட்டில் கால நீட்டிப்பு கேட்க உரிமை கோர முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘ஒன்டைம் சென்ட்டில்மென்ட்டில் (ஒருமுறை தீர்வு திட்டம்) கடன் வாங்கியவர் கால நீட்டிப்பு கேட்பதற்கு உரிமை கோர முடியாது’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்று வாங்கிய கடனை திருப்பி செலுத்த எஸ்பிஐ வங்கியுடன் ஒன்டைம் செட்டில்மென்ட் செய்துள்ளது. இதன்படி, கடன் பாக்கியில் 25 சதவீதத்தை 2017ம் ஆண்டு டிசம்பர் 21ல் டெபாசிட் செய்வதாகவும், மீதமுள்ள தொகையை வட்டியுடன் சேர்த்து 6 மாதத்தில் செலுத்தி விடுவதாகவும் ஒப்பந்தம் செய்தது. ஆனால், அதன்பிறகு மீதமுள்ள தொகை … Read more

விடுதியில் மாணவரை தாக்கி அயர்ன் பாக்சால் சூடு| Dinamalar

அமராவதி, :ஆந்திர பிரதேசத்தில், தனியார் பொறியியல் கல்லுாரியின் விடுதியில், ஒரு மாணவரை சக மாணவர்கள் கம்பால் தாக்கியதுடன், ‘அயர்ன் பாக்ஸ்’ மூலம் சூடு வைத்த, ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆந்திர பிரதேசத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரத்தில் தனியார் பொறியியல் கல்லுாரி ஒன்று உள்ளது. இதன் விடுதியில் உள்ள ஒரு அறையில், கம்ப்யூட்டர் சயின்ஸ் பயிலும் ஐந்து மாணவர்கள் தங்கியுள்ளனர். இவர்களில் … Read more

ஷங்கர் – சூர்யா இணையும் வேள்பாரி படத்தின் படப்பிடிப்பு எப்போது?

கமல் நடித்து வரும் இந்தியன்-2 மற்றும் ராம்சரண் நடிக்கும் ஆர்சி -15 ஆகிய இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார் ஷங்கர். இந்த படங்களை தொடர்ந்து பார்லிமென்ட் எம்பி சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற சரித்திர நாவலை தழுவி தனது புதிய படத்தை எடுக்க உள்ளார். சுமார் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் மூன்று பாகங்களாக ஷங்கர் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படம் குறித்து விருமன் படத்தின் ஆடியோ விழாவில் பேசிய சூர்யா, … Read more

ரூ.50 கோடி, இரவு விருந்து.. கெஜ்ரிவால் மீது சுகேஷ் குற்றச்சாட்டு.. பா.ஜ.க.,வை தாக்கும் ஆம் ஆத்மி

ரூ.50 கோடி, இரவு விருந்து.. கெஜ்ரிவால் மீது சுகேஷ் குற்றச்சாட்டு.. பா.ஜ.க.,வை தாக்கும் ஆம் ஆத்மி Source link

பல பெண்களின் பாலியல் வீடீயோக்கள்.. பர்னிச்சர் கடை ஓனரின் மோசமான செயல்.! 

சென்னை அருகே பள்ளிக்கரணை பகுதியில் குமரன் பர்னிச்சர் நிறுவன உரிமையாளர் அருண்குமார் என்பவர் தூத்துக்குடி மாவட்டத்தை சொந்த ஊராகக் கொண்டவர்.தனது பர்னிச்சர் கடையில் விற்பனையாளராக பணிபுரிகின்ற பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.  பணி முடிந்து வீட்டிற்கு சென்ற பின்னும் கூட அந்த பெண்களை வீடியோ காலில் பேச சொல்லி வற்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சில நாட்கள் இதுபோல சென்ற நிலையில் தங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லாததால் கைவிடப்பட்ட அந்த பெண்கள் வேதனையில் இருந்து வந்தனர். … Read more

பேருந்து நிறுத்தத்தில் தாலி கட்டிய விவகாரத்தில் போலீசாரின் செயலுக்கு நீதிமன்றம் அதிருப்தி..!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கிராமப் பகுதிகளுக்கு செல்லும் மினி பேருந்துகளுக்கான பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தம் ஒன்றில் பள்ளிக்கூட சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்க்கு சீருடையில் இருக்கும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவன் ஒருவன் மஞ்சள் கயிறு தாலி கட்டியுள்ளார். இதனை உடன் இருந்த மாணவன் ஒருவன் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில், கட்டுயா… கட்டுயா என்று கூற.. மாணவனும் மாணவிக்கு தாலி கட்டியுள்ளார். அப்போது பூவிற்கு பதிலாக காகிதங்களை … Read more

படையை நடுங்கச் செய்யும் பாம்பின் பாசம் – இறந்த இணையை பிரியாமல் தண்ணீருக்குள்ளேயே காத்திருந்த பாம்பு..!

படையை நடுங்கச் செய்யும் பாம்பிற்கும் நட்பு, பிரிவின் வலி உண்டு. சேலம் காடையாம்பட்டியில் விவசாயி பிரபாகரன் தனது பூந்தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது குழாயில் இருந்த இரண்டு பாம்புகள் பண்ணைக் குட்டையில் விழுந்தது. அவைகள் ஒன்றுக்கொன்று பிணைந்து விளையாடிய நிலையில் சாரைப்பாம்பு மயக்கமுற்று தண்ணீருக்குள் இறந்தது. ஆனால், உடனிருந்த நல்ல பாம்போ தனது நட்பு பிரிந்த நிலையில் அந்த இடத்தை விட்டு நகராமல் இறந்த பாம்பையே பார்த்துக் கொண்டிருந்தது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் நல்ல பாம்பை … Read more

கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைப்பு – மேல்முறையீடு செய்யத் திட்டம்

சென்னை: தமிழகத்தில் இன்று நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நிபந்தனைகளுடன் பேரணி நடத்த உத்தரவிட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் ஆர்எஸ்எஸ் அமைப்பு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி 50 இடங்களில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்தது. இதற்காக, அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் அனுமதி கோரியிருந்தனர். ஆனால், நாடு முழுவதும் பாப்புலர் … Read more

தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி 3ம் ஆண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை

தர்மபுரி: சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் இளம்பரிதி(21). இவர் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில், 3ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். நேற்று மாலை சக மாணவர்கள் வெளியே அழைத்த போது, அசைன்மென்ட் உள்ளதாகக்கூறி அறையிலேயே இருந்தார். வெளியே சென்ற மாணவர்கள், இரவு 7.30 மணியளவில் திரும்பி வந்த போது, இளம்பரிதி பேனில் டவலால் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள் … Read more