சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் காலமானார்!

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி காலமானார். அவருக்கு வயது 105. இமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மீது தீராத நம்பிக்கை கொண்ட ஷியாம் சரண் நேகி மறைவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் தெரிவித்துள்ளது. “தேசத்திற்கான அவரது சேவைக்கு நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” என்று தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான இந்தியர்களை … Read more

வெறும் 20 நாட்களில் எடுக்கப்பட்ட படம்! மிரட்டும் 'மிரள்' ட்ரைலர்!

அறிமுக இயக்குனர் எம் சக்திவேல் இயக்கத்தில் நடிகர் பரத் மற்றும் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்பட்டு தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து கொண்டிருக்கும் நடிகை வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிரள்’.  இந்த படத்தின் மூலம் பரத் மற்றும் வாணி போஜன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர், ஏற்கனவே பரத்தின் 50ஆவது படமான ‘லவ்’ என்கிற படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்திருந்தார்.  ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள இந்த ‘மிரள்’ படம் ஒரு ஸ்லாஷர் த்ரில்லர் … Read more

மதுரையில் ஒரு பரியேறும் பெருமாள் – கல்லூரி வாசலில் தந்தை மீது தாக்குதல்… 6 பேர் கைது

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தில், கல்லூரி வாசலிலேயே கதாநாயகனின் தந்தையை மாணவர்கள் தாக்கும் காட்சி ஒன்று வரும். அந்தக் காட்சியை திரையில் பார்த்தாலே அனைவருக்கும் ஒருவித அதிர்ச்சியை ஏற்படுத்தும். அதே சம்பவம் போன்று நிஜத்தில் மாணவியின் தந்தைக்கு மதுரையில் அரங்கேறியுள்ளது. மதுரை மீனாட்சி அரசு கலை கல்லூரி சாலையில் கடந்த 3ஆம் தேதி மாலை மதுரை அரசு மருத்துவமனையிலிருந்து அமரர் ஊர்தி வந்துகொண்டிருந்தது.  அந்த ஊர்திக்கு முன்பாக சில இளைஞர்கள் முழு போதையில் … Read more

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 500 கனடி அடியாக அதிகரிப்பு..

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 100 கன அடியில் இருந்து 500 கன அடியாக அதிகரிப்பு செய்யப்பட்ட உள்ளது. இதையடுத்து ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் செம்பரம்பாக்கம், புழல் போன்ற ஏரிகள் முழு கொள்ளவை நெருங்கி வருவதால், பாதுகாப்பு … Read more

கண் பார்வையில் ஏற்பட்ட பிரச்சினையும் நன்மைக்கே என்று கூறும் இளவரசர் வில்லியம்: பின்னணியில் ஒரு பயம்

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விடயம் பயத்தை ஏற்படுத்தும். ஒரு குறிப்பிட்ட விடயத்துக்காக பயப்படுவதை ஆங்கிலத்தில் ஃபோபியா (phobia) என்கிறார்கள். சிலர் உயரமான இடங்களுக்குச் செல்ல பயப்படுவார்கள், சிலர் இருட்டைப் பார்த்தால் பயப்படுவார்கள், இப்படி ஒரு குறிப்பிட்ட விடயத்துக்காக பயப்படுவதை ஆங்கிலத்தில் ஃபோபியா (phobia) என்கிறார்கள்.  இளவரசர் வில்லியம் மற்றும் ஹரிக்கும் கூட ஒரு விடயம் பயத்தை ஏற்படுத்துமாம். ஆம், மக்கள் கூட்டத்தின் முன் நின்று பேசுவதற்கு இருவருக்குமே பயமாம். தனது பயத்தை தான் எப்படி சமாளித்தேன் என்பது குறித்து … Read more

கரகாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை : பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை விதித்து கரகாட்டத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. கரகாட்ட நிகழ்ச்சிகளில் இரட்டை அர்த்த வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியிருக்கிறது. நீதிமன்ற கட்டுப்பாடுகளை மீறினால் நிகழ்ச்சியை நிறுத்த, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கரகாட்ட நிகழ்ச்சியை இரவு 7 மணி முதல் 10 மணி வரை நடத்த வேண்டுமே என்றும், கரகாட்ட நிகழ்ச்சியில் விரும்பத்தகாத சம்பவம் நடந்தால், நிகழ்ச்சி அமைப்பாளர்களே பொறுப்பு என்றும் … Read more

புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் தாமதம் செய்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் தாமதம் செய்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். புகார் கொடுத்த காலகட்டத்தில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தலைமை செயலருக்கு உத்தரவு அளித்துள்ளனர். பொது நலன் கருதி அரசி அதிகாரிகள் தங்களது கடமையாய் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று … Read more

பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் தாம்பரம் சீசிங் ராஜா ஆந்திர எல்லையில் கைது: சிறப்பு தனிப்படை போலீசார்

ஆந்திரா: பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் தாம்பரம் சீசிங் ராஜா ஆந்திர எல்லையில் கைது செய்துள்ளனர்.  சீசிங் ராஜா மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என முப்பதுக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கூலிப்படை கும்பல் தலைவன் தாம்பரம் சீசிங் ராஜாவிடமிருந்து ஒரு காய் துப்பாக்கியும் பறிமுதல் செய்துள்ளனர். வேளச்சேரியில் பணம் கேட்டு மிரட்டிய வழக்கு தொடர்ச்சியாக கைது என சிறப்பு தனிப்படை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைப்பு

நாளை நடைபெறுவதாக இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது தகவல்கள் வெளியாகியுள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்தவுடன் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் பல இடங்களில் அனுமதி வழங்கவில்லை என காவல் துறைக்கு எதிராக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த … Read more

சுற்றுலா விசாவில் தொழில் தேடி வெளிநாடு செல்ல வேண்டாம்

சுற்றுலா விசாவில் தொழில் தேடி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் சென்ற பலர் தொழில் இன்றி நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக ,இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார். இதனால், சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்ல எதிர்பார்த்திருப்பவர்ளுக்கான பதிவு பணியகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் … Read more