விசேட பஸ் சேவைகள்

நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டத்திற்காக தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் சேவை இடங்களுக்குத் திரும்புவதற்கு வசதியாக இன்று (01) தொடக்கம் விசேட பஸ் சேவை நடைமுறைப்படுத்தப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தமது போக்குவரத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அறிவிப்பதற்கு வசதியாக 1955 அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபை இவர்களுக்காக விசேட பஸ் சேவைகளை முக்கிய பஸ்தரிப்பு நிலையங்களில் இருந்து நடைமுறைப்படுத்துகிறது.

புத்தாண்டு கொண்டாட்டம் | மெரினாவில் குவிந்த மக்கள்!

சென்னை, மெரினா கடற்கரையில் புத்தாண்டையொட்டி குடும்பம் குடும்பமாக மக்கள் படையெடுத்து வந்தனர். ஒரே நாளில் குவிந்து வரும் மக்களால் காமராஜர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக இன்று பழவேற்காடு கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடலில் குளித்து உற்சாகம் அடைந்தனர். அதே சமயத்தில், பழவேற்காடு ஏரியில் தடையை மீறி சுற்றலா பயணிகள் படகு சவாரி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உயிர் காக்கும் லைஃப் ஜாக்கெட் போன்ற … Read more

ரஷ்யா-உக்ரைனால் 3 ஆம் உலகப்போர் சாத்தியம்…டிரம்ப் எச்சரிக்கை!…

ரஷியா-உக்ரைன் போரில், 3-ம் உலகப் போரை கட்டவிழ்த்து விடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் பீச்சில் தனது மார் எலாகோ பண்ணை வீட்டில், அவரது மனைவி மெலனியா டிரம்ப்புடன் சேர்ந்து புத்தாண்டு தினத்தை கொண்டாடினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டு மக்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.   பின்னர் உக்ரைன் போர் குறித்து பேசிய அவர், ரஷியா-உக்ரைன் இடையிலான … Read more

புத்தாண்டு ஷெட்யூல்!| சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் மணி 12 ‘விஷ் யூ ஹாப்பி ந்யூ இயர்.’ மகன் விக்கி, மகள் ஷாலினி இருவரும் உள்ளங் கைகளை அபயஹஸ்தமாய் நீட்டக் கைகளைத் தட்டிப் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டாள் லோசனி. உலகெங்கும் ஒலிக்கும் வாழ்த்துக்களுடன் அவர்கள் வீட்டு வாழ்த்தொலிகளும் எழுந்துக் காற்றோடுக் … Read more

சேலம் அருகே கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் பெண் பலி..!

சேலம் அருகே, சாலையில் கவனக்குறைவாக திரும்பிய கார் மீது, தனியார் பேருந்து மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியான நிலையில், இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ், அவரது மனைவி உள்பட 3 பேர், இன்று காலை உறவினர் வீட்டிற்கு காரில் சென்றுள்ளனர். ராக்கிப்பட்டியில், சாலையின் வலதுபுறமாக  கார் சென்ற நிலையில், திடீரென இடதுபுறமாக செல்ல முயற்சித்து, கோவிந்தராஜ் காரை திருப்பிய போது, ஈரோடு நோக்கி சென்ற தனியார் பேருந்து கார் மீது … Read more

திமுக ஆட்சியின் இரட்டை நிலைப்பாடே இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டுக்கு காரணம்: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: “லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்பாததன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு அரசால் வருவாய் மிச்சப்படுத்தப்பட்டு இருக்கின்ற நிலையில், இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் அரசுக்கு பெரிய சிரமம் இருக்காது” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவின் தேர்தல் அறிக்கை பக்கம் 83, வரிசை எண் 311-ல் “ரூ. 8000/- அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அதிமுக ஆட்சியில் … Read more

சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் 3 பேர் உயிரிழப்பு; ஒரே வாரத்தில் 2வது சம்பவம்.!

ஆந்திராவின் கந்துகுரு நகரின் சிவாலயம் தெருவில், முன்னால் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த 28ம் தேதி பேரணி நடத்தினார். முக்கிய வீதிகளில் பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், சிறிய சாலைகளிலும் பேரணி சென்றது. இதனால் நெரிசலில் சிக்கி தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சந்திரபாபு நாயுடு இன்று தனது கட்சி தொண்டர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். “இது ஒரு சோகமான சம்பவம். நான் மிகவும் … Read more

மகன் போதைப் பொருளுக்கு அடிமை: பொலிஸாரிடம் ஒப்படைத்த தாய்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சரியாக கண்காணிக்க வேண்டும். பிள்ளைகளை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் தவறும் பெற்றோர்களால் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகின்றது. இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட வலைஞர் மடம் கிராமத்தில் போதைக்கு அடிமையான 24 அகவையுடைய மகனை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 24 அகவையுடைய இளைஞன் வீட்டில் தந்தை இல்லாத நிலையில் தாயின் அரவணைப்பில் … Read more

2 மாதத்துக்கு பிறகு வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி துவக்கம்

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் பகுதிகளில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடந்து வருகிறது. சிறு உப்பு உற்பத்தியாளர்கள் 850 பேர், 3000 ஏக்கரில் உணவு உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர். மீதமுள்ள 6,000 ஏக்கரில் கோடியக்காடு, கடினல்வயல் பகுதியில் தொழிற்சாலைக்கு தேவையான உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.     வேதாரண்யத்தில் ஆண்டுதோறும் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, … Read more