ஒருங்கிணைப்பாளர்கள் பெயரில் தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தை திருப்பி அனுப்பிய அதிமுக
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பெயரில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அனுப்பிய கடிதத்தை, அதிமுக தலைமை அலுவலகம் திருப்பி அனுப்பியுள்ளது. அதிமுகவில் தேர்தல் நடத்தப்பட்டு, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது தொடர்பான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. … Read more