ஆடல்பாடலுடன் 2023-க்கு வரவேற்பு..!

ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததையொட்டி நள்ளிரவில் தனியார் விடுதிகளில் இளைஞர்கள்- இளம்பெண்கள் ஆடல்பாடலுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் தண்டையார்பேட்டையில் குடியிருப்புப் பகுதியில் திரளான பொதுமக்கள், குழந்தைகள் நள்ளிரவில் நடனமாடி மகிழ்ந்தனர். சென்னை கிண்டி கத்திப்பாரா சதுக்கத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர். திருச்சி தனியார் ஹோட்டலில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்றனர். மதுரையில் குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர் கோவையில் தனியார் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக … Read more

கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை – அரசாணைக்கு கட்சித் தலைவர்கள் கண்டனம்

சென்னை: கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் கரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க,மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலமாகவும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். மாதம் ரூ,14 ஆயிரம் ஊதியத்தில் பணியமர்த்தப்பட்ட அவர்களுக்கு, … Read more

கேரள மாநிலம் சபரிமலையில் : நிலம் கையகப்படுத்த உத்தரவு

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு அருகில் உள்ள செருவல்லி எஸ்டேட்டில் விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த கேரள அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விமான நிலையத்துக்காக கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செருவல்லி எஸ்டேட்தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக எருமேலி மற்றும் மணிமலா கிராமத்தில் 2,570 ஏக்கர் நிலம்கையகப்படுத்தப்பட உள்ளது. இதுதவிர்த்து செருவல்லி எஸ்டேட்டுக்கு வெளியே 370 ஏக்கர் பரப்பிலான நிலம் கையகப்படுத்தப்படும் என்றும் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதால்பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு … Read more

புத்தாண்டில் ஆபத்தான XBB.1.5 வைரஸ்… இந்தியாவில் முதல்முறை பாசிடிவ்… அவசர ஏற்பாடுகள்!

XXB.1.5 ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் . இப்படி ஒரு சிக்கலான பெயரை பெரிதாக கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக இந்தியர்கள் முதல்முறை கேள்விப்படலாம். இந்த வைரஸ் நமது நாட்டிற்குள் நுழைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் குஜராத் மாநிலத்தில் முதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு விஷயம் தீயாய் பரவி கொண்டிருக்கிறது. ஏன் ஒட்டுமொத்த இந்தியாவிலேயே இதுதான் முதல் நோய்த்தொற்று. இந்த வைரஸ் அப்படியென்ன செய்துவிடும் என்று கேட்கிறீர்களா? இங்கு தான் விவகாரமான விஷயமே இருக்கிறது. அமெரிக்காவில் தற்போது … Read more

டுபாய் விமான நிலையத்தில் கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலைமை

டுபாய் விமான நிலையத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டுபாய் விமான நிலையத்தின் விசேட பிரமுகர் முனையத்தை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்குமாறு ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அந்த கோரிக்கையை டுபாய் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். இது தொடர்பான தொகையை கோட்டாபய ராஜபக்ஷ செலுத்த வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, இலங்கை நாணயத்தில் 260,000 ரூபாவை செலுத்துமாறு விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Source link

கார் ஓட்டும்போது போதையில் இருந்தாரா ரிஷப் பண்ட்?

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் நேற்று முன்தினம் காலை 5 மணியளவில் உத்தரகண்ட் – டெல்லி நெடுஞ்சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தபோது, சாலை டிவைடரில் மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.  தற்போது உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கார் ஓட்டிய  ரிஷப் பண்ட் மது போதையில் இருந்ததாக தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி, ரிஷப் பண்ட் அதிவேகமாக சென்றார் எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து, ஹரிதுவார் … Read more

புத்தாண்டின் முதல் நாளில் டெல்லியில் நிலநடுக்கம்

சென்னை: தலைநகர் டெல்லியில் புத்தாண்டின் முதலான காலை சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. ஹரியானா மாநிலத்தின் ஜஜ்ஜார் அருகே 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.   நிலநடுக்கத்தால் காயம் அல்லது சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. ” ஜன. 1, 2023 அன்று நிகழ்ந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு 3.8 ஆகும். இது … Read more

நீங்கள் தொடுபவை யாவையும் ஆனந்தமானதாய் மாற்றுவதில் உள்ள நிறைவை உணர்ந்திடுங்கள்: சத்குரு

கோவை: ஆனந்தமாய் இருப்பதுதான் உங்களுக்கும் சுற்றியுள்ள அனைவருக்கும் நீங்கள் செய்யக்கூடிய மிகச்சிறந்த விஷயம் என சத்குரு கூறியுள்ளார். ஆனந்தமான மனிதர்கள் இயல்பாகவே அனைவருக்கும் நல்வாழ்வை உருவாக்கவே முனைவார்கள். நீங்கள் தொடுபவை யாவையும் ஆனந்தமானதாய் மாற்றுவதில் உள்ள நிறைவை உணர்ந்திடுங்கள் என சத்குரு கூறினார்.

புத்தாண்டை ஒட்டி நாடு முழுவதும் உள்ள கோயில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு

புத்தாண்டை ஒட்டி நாடு முழுவதும் உள்ள கோயில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று மக்கள் சாமி தரிசனம் செய்தனர். திருப்பதி, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி, திருச்செந்தூர், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட கோயில்களில் மக்கள் வழிபாடு செய்து வந்தனர்.

மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000-ஆக உயா்த்த ஒன்றிய அரசு திட்டம்

டெல்லி: 2024-ஆம் ஆண்டு மாா்ச்-க்குள் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000-ஆக உயா்த்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.  ஏழைகளுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்குவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன், பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தக திட்டம் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குறைந்த விலையில் மருந்துப் பொருள்களை விற்பனை செய்து வரும் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 2024-ஆம் ஆண்டு மாா்ச்-க்குள் 10,000-ஆக உயா்த்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 2017-ஆம் … Read more