இந்திய பட்ஜெட் 2023: கூச்சல், கோஷம், கண்டனங்கள், வெளிநடப்பு இல்லாமல் முடிந்த பட்ஜெட் தாக்கல்!

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஐந்தாவது பட்ஜெட் இது. இதற்கு முன்பு மொரார்ஜி தேசாய், மன்மோகன் சிங், யஷ்வந்த் சின்ஹா, சிதம்பரம், அருண் ஜேட்லி ஆகியோர் தொடர்ந்து ஐந்து முறை பட்ஜெட் செய்த நிதி அமைச்சர்கள் ஆவர். 2024-ல் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால், 2024-ல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்-ஆகவே அமையும். பட்ஜெட் 2023 மத்திய பட்ஜெட் 2023: எந்தெந்தப் பொருள்கள் விலை அதிகரிக்கும், குறையும்? … Read more

தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை – திரிகோணமலையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக்கூடும் என்பதால், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணி வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் செந்தில்முருகன் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெற்றி வேட்பாளராக, டி.செந்தில்முருகனை கட்சியின் வெற்றி வேட்பாளராக தேர்தல் களத்தில் நிறுத்தப்படுகிறார். வேட்பாளர் செந்தில்முருகன் கட்சியினுடைய தீவிர விசுவாசி. தீவிர உறுப்பினர். கட்சியின் மீதும், எம்ஜிஆர் மற்றும் … Read more

சுற்றுலா துறைக்கு மிக அதிக முன்னுரிமை: மத்திய பட்ஜெட் 2023-ல் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

புதுடெல்லி: நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த சுற்றுலாத் துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2023-24ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அப்போது, அவர் ஆற்றிய உரை: ”அமிர்த காலத்தின் முதல் பட்ஜெட் இது. முந்தைய பட்ஜெட்கள் மூலம் உருவான வலிமையான கட்டமைப்பின் மீது மிகுந்த நம்பிக்கையை அளிக்கும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த நூறாவது … Read more

ஓபிஎஸ் வேட்பாளர் அறிவிப்பு; முடங்குமா இரட்டை இலை..?

ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியிருந்தார். மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அவர் சந்தித்த நிகழ்வும் நடைபெற்றது. ஆனால், இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவதாக தெரியவில்லை. இந்த நிலையில், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பில் நேற்றைக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் இன்று வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னையில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஓபிஎஸ் , ஈரோடு கிழக்கு தொகுதியில் தமது … Read more

Poorna Baby Shower: நடிகை பூர்ணா கர்ப்பம்… கோலாகலமாக நடைபெற்ற வளைகாப்பு!

நடிகை பூர்ணாவின் வளைக்காப்பு கோலாகலமாக நடைபெற்றுள்ளது. நடிகை பூர்ணாகேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தையில் பகுதியை சேர்ந்தவர் நடிகை பூர்ணா. ஷாம்னா காஸிம் என்ற தனது பெயரை சினிமாவுக்காக பூர்ணா என மாற்றிக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான மஞ்சு போலொரு பெண்குட்டி என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான பூர்ணா, தொடர்ந்து பல்வேறு மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் 2008ஆம் ஆண்டு வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் என்ட்ரி … Read more

Adani FPO: அதானியின் பங்குகளை வாங்கி கை கொடுத்த இந்திய தொழிலதிபர்கள்!

கடந்த வாரம், ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற அமெரிக்க நிறுவனத்தின் அறிக்கை, அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பின் சரிவுக்கு காரணமாகியது. இதற்கிடையில், குழுமத்தின் முன்னணி நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸின் FPO (ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபர்) வெளியானது. முதலீட்டாளர்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மை நிலவிய நிலையில், கடைசி நாள் வரை FPO சப்ஸ்கிரைப் செய்யப்படுமா இல்லையா என்ற ஊகங்கள் தொடங்கும் அளவுக்கு நிலைமை ஆனது. FPOக்கான சந்தா செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது. ஆனால் அபுதாபியை தளமாகக் கொண்ட சர்வதேச … Read more

”வளர்ந்த நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கான அடித்தளம் அமைக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது..” – பிரதமர் மோடி..!

வளர்ந்த நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கான அடித்தளம் அமைக்கும் வகையிலும், அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையிலும் பட்ஜெட் அமைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து உரையாற்றிய அவர், விவசாயிகள், தொழிற்துறையினர், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவருக்கும் பலன் தரும் வகையிலும், வேளாண்துறையில் டிஜிட்டல் நுட்பங்களை பயன்படுத்தவும் பட்ஜெட் வழிவகை செய்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் பிரதமர் கூறினார். Source … Read more

வாரம் ரூ.4.5 கோடி., இறப்பதற்குள் ரூ.1800 கோடியை செலவழித்த பிரித்தானியாவின் மிகப்பெரிய லோட்டரி வெற்றியாளர்

பிரித்தானியாவின் மிகப்பெரிய லோட்டரி வெற்றியாளர், இறப்பதற்கு முன் தனது ரூ.7,275 கோடி ஜாக்பாட்டில் ரூ.1800 கோடியை செலவழித்துள்ளார். பிரித்தானியாவின் மிகப்பெரிய லோட்டரி வெற்றியாளர்களில் ஒருவரான கொலின் வீர் (Coline Weir), தனது பரிசுத் தொகையில் ஒரு வாரத்திற்கு £100,000 (இலங்கை பணமதிப்பில் ரூ.4.5 கோடி) வீதம் பாரிய தொகையை செலவிட்டதாக ஆவணங்கள் வெளியாகியுள்ளன. லொட்டரியில் ரூ.7,275 கோடி பரிசு 2011-ஆம் ஆண்டில், கோலின் வீர் லொட்டரியில் 161 மில்லியன் பவுண்டுகளை (இலங்கை பணமதிப்பில் ரூ.7,275 கோடி) வென்றார். 2019-ஆம் … Read more

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவுபெற்றதாக சிபிசிஐடி தகவல்…

சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு பெற்றுவிட்டதாகவும், 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறை தெரிவித்து உள்ளது. கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மாடியில் இருந்து விழுந்து மரணமடைந்தார். அவரது மரணம் கொலையா, தற்கொலையா என சந்தேகிக்கப்பட்டது. இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் 3 நாளாக நடைபெற்று … Read more