Yellow iphone 14: உங்களுக்கு மிகவும் பிடித்த ஆப்பிள் ஐபோன் 14 இப்போ மஞ்சள் நிறத்தில்!

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் மாடல்களில் புதிய மஞ்சள் நிற கலர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே ஐபோன் 12 மற்றும் 13 ஆகிய போன்களுக்கு தனியாக கலர் ஆப்ஷன்களை அறிமுகம் செய்தது போல இந்த ஐபோன் 14 மாடலுக்கும் புதிய கலர் ஆப்ஷன் வெளியாகியுள்ளது. விலை விவரம் இந்த புதிய கலர் ஆப்ஷன் ஐபோன் 14 மற்றும் ப்ளஸ் ஆகிய இரு வேரியண்ட்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல Midnight, Purple, Starlight, Red, Blue … Read more

வீராங்குப்பம் கிராமத்தில் எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்

ஆம்பூர்: வீராங்குப்பம் கிராமத்தில் எருது விடும் விழா சீறிப்பாய்ந்த காளைகள் விழாவை காண 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடினார்கள். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கிராமத்தில், மூன்றாம் ஆண்டு எருது விடும் விளையாட்டு விழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த எருது விடும் திருவிழாவில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஆலங்காயம், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் மற்றும் வெளி … Read more

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை கண்டுரசித்த பிரதமர்கள்..!

அகமதாபாத்தில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை, இந்திய பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பேனிசும் கண்டு களித்தனர். நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியை காண வருகை தந்த ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் பிரதமர் மோடிக்கு, மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து, கோல்ப் காரில் மைதானத்தில் வலம் வந்த இருவரும் ரசிகர்களை நோக்கி கையசைத்தனர். இரு அணி கேப்டன்களுக்கும் டெஸ்ட் தொப்பிகளை … Read more

அவசரப்படவேண்டாம்… எரிவாயுக் குழாய் சேதம் தொடர்பில் எச்சரிக்கும் ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர்

ஜேர்மனியையும் ரஷ்யாவையும் இணைக்கும் எரிவாயுக்குழாய் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரவேண்டாம் என எச்சரித்துள்ளார் ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர். அமெரிக்க தரப்பிலிருந்து வெளியான தகவலால் பரபரப்பு New York Times பத்திரிகை, ஜேர்மனிக்கு ரஷ்யா எரிவாயு வழங்கிவந்த Nord Stream எரிவாயுக் குழாய் சேதப்படுத்தப்பட்டதன் பின்னணியில் புடினுடைய எதிரிகள் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது. அது வேண்டுமென்றே செய்யபட்ட ஒரு சதிச்செயல் என்று கூறப்பட்ட நிலையில், உக்ரைன் ஆதரவு அமைப்பு ஒன்று Nord … Read more

மார்ச் 11-ந் தேதி கடலூர் மாவட்டத்தில் முழுஅடைப்பு! அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு…

நெய்வேலி: என்எல்சிக்கு எதிராக, கடலூர் மாவட்டத்தில் வரும் 11-ந் தேதி முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்து உள்ளார். கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது இரண்டாவது பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக நிலத்தை கையகப்படுத்த முயன்று வரும் சூழ்நிலையில், சேத்தியாதோப்பு அடுத்த மேல் வலைமாதேவி, கீழ் வளையமாதேவி, கரிவேட்டி, கத்தாழை உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்த முயன்று வருகிறது. இந்த நிலையில் … Read more

திருவண்ணாமலை அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: பயணிகள் மருத்துவமனையில் அனுமதி!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சாலையின் திடீரென குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க 10 அடி பள்ளத்தில் இறங்கிய அரசு பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த முருகன் என்பவர் அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று சென்னையிலிருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். திருவண்ணாமலை அடுத்த சோ.நம்மியந்தல் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம், மலப்பாம்பாடி கிராமம் அருகே காய்கறிகளை வாங்கிக்கொண்டு இருசக்கர … Read more

உரிய உரிமம் இல்லாமல் அரசு நிலத்தை தொடர்ந்து யாரும் பயன்படுத்த முடியாது: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: உரிய உரிமம் இல்லாமல் அரசு நிலத்தை தொடர்ந்து யாரும் பயன்படுத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பள்ளி அமைப்பதற்காக 1995-ல் நிலம் வழங்கிய ஒப்பந்தம் முடிந்த நிலையில் மீண்டும் நிலம் கோரி தனியார் அறக்கட்டளை மனு அளித்துள்ளது. ஒப்பந்தம் காலாவதியாகி 8 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் அதே நிலத்தை ஒதுக்க உரிமை கோர முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

ஹோலி கொண்டாட்டத்தில் சோகம்: குளத்தில் மூழ்கி புதுமண தம்பதி உள்பட 4 பேர் பரிதாப பலி

போபால்: ஹோலி கொண்டாட்டத்தின்போது குளத்தில் மூழ்கி புதுமண தம்பதி உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். மத்திய பிரதேச மாநிலம் ரட்டிலம் மாவட்டம் இசர்துனி கிராமத்தை சேர்ந்த 20 வயது புதுமணப்பெண், தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் ஹோலி பண்டிகையை குதூகலமாக கொண்டாடினார். பின்னர் அங்குள்ள குளத்தில் அந்த பெண் குளித்தார். நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் (23), குளத்தில் இறங்கி தேடினார். ஆழமான பகுதிக்கு சென்றார். அவருக்கு நீச்சல் தெரியாததால் … Read more

ஹன்சிகாவின் ‛மேன்'

ஆர்யா நடித்த கலாபகாதலன், வந்தாமல படங்களை இயக்கிய இகோர் இயக்கும் படம் மேன். இதில் ஹன்சிகா சோலோ ஹீரோயினாக நடிக்கிறார். இது அவருக்கு 51வது படம். இதில் ஆரி அர்ஜூனா வில்லனாக நடிக்கிறார். மெட்ராஜ் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் ஜிப்ரான் இசையமைக்கிறார். படம் பற்றி இகோர் கூறியதாவது : ஆண்மை என்பது ஒரு அகங்காரக் கூறாக மாறிவிட்டது. இது ஒரு போலி அடையாளத்தை உருவாக்கியுள்ளது. மேலும், இது பெண்களை அடக்கி, ஆதிக்கம் … Read more

இந்தியா – பாக்., எல்லையில் பதற்றம் அதிகரிக்கலாம்: அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை| Tension on India-Pak border may rise: US intelligence warns

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: இந்தியா- பாக்.., எல்லைகளில் வரும் நாட்களில் பதற்றம் அதிகரிக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அமெரிக்க உளவுத்துறை கூறியிருப்பதாவது: இந்தியா- பாக்.., எல்லைகளில் வரும் நாட்களில் பதற்றம் அதிகரிக்கலாம். இந்திய எல்லை பிரச்னைகள் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அந்நாட்டு உளவுத்துறை எங்களிடம் கூறியது. அணு ஆயுதம் ஏந்திய இரு நாடுகளுக்கு இடையே போர் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான … Read more