நியூசிலாந்திற்கு தப்பி செல்ல முயற்சித்த 6 இலங்கையர்கள் கைது

தமிழ்நாட்டில் உள்ள 3 அகதி முகாம்களில் தங்கியிருந்த ஆறு இலங்கையர்கள் நியூசிலாந்திற்கு தப்பி செல்ல முயற்சித்தவர்களை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த 6 பேரும் நியூசிலாந்திற்கு ஒரு படகு வழியாக தப்பி செல்ல முயன்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ் நாட்டில் உள்ள கியூ பிரிவின் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 6 பேரும் தமிழ்நாட்டின் படகு உரிமையாளரிடம் முன்கூட்டிய பணம் செலுத்தி … Read more

தைவானை இணைக்க சீனா அழுத்தம் தரும் என்று அமெரிக்கா உளவுத்துறை அறிக்கை..!

தைவான் நாட்டை தன்னுடன் இணைக்க சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று அமெரிக்காவின் புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் இடைவெளியை அதிகரிக்கும் என்றும் அமெரிக்காவின் ஆதிக்கத்தைக் குறைக்கும் என்றும் அமெரிக்க உளவுத் துறையின் வருடாந்திர அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளின் கடல் மற்றும் நிலப்பகுதிகளுக்கு சீனா உரிமை கோரி அரசு இயந்திரத்தையும் அதிகாரத்தையும் முழுவதுமாகப் பயன்படுத்தி வருகிறது என்றும் தைவானின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது என்றும் அந்த … Read more

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவக்க உள்ளது. இது பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் கூட்டம் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் மார்ச் மாதம் முழுவதும் நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது தொடர்பாக கூட்டத்தொடர் தொடங்கியதும் அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும். இந்த கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்து, மின்துறை தனியார் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

பாஜக சந்தர்ப்பவாத அரசியல் நடத்தினால் மக்களவை தேர்தலில் பதில் கிடைக்கும்: புதுச்சேரி அதிமுக எச்சரிக்கை

புதுச்சேரி: பாஜக சந்தர்ப்பவாத அரசியல் நடத்தினால் மக்களவை தேர்தலில் பதில் கிடைக்கும் என புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்ணாமலையின் சர்வாதிகார போக்கை சகிக்க முடியாமல் பாஜகவினர் விலகுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா முதல்வரின் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை இன்று விசாரணை

புதுடெல்லி: தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா டெல்லி அமலாக்கத்துறை அலுவலத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. விசாரணைக்குப் பிறகு அவரை மார்ச் 20ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கு  தொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் அருண் ராம்சந்திர பிள்ளை … Read more

ஒரு ஆரோக்கியமான வீடு:சமூக உற்பத்தி திறன் ஊக்குவிப்பு திட்டத்தின் அறிமுக கலந்துரையாடல்

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “ஒரு ஆரோக்கியமான வீடு : சமூக உற்பத்தி திறன் ஊக்குவிப்பு திட்டத்தின்” அறிமுக கலந்துரையாடல் (08) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் குறித்த திட்டத்தினை முன்னெடுத்துச் செல்லும் வழிவகைகள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தில் இதற்காக 1920 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. உற்பத்தி திறன் செயற்பாடுகளை இதுவரை காலமும் … Read more

ஈரோடு சந்தையில் புதிய மஞ்சளுக்கு அமோக வரவேற்பு.!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை மற்றும் கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் உள்பட நான்கு இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது.  இந்த நிலையில், கடந்த மாதம் அறுவடை முடிந்த பிறகு, புதிய மஞ்சள் வரத்து அதிகமாக இருந்ததனால் மஞ்சளின் விலை சற்று உயர்ந்தது. ஆனால் பழைய மஞ்சளின் விலையில் எந்தவிதமான மாற்றம் இல்லை.  இதுதொடர்பாக ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க … Read more

இன்ஸ்டாகிராமில் புகைப்படித்தபடி பட்டா கத்தியுடன் ரீலிஸ் வெளியிட்ட கோவை தமன்னா!!

கோவை மாநகரில் அண்மையில் நடைபெற்ற கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து மாநகர போலீசார் ரவுடிகளை கண்காணித்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களையும் சைபர் கிரைம் போலீசார் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் ‘FRIENDS CALL ME THAMANNA’ என்ற பெயரில் கணக்கு ஒன்றை வைத்துள்ளார். அவர் அன்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்பிடித்தவாறு பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடியோ ஒன்றை … Read more