Viduthalai: "வெற்றிமாறன் திரையுலகத்திற்குக் கிடைத்த முக்கியமான இயக்குநர்!"- இளையராஜா புகழாரம்

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `விடுதலை’. இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், முதல் பாகத்துக்கான இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் படத்தின் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். விழாவின் நாயகன் இளையராஜா மற்றும் படக்குழுவினர் அனைவரும் மேடையில் ஏறிப் படத்தின் இசையை வெளியிட்டனர். அப்போது இயக்குநர் வெற்றிமாறன் இளையராஜாவிடம் … Read more

பிரித்தானிய ராணி குடும்பத்தில் ஒரு இழப்பு: துயரத்தை ஏற்படுத்தியுள்ள செய்தி

பிரித்தானிய ராணிக்கு நெருக்கமான ஒருவர் மரணமடைந்துள்ளார். அவர், ராணி கமீலாவின் சகோதரி கணவர். 50 ஆண்டுகளாக நெருக்கமான நபர் ராணி கமீலாவின் தங்கை Annabel (74). Annabelஇன் கணவரான Simonதான் தற்போது மரணமடைந்துள்ளார். Simon கமீலாவுடன் 50 ஆண்டுகளாக நெருக்கமானவர் ஆவார். விடயம் என்னவென்றால், கமீலாவின் உறவினரான Charles Villiers (59) என்பவர் சிறிது காலத்துக்கு முன்புதான் உயிரிழந்தார். அவர் லண்டனிலுள்ள ஹொட்டல் ஒன்றில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. நீண்ட காலமாக தனது மனைவியுடனான விவாகரத்து பிரச்சினை … Read more

திருச்சி, உளுந்தூர்பேட்டை, நெல்லையில் எடப்பாடியை கண்டித்து போஸ்டர்: ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் மீது போலீசில் புகார்

திருச்சி: எடப் பாடியை கண்டித்து திருச்சி, உளுந்தூர்பேட்டை, நெல்லையில் ஒட்டப் பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் செயல்படுகிறது. இரு அணிகளை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், ஒருவரையொருவர் சரமாரியாக குற்றம் சாட்டி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் உள்பட சிலரை மீண்டும் அதிமுகவில் இணைக்க முடியாது என எடப்பாடி அணியினர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தொடர் தோல்விகளை சந்தித்து வந்த எடப்பாடி பழனிசாமி அணி, ஈரோடு இடைத்தேர்தலில் … Read more

சேலம் அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ராஜேஷ் மீது உதவி பேராசிரியைகள் 7பேர் பாலியல் தொல்லை புகார்

சேலம்: சேலம் அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ராஜேஷ் மீது உதவி பேராசிரியைகள் 7பேர் பாலியல் தொல்லை புகார் அளித்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர், புகார்தாரர்களிடம் உதவி காவல் ஆணையர் ஆனந்தி தனித்தனியே விசாரணை மேற்கொண்டார்.

இந்திய கடற்படை ஹெலிகாப்டர் கடற்கரை அருகே அவசர அவசரமாக தரையிறங்கியபோது விபத்து: வீரர்கள் 3 பேர் பத்திரமாக மீட்பு.!

மும்பை: இந்திய கடற்படை ஹெலிகாப்டர் கடற்கரை அருகே அவசர அவசரமாக தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது. மராட்டிய மாநிலம் மும்பை கடற்பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான இலகு ரக ஹெலிகாப்டர் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அந்த ஹெலிகாப்டரில் 3 பேர் பயணித்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. உடனடியாக ஹெலிகாப்டரை விமானி அவசர அவசரமாக மும்பை கடற்கரை அருகே தரையிறக்கினார். அவசர அவசரமாக தரையிறங்கியபோது ஹெலிகாப்டர் கடற்கரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து … Read more

மகள்களுக்கு சொத்து கிடைக்க மீண்டும் திருமணம் செய்த தம்பதி| A couple who remarried to get property for their daughters

காசர்கோடு ;தங்களுடைய சொத்துக்கள், தங்களுடைய மூன்று பெண் குழந்தைகளுக்கும் முழுமையாக கிடைப்பதை உறுதி செய்வதற்காக, கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் தம்பதி, ௨௯ ஆண்டுக்குப் பின் மீண்டும் திருமணம் செய்தனர். கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் மற்றும் நடிகர் சுக்குர். இவருடைய மனைவி டாக்டர் ஷீனா, மஹாத்மா காந்தி பல்கலையின் முன்னாள் இணை துணை வேந்தராக பணியாற்றியவர். இவர்களுக்கு, ௧௯௯௪ல், இஸ்லாமிய முறைப்படி, ஷரியத் சட்டத்தின் கீழ் திருமணம் நடந்தது. தற்போது, ௨௯ ஆண்டுக்குப் பின், இருவரும், … Read more

ராம் சரண் – ஷங்கர் படத்தின் தலைப்பு இதுவா?

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் தனது 15வது படத்தை நடித்து வருகிறார். இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.தற்போது இப்படத்தின் தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதியை வரும் மார்ச் 27ம் தேதி ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட உள்ளனர். இத்திரைப்படத்திற்கு ‛சி.இ.ஓ' என்ற டைட்டில் வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

ஆறு மாதத்தில் பெரிய தலைகள் பா.ஜ.க-வில் இருந்து செல்ல வாய்ப்பு – அண்ணாமலை பேட்டி

ஆறு மாதத்தில் பெரிய தலைகள் பா.ஜ.க-வில் இருந்து செல்ல வாய்ப்பு – அண்ணாமலை பேட்டி Source link

#சென்னை | குடிநீர் கட்டணங்களை செலுத்துவதற்கான நுகர்வோர் அட்டை இனி கிடையாது!

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் விடுத்துள்ள அறிவிப்பின்படி, “சென்னை குடிநீர் வாரியத்தின் நுகர்வோர்கள் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்துவதை டிஜிட்டல் கட்டண முறையில் (Digital payment) ஊக்குவிக்கவும், வரிசையில் காத்திருக்கும் நேரத்தைத் தவிர்க்க மற்றும் காகிதப் பயன்பாட்டைக் குறைக்கவும் 01.04.2023 முதல் நுகர்வோர் அட்டை (Consumer Card) வழங்கப்படமாட்டாது.  ஏற்கனவே உள்ள நுகர்வோர் அட்டையில் எந்த பதிவும் செய்யப்பட மாட்டாது. நுகர்வோர்களுக்கு 5 வருடங்களுக்கு ஒருமுறை நுகர்வோர் அட்டை … Read more

மகளிர் தினத்தையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்டு கூகுள்..!!

பிரபல தேடுபொறியான கூகுள் தளம் பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள், முக்கிய நபர்களின் நினைவு நாள் உள்ளிட்ட சிறப்பு நாட்களில் சிறப்பு டூடுலை வெளியிட்டு கௌரவிப்பது வழக்கம். அந்தவகையில் இன்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பெண்களை கௌரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் வாழும் பல்வேறு கலாசாரத்தைச் சேர்ந்த பெண்களைக் குறிப்பிடும் வகையில் இந்த டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மருத்துவம், விண்வெளி, … Read more