மதப் பிரிவினையை தூண்டும் பதிவுகள்: பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை

சென்னை: மத ரீதியாக பிரிவினையைத் தூண்டும் வகையில் ட்விட்டரில் பதிவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் ட்விட்டரில் கருத்துகளை பதிவிட்டதாக பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது சென்னை சிட்லப்பாக்கம் காவல் நிலையம் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் 2017, 2018-ல் காவல் துறையினர் … Read more

பாஜக நிர்வாகிகள் அதிமுகவிற்கு தாவியது ஏன்.? – சீக்ரெட்டை உடைத்த திருமா.!

பாஜவில் இருந்து நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறுவதற்கு முக்கிய காரணம் குறித்து திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். தோள்சீலை போராட்டத்தின் 200ம் ஆண்டுவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு சென்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னை முன்னிறுத்துவதில் குறியாக உள்ளார். தமிழ்நாடு அரசியலில் ஊடகங்கள் எப்போதும் தன்னை குறித்தே பேச வேண்டும் என்ற ஒரு வகையான மேனியா அவருக்கு இருப்பதை உணர முடிகிறது. அதனால் பரபரப்பாக எதையாவது பேச … Read more

46 சிறுமிகள் கர்ப்பம்… வீட்டில் கூட பாதுகாப்பு இல்லாத நிலை – அச்சமூட்டும் தகவல்கள்!

கேரளாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் வழக்குகளான POCSO வழக்குகள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வழக்குகளின் அபரிமிதமான அதிகரிப்பு என்பது பலரையும் நடுங்க வைத்துள்ளது.  கடந்த இரண்டே ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்ஸோ வழக்குகள் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்று மலையாள பத்திரிகை ஒன்று தகவல் தெரிவிக்கிறது. ஊரடங்கு காலகட்டத்தில் குழந்தைகள் கடும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் அபாயகரமான போக்கையும் இது எடுத்துக்காட்டுகிறது. 2020 ஆம் ஆண்டில், கேரளாவில் 3056 போக்ஸோ … Read more

இந்தோனேசியாவில் 11 ஹெக்டேரில் இருந்த மரிஜுவானா செடிகள் வேறோடு பிடுங்கப்பட்டு தீயிட்டு அழிப்பு..!

இந்தோனேசியாவில் 11 ஹெக்டேரில் விளைவிக்கப்பட்டிருந்த மரிஜுவானா எனப்படும் கஞ்சா தோட்டத்தை போலீசார் தீயிட்டு அழித்தனர். வடக்கு சுமத்ராவின் ஆச்சே என்ற இடத்தில் உள்ள இத்தோட்டம் கடந்த மாதம் உள்ளூர் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று 11 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த கஞ்சா செடிகளும் வேரோடு பிடுங்கப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டது. உலகிலேயே மிக கடுமையான போதைப்பொருள் சட்டங்கள் உள்ள நாடாக இந்தோனேசியா உள்ளது. Source link

Viduthalai: “வாடிவாசல் முடிச்சுட்டு வரேன்னு சொன்னார் வெற்றிமாறன்!" – தயாரிப்பாளர் தாணு!

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள `விடுதலை’ திரைப்படம். இந்த மாதம் மார்ச் 31ம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு பேசியுள்ள தயாரிப்பாளர் எஸ். கலைப்புலி தாணு, வாடிவாசல் திரைப்படம் குறித்தும் வெற்றிமாறன் குறித்தும் பேசினார். விடுதலை நிகழ்ச்சியில் பேசிய தாணு, “இந்தியத் திரையுலகில் இருக்கும் பெரிய நட்சத்திரங்கள், நடிகர்கள் எல்லாம் வெற்றிமாறன் தம்பியிடம் படம் … Read more

உலகின் மிகவும் வயதான பெண் 128 வயதில் மரணம்!

தென் ஆப்பிரிக்காவில் உலகின் மிகவும் வயதான பெண்ணொருவர் தனது 128வது வயதில் மரணமடைந்துள்ளார். ஜோஹன்னா மசிபுகோ ஆப்பிரிக்க நாடான தென் ஆப்பிரிக்காவின் வடமேற்கு மாகாணத்தில் வசித்து வந்தவர் ஜோஹன்னா மசிபுகோ. 1894ஆம் ஆண்டு பிறந்த இவர் தான் உலகின் மிகவும் வயதான ஆவார். 128 வயதான மசிபுகோ தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். பக்கவாதத்தினால் மசிபுகோ உயிரிழந்திருக்கலாம் என அவரது பராமரிப்பாளரும், மருமகளுமான தந்தீவி வெசின்யானா தெரிவித்துள்ளார். @Newsflash முன்னதாக தனது 128வது பிறந்தநாளில் மசிபுகோ பேசியபோது, ‘இவ்வளவு … Read more

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் தியானம்…

டெல்லி; பல்வேறு பிரச்சினைகளால் சிக்கி தவிக்கும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் காலை 10மணி முதல்  தியானத்தில் இருந்து வருகிறார்.  மாலை 5மணி வரை சுமார் 7 மணி நேரம் தியானத்தில் இருப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியை ஆட்சி செய்து வரும் ஆம்ஆத்மி கட்சி பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி உள்ளது. ஏற்கனவே துணைமுதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டு … Read more

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்

மதுரை: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களிடம் அவர் கட்சிக்காரர் சொல்வதையே அவரும் மீண்டும் சொல்கிறார் எனவும் தான் மாநில உரிமையை பறிக்கவே வந்துள்ளேன் என ஆளுநர் கூறுவது போல் உள்ளதாகவும் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மியால் நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கு ஆளுநரே காரணம்: பா.ம.க. தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: ஆன்லைன் ரம்மியால் நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கு ஆளுநரே காரணம் என பா.ம.க. தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். 4 மாதங்களாகியும் மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

92 கேள்விகளை மட்டுமே கேட்டுள்ள ராகுல் இந்திய நாடாளுமன்றத்தை குறை கூறுவதா?.. ஒன்றிய அரசின் மூத்த ஆலோசகர் கேள்வி

டெல்லி: நாடாளுமன்றத்தில் கடந்த 4 ஆண்டில் 92 கேள்விகளை மட்டுமே கேட்டுள்ள ராகுல்காந்தி, இந்திய நாடாளுமன்றத்தை குறை கூறுவதா? என்று ஒன்றிய அரசின் மூத்த ஆலோசகர் கேள்வி எழுப்பி உள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றி வருகிறார். அவரது உரையில், ‘இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பெரும்பாலும் மவுனமாக்கப்படுகின்றன’ என்று குறிப்பிட்டு பேசினார். இவரது கருத்துக்கு ஆளும் பாஜக தரப்பில் கண்டன குரல்கள் எழுந்தன. இதுகுறித்து தகவல் மற்றும் … Read more