`தமிழகம் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார பாதையை எட்டும்’ -அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னையில் நடைபெற்ற சிஐஐ யின் முன்னோக்கிய தமிழக எழுச்சி மாநாட்டில் பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், `தமிழகத்தின் மென்பொருள் ஏற்றுமதி இந்த ஆண்டு 1.76 லட்சம் கோடியை தொட்டுள்ளது.  தமிழகம்  இப்போது தேசிய  அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.  சிஐஐ ஆண்டு விழா “வடமாநிலத் தொழிலாளர்கள் இல்லையென்றால் திருப்பூர் பின்னலாடைத்துறை இயங்காது”- ஐ.கே.எஃப்.ஏ தலைவர் மாநிலத்தின்இந்த தொடர்ச்சியான வளர்ச்சியின் மூலம் வரும் ஆண்டுகளில் மேலும் உயர்ந்த இடத்தை பிடிப்போம் என்று நம்புகிறோம்.  கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு அமைப்புகள் செய்த 60 பில்லியன் டாலர் முதலீடுகள் வரும் ஆண்டுகளில் 75%-க்கும் அதிகமான விகிதத்தை எட்டும் என்ற நம்பிக்கை  இருக்கிறது. தமிழகத்தில் 1  ட்ரில்லியன் டாலர் பொருளாதார பாதையை எட்டமுடியும். அதையே இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம். மேலும் இந்த இலக்குகளை எட்ட,  அடுத்த 7 ஆண்டுகளில் என்னென்ன செய்யவேண்டும் என்பது  குறித்தும் ஆராயப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். லட்சுமி வேணு “வணிகவரி, பதிவுத்துறையில் ரூ.1.50 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும்” – அமைச்சர் பி.மூர்த்தி! மேலும் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்து சுந்தரம் கிளேட்டன் இணை நிர்வாக இயக்குநர் லட்சுமி வேணு கூறுகையில், “இந்தியாவிலேயே  தமிழகம்  தொடர்ந்து  வலுவான  உற்பத்தி மாநிலமாக உள்ளது. மிகவும் தொழில் மயமானது மற்றும் ஜிடிபியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு ஒரு அற்புதமான பணி நெறிமுறை உள்ளது. திறன் மற்றும் … Read more

கோவில் சாமி ஊர்வலத்தில் ஜெனரேட்டரில் சிக்கிய தலைமுடி.. 13 வயது சிறுமி பலியான சோகம்..!

காஞ்சிபுரம் அருகே கோவில் திருவிழா சாமி ஊர்வலத்தின் போது, தலைமுடி ஜெனரேட்டரில் சிக்கியதால் 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சாந்தங்கள் கிராமத்தில் சம்பவத்தன்று இரவு அங்காளம்மன் கோயில் திருவிழாவில் மாட்டு வண்டியில் சாமி ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது. மாட்டு வண்டியின் பின்புறம் வண்ண விளக்குகள் எரிவதற்காக ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. மாட்டு வண்டியின் பின் புறம் இருந்த ஜெனரேட்டர் அருகில் அமரும் ஆர்வத்தில் 13 வயது … Read more

விழுப்புரம் அன்பு ஜோதி இல்லத்தில் இருந்து காணாமல் போன 15 பேர் குறித்து விசாரணை: ஐகோர்ட்டில் சிபிசிஐடி தகவல்

சென்னை: விழுப்புரம் அன்பு ஜோதி இல்லத்தில் இருந்து காணாமல் போன 15 பேர் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக சிபிசிஐடி போலீஸார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குண்டலபுலியூர் கிராமத்தில் ஜூபின்பேபி என்பவர் அன்பு ஜோதி ஆசிரம் என்ற மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இல்லத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில், திருப்பூரைச் சேர்ந்த சலீம்கான் என்பவர் அமெரிக்க செல்வதற்கு முன்பு ஷபீருல்லா என்ற தனது … Read more

ஸ்ரீதர் வேம்புக்கு நடந்தது என்ன? மனைவி சொல்வது பொய்… உலுக்கிய தற்கொலை எண்ணம்!

Zoho நிறுவனத்தின் சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு மீது அமெரிக்காவில் வசித்து வரும் அவரது மனைவி பிரமிளா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பான செய்தி சர்வதேச அளவில் புகழ்பெற்ற போர்ப்ஸ் இதழில் வெளியானது. மேலும் வழக்கறிஞர் மூலம் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு தனது ட்விட்டரில் ஸ்ரீதர் வேம்பு விளக்கம் அளித்துள்ளார். ஆட்டிசம் குறைபாடு அதில், ஆட்டிசம் எங்கள் வாழ்வை பெரிதும் புரட்டி போட்டது. என்னை தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு கொண்டு போனது. எனது … Read more

Udhayanidhi: உதயநிதிக்கு அடித்த ஜாக்பாட்..ஆச்சர்யத்தில் கோலிவுட்.. இதை உதயநிதியே எதிர்பார்க்கலையாம்..!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் அதே சமயத்தில் அமைச்சராகவும் செம பிசியாக வலம் வருகின்றார் உதயநிதி. குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளரான உதயநிதி ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி வெற்றிகண்டார். அதன் பிறகு பல படங்களில் நடித்து வந்த உதயநிதி மெல்ல மெல்ல தன் நடிப்பு திறனை வளர்த்துக்கொண்டார். மனிதன், கண்ணே கலைமானே, நிமிர், சைக்கோ என தொடர்ந்து தரமான படங்களில் நடித்து பாராட்டை பெற்று வருகின்றார் உதயநிதி. இந்நிலையில் … Read more

லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளுக்கு விஜய் கொடுத்த சர்பிரைஸ் என்ன?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மார்ச் 14 ஆம் தேதியான இன்று பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் சஞ்சய் தத் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். சஞ்சய் தத் வெளியிட்ட பிறந்தநாள் வாழ்த்தில் லோகேஷ் கனகராஜை மனம் நெகழ்ந்து வாழ்த்தியுள்ளார். அதில், என் சகோதாரா, மகனே உனக்கு எல்லாம் வல்ல இறைவன் மேலும் பல வெற்றிகளையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். இப்போது போல் எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக இரு என நெகிழ்ச்சியாக … Read more

இங்கிலாந்தில், பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து 5 கிலோ நகைகள் திருட்டு…!

இங்கிலாந்தில் பட்டப்பகலில், நகைக்கடைக்குள் புகுந்து, 3 கோடி ரூபாய் நகைகளை திருடிச்சென்ற 5 பேர் கும்பலுக்கு, 12 ஆண்டுகள் முதல் 16 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம், பிர்மிங்ஹாமில், சிறிய ரக சரக்கு வாகனம் ஒன்றை திருடி வந்த 5 பேர் கும்பல், வாகனத்தால் மோதி நகைக்கடையின் கண்ணாடி ஜன்னலை உடைத்து கடைக்குள் புகுந்தது. ஒருவன் அங்கிருந்தவர்களை கோடாரியை காட்டி மிரட்ட, மற்றவர்கள் சம்மட்டியால் கண்ணாடி பேழைகளை உடைத்து நகைகளைத்திருடினர். வெறும் … Read more

”உக்ரைனின் எதிர்காலம் பக்முட் வெற்றியைப் பொறுத்தே இருக்கிறது” ஜெலென்ஸ்கி

உக்ரைன் நாட்டின் எதிர்காலம் பக்முட் மற்றும் மற்ற முக்கிய நகரங்களின் வெற்றியைப் பொறுத்தே இருக்கிறது என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். பக்முட்டில் கடுமையான போர் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வருகிறது. இப்போரில் லட்சக்கணக்கான மக்களும், ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர். உக்ரைனிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வேறு நாடுகளுக்கு அகதிகளாகச் செல்கின்றனர். @pbs தற்போது கடுமையாக நடைபெற்று வரும் இப்போரில் ரஷ்யா உக்ரைனின் பக்முட் என்ற … Read more

சென்னை ஐ.ஐ.டி.யில் ஆந்திர மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை!

சென்னை: இந்தியாவிலேயே தலைசிறந்த கல்வி நிறுவனமான சென்னை  ஐ.ஐ.டி.யில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஐஐடியில் 3ம் ஆண்டு படித்து வந்தவர், ஆந்திராவை சேர்ந்த மாணவர் புஷ்பக். அவர் விடுதியில் தங்கியிருந்து 3வது ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், இன்று  விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  மாணவர் தற்கொலை சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். … Read more

பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் பயங்கர காட்டுத்தீ: அரிய வகை மரங்கள் நாசம்

பெரியகுளம்: பெரியகுளம் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 100 ஏக்கர் வனப்பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயால் அரியவகை மரங்கள் எரிந்து நாசமாகி வருகின்றன. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கும்பக்கரை அருவிக்கு மேல் உள்ள வெள்ளகெவி வனப்பகுதியில், நேற்று மாலை சிறிய அளவில் காட்டு தீ பரவியது. அதன்பின்னர் காற்றின் வேகம் அதிகரித்ததால், காட்டுத் தீ மளமளவென பரவி எரிந்து வருகிறது. 100 ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ பரவி வருவதால் … Read more