திண்டுக்கல் : பள்ளிக்குத் தாமதமாக வந்த மாணவரை வெயிலில் முட்டி போட வைத்த ஆசிரியர் – வைரலாகும் புகைப்படம்.!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே செந்துறையில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றுள்ளது. சுமார் 1600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இந்தப்  நேற்று பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இதனால் மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவரும் மதியம் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தி அவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் எடுத்து சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.  ஆனால், பொதுத்தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் செந்துறை அரசு தொடக்கப்பள்ளிக்கு வருமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தியிருந்தனர். அந்த … Read more

துருக்கி நிலநடுக்கம்; 48,000-ஐ கடந்த பலி எண்ணிக்கை |கைதாகிறாரா இம்ரான் கான்? – உலகச் செய்திகள்

அமெரிக்காவில் பேராசிரியர்கள் உட்பட ஒன்பது பேரை மிரட்டியதற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அர்வின் ராஜ் மாதுர் என்பவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ரஷ்ய இறக்குமதிகளுக்குப் பணம் செலுத்தச் சீன யுவானைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு வங்கிகள் மற்றும் வர்த்தகர்களை இந்தியா கேட்டுக் கொண்டிருக்கிறது. சிலிக்கான் வேலி வங்கி திவாலான நிலையில் அதில் பணம் வைத்திருந்தவர்களுக்கு தங்களின் தொகை மீண்டும் வழங்கப்படும் என உறுதியளித்திருக்கிறார் அதிபர் ஜோ பைடன். மேலும், இந்த இழப்பை அமெரிக்கர்கள் பொறுப்பேற்கத் தேவையில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். துருக்கியில் கடந்த … Read more

‘10 ஆண்டுகளில் பலன்கள்’ – சென்னை வெள்ளத் தடுப்பு குறித்த திருப்புகழ் குழுவின் 600 பக்க அறிக்கையின் அம்சங்கள்

சென்னை: சென்னை வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழு 600 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது. “இந்த அறிக்கையில் உள்ள திட்டங்களை செயல்படுத்தினால், இதற்கான பலன்கள் அடுத்த 10 ஆண்டுகளில் கிடைக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்படும் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக சென்னை வெள்ள இடர் தணிப்பு மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டு, அதன் தலைவராக திருப்புகழ் நியமிக்கப்பட்டார். இந்த குழுவின் உறுப்பினர்களான ஜனகராஜ், … Read more

பிறக்கும் பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகை; சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் – புதுச்சேரி பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.300 வீதம் ஆண்டுக்கு மொத்தம் 12 சிலிண்டருக்கு மானியம் தரப்படும். பிறக்கும் பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை வழங்கப்படும். கல்வித் தரத்தை மேம்படுத்த 6 முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று புதுச்சேரி பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் கடந்த 12 ஆண்டுகளாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. மத்திய … Read more

முன்னாள் மாணவர்களை வர சொல்லுங்க.. தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்..!

அரசு பள்ளிகளின் மேம்பாடுகளுக்காக முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் வேண்டுகோள் வைத்துள்ளார். அதுகுறித்து அவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது; ”தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சரின் வேண்டுகோள் வணக்கம்! தலைமையாசிரியராகிய உங்களாலும், பணிபுரியும் ஆசிரியர்களாலும்தான் உங்கள் பள்ளி இயங்குகிறது. நீங்களே உங்கள் பள்ளியின் தூணாக இருக்கிறீர்கள். உங்கள் பள்ளியில் நேற்றைய மாணவர்கள் இறுதியாண்டு முடித்துச் சென்றுவிட்டனர். இன்றிருக்கும் மாணவர்கள் நாளை சென்று விடுவர். ஆனால் நீங்கள் எப்போதும் … Read more

Kamal Haasan: போடு வெடிய.. ஆண்டவருடன் இணையும் எச். வினோத்: மாஸ் சம்பவம் லோடிங்.!

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படுபவர் கமல்ஹாசன். திரையுலகின் கருவூலம் என அழைக்கப்படும் அளவிற்கு இளம் இயக்குனர்கள் பலரின் காட்பாதராக விளங்கி வருகிறார் கமல். இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கமல் அடுத்ததாக நடிக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. கமல் நடிப்பில் கடந்தாண்டு ‘விக்ரம்’ படம் வெளியானது. கமலின் தீவிர ரசிகர் என தன்னை அடையாளப்படுத்தி கொண்ட … Read more

இர்பான் ரெஸ்டாரண்டில் சாப்பிட்டு கீழே போட்ட எச்சில் எலும்பில் பெப்பர் சிக்கனா ? சல்லடை போட்டு சலித்த அதிகாரிகள்..!

பிரியாணி பிரியர்கள் சாப்பிட்டு போட்ட,  சிக்கன் எலும்பை, பெப்பர் சிக்கனில் கலந்து தருவதாக வீடியோ வெளியிட்ட யூடியூப்பரின் புகாரின் பேரில், புதுச்சேரி அடுத்த சுல்தான்பேட்டையில் உள்ள இர்பான் ரெஸ்டாராண்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்…. கண்டதையும் உண்டு மகிழும் யூடியூப்பர்களால் நெய் புரோட்டாவுக்கு பேமஸ் என்று உச்சத்துக்கு தூக்கிவிடப்பட்ட பிரபலமான உணவகம், புதுச்சேரி அடுத்த வில்லியனூர் சுல்தான்பேட்டையில் அமைந்துள்ள இர்பான் ரெஸ்டாரண்ட்! இன்று அதே போன்ற ஒரு யூடியூப்பரால் இர்பான் ரெஸ்டாரண்டில், கெட்ட இறைச்சி, சாப்பிட்ட … Read more

எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை… அரண்மனையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஹரி மேகன் தம்பதி செய்துள்ள செயல்

எங்களை ராஜ அரண்மனையிலிருந்து வெளியேற்றிய விடயம் எங்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும். டோண்ட் கேர் ஹரி மேகன் தம்பதியர் தொடர்ந்து ராஜ குடும்பத்தை அவமதித்து வந்த நிலையில், அவர்களுக்கு ராஜ அரண்மனையில் கொடுக்கப்பட்டுள்ள வீட்டை காலி செய்ய உத்தரவிட்டுள்ளார் மன்னர். Image: Getty Images மன்னரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஹரி மேகன் தரப்பிலிருந்து எப்படி பதில் வருமோ என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், ’டோண்ட் … Read more

‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ : சென்னை உயர்நீதிமன்ற படியேறிய குட்டி யானை ‘அம்மு’வின் கதை

தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் சரணாலயத்தில் எடுக்கப்பட்ட ‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படத்திற்கு சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. 40 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம் முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் யானைகளை பரமாரித்து வரும் பொம்மன் – பெள்ளி தம்பதியுடன் அவர்கள் வளர்த்த ரகு மற்றும் அம்மு என்ற இரண்டு யானைக் குட்டிகளும் இடம் பெற்றுள்ளது. கன்றை ஈன்ற தாய் யானைகள் சில நேரங்களில் தான் … Read more

அழகன்குளத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்படுமா?.. தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ராமநாதபுரம் அழகன்குளத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்படுமா என தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அழகன்குளத்தில் நடத்திய அகழாராய்ச்சி அறிக்கை நிபுணர் குழு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தொல்லியல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அருங்காட்சியகம் அமைக்க இடம் ஒதுக்கி தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது. தீரன் திருமுருகன் என்பவர் தொடர்ந்த வழக்கை ஏப்ரல் 10ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.