அகழ் வைப்பகத்தில் தொல் பொருட்களை பார்க்க குவியும் மாணவர்கள், பொதுமக்கள்: சுற்றுலாத் தலமாக மாறிய கீழடி கிராமம்

சிவகங்கை: அகழ் வைப்பகத்தில் தொல் பொருட்களை பார்க்க மாணவர்கள், பொதுமக்கள் குவிந்து வருவதால் கீழடி கிராமம் சுற்றுலாத் தலமாக மாறி வருகிறது. சிவகங்கை மாவட்டம், கீழடியில் மத்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு ஆரம்பிக்கப்பட்டது. பிறகு தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ந்து அடுத்த கட்ட ஆய்வு மேற்கொண்டது. ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் நடத்திய பெரிய அகழாய்வு களம் கீழடி. வைகை ஆற்றங்கரையில் உருவாகிய தமிழர் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரத்தை இவ்வகழாய்வு மூலம் அறியப்படுகிறது. 2015-ம் … Read more

துபாயில் சொத்து சேர்க்கும் திமுக குடும்பம்; மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பகீர்.!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் அரவக்குறிச்சி பேருந்து நிலையத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் 75 ஆவது பிறந்த தின விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, அரவக்குறிச்சி அதிமுக ஒன்றிய கழகச் செயலாளர் கலையரசன் … Read more

முதல்வர் பேரணியில் பெண் நிர்வாகி 'ஹாட்' முத்தம்.. சர்ச்சையில் சிவசேனா எம்எல்ஏ..!

கடந்த சனிக்கிழமை இரவு இந்த வீடியோ வைரலானதை அடுத்து, தஹிசார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகி இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ”தஹிசரில் ஆசிர்வாத் யாத்திரை” என்ற பெயரில் பேரணி நடந்தது. அந்த பேரணி வாகனத்தில் ஏக்நாத் ஷிண்டே அருகில் எம்எல்ஏ பிரகாஷ் சர்வே, கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷீத்தல் மத்ரே ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, எம்எல்ஏ பிரகாஷ் சர்வேவுக்கு ஷீத்தல் மத்ரே முத்தமிட்டதாக ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி … Read more

தெருவில் அம்மணமாக திரிந்த வேற்று கிரகவாசி.? – புளோரிடாவில் பதற்றம்.!

புளோரிடாவின் பாம் பீச்சில் தெருவில் நிர்வாணமாக நடந்து சென்ற 44 வயதான நபரை போலீசார் கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்டவுடன், அந்த நபர் “வேற்று கிரகத்தில் இருந்து வந்துள்ளதாக” தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. புளோரிடாவின் வொர்த் அவென்யூவின் 200 பிளாக்கில் கடை வைத்திருக்கும் நபர் ஒருவர், அந்த தெருவில் முழுவதுமாக நிர்வாணமாக நடந்து செல்லும் வெள்ளை நிற ஆண் ஒருவரைப் பற்றி காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் மார்ச் 8 அன்று நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

AK62: தோல்வி கொடுத்த வலி..மறைமுகமாக பேசிய விக்னேஷ் சிவன்..அஜித்தை தான் சொல்றாரோ ?

கடந்த ஓராண்டாக விக்னேஷ் சிவனின் பெயர் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருக்கின்றது. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றி, நயன்தாராவுடன் திருமணம் என கடந்தாண்டு நல்ல செய்திகளுக்காக ட்ரெண்டிங்கில் இருந்தார் விக்னேஷ் சிவன். மேலும் அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்கவுள்ளார் என்ற செய்தி வந்தவுடன் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பான இயக்குனராக உருவெடுத்தார் விக்னேஷ் சிவன். எனவே எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும் என விக்னேஷ் சிவன் நினைத்துக்கொண்டிருக்கும் போது கடைசி நேரத்தில் ட்விஸ்ட் … Read more

Same Sex Marriage: மத்திய அரசையும் மீறி சட்டப்பூர்வமாகுமா தன்பாலின திருமணம்?

Same Sex Marriage In India: இந்தியாவில் தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், தன்பாலின திருமணம் என்பது இந்திய குடும்ப அமைப்பின் அடிப்படைக்கு எதிரானது என்றும், தாய், தந்தை என இயற்கையான முறையில் இருந்து முற்றிலும் விலகியிருப்பதாகவும் கூறி, அதை ஏற்க கூடாது என பரிந்துரைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஒன்றுசேர்த்து, உச்ச நீதிமன்றம் நாளை (மார்ச் 13) விசாரணை மேற்கொள்ள உள்ளது.  … Read more

5 மாத பயணத்தை முடித்துக்கொண்டு, நாசாவின் SpaceX capsule லில் பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்..!

5 மாத பயணத்தை முடித்துக்கொண்டு நாசாவின் SpaceX capsule லில் விண்வெளி வீரர்கள் 4 பேர் பூமிக்கு திரும்பினர். விண்வெளி வீரர்கள் நேற்று விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு பயணத்தை தொடங்கிய நிலையில், அவர்கள் பயணித்த டிராகன் காப்ஸ்யூல், இந்திய நேரப்படி இன்று காலை புளோரிடா கடற்கரையில் தரையிறங்கியது. அமெரிக்காவை சேர்ந்த 2 வீரர்கள், ரஷ்யா மற்றும் ஜப்பானை சேர்ந்த தலா ஒரு வீரர் என 4 பேரை கொண்ட இந்தக் குழுவினர் கடந்த அக்டோபர் மாதத்தில் … Read more

குஜராத்தில் பாடகர் மீது ரூபாய் நோட்டுகளை மழைபோல் பொழிந்த பார்வையாளர்கள்

குஜராத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது பாடகர் ஒருவர் மீது ஆண் மற்றும் பெண் பார்வையாளர்கள் ரூபாய் நோட்டுகளை மழைபோல் பொழிந்தனர். வல்சாத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடகர் கிர்திதன் காத்வியின் பாடலை ஏராளமானோர் ரசித்து கேட்டுக்கொண்டிருந்த நிலையில், சில பார்வையாளர்கள் மேடை முன்பு வந்து கிர்திதன் காத்வி மீது ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்தபடியே இருந்தனர். இதனால் அந்த மேடை முழுவதும் ரூபாய் நோட்டுகளால் நிறைந்திருந்தது. கடந்த டிசம்பர் மாதம் குஜராத்தின் நவ்சாரி கிராமத்தில் நடைபெற்ற … Read more

Oscars 2023 : `நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதினை வெல்லும்! – இசையமைப்பாளர் கீரவாணி நம்பிக்கை

இந்த ஆண்டிற்கான 95வது ஆஸ்கர் விழா மார்ச் 13ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட், ஸ்ரேயா, அஜத் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருந்த `ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் `நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதின் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. இதற்கு கீரவாணி (மரகதமணி) இசையமைத்திருந்தார். RRR உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸிக்கியின் பிரமாண்ட மாளிகையில் எடுக்கப்பட்ட இப்பாடல் `கோல்டன் குளோப்’, `Hollywood Critics Association‘ விருதினையும் வென்றது. … Read more

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை துவக்கம்

புதுடெல்லி: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை துவங்க உள்ளது. 2023- 24 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 வரை 27 அமர்வுகளுடன் 66 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 14 முதல் மார்ச் 12 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரையுடன், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் … Read more