இறந்தும் பல உயிர்களில் வாழப்போகும் சேலத்தை சேர்ந்த பள்ளி மாணவன்!

சேலத்தை சேர்ந்த பள்ளி மாணவன் விபத்தில் உயிரிழந்த நிலையில், உடனடியாக மாணவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்து உள்ளனர். சேலம் மாவட்டம் : ஆத்தூர் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்த 9ம் வகுப்பு மாணவன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  நரசிங்கபுரம் ஜெஜெ நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் – சித்ரா தம்பதியரின் மகனான சம்ரீஷ், ஆத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வந்தார். இந்த நிலையில், … Read more

அதிர்ச்சி! பானிபூரி சாப்பிட்ட பெண் மரணம்!!

சென்னையில் பானி பூரி சாப்பிட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போதைய காலகட்டத்தில் உணவுப்பழக்க வழக்கம் முற்றிலும் மாறிவிட்டது. இந்தக்காலத்து இளைஞர்கள் நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிடுவதை விரும்புகின்றனர். ஆனால் அதில் போதுமான ஊட்டச்சத்து கிடைக்காது. அதே போல் சமீபகாலமாக இளைஞர்கள் திடீரென உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நடனமாடும் போது மயங்கி விழுந்து இளைஞர்கள் உயிரிழப்பதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் சென்னையில் பானி பூரி சாப்பிட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. … Read more

“பற்களைப் பிடுங்கி, கொடூரமாகச் சித்ரவதை செய்தார்!" – ஏ.எஸ்.பி தாக்குதலில் சிக்கியவர் கண்ணீர்

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில் ஏ.எஸ்.பி-யாகப் பணியாற்றிய பல்வீர் சிங், விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய குற்றச்சாட்டு காரணமாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அவர்மீதான புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்து விளக்கிவருகிறார்கள். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏ.எஸ்.பி பல்வீர் சிங் இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்துப் பேசிய சவுக்கு சங்கர், “இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சப்-கலெக்டர் விசாரணை நடத்தினால் நியாயம் கிடைக்காது. அதனால் சி.பி.ஐ விசாரணைக்கு … Read more

சிலிண்டர் விலை உயர்வு குறித்து நிர்மலா சீதாராமனிடம் பெண்கள் கேள்வி..!

காஞ்சிபுரம் பழையசீவரத்தில் சிலிண்டர் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய பெண்களிடம், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எளிமையாக விளக்கமளித்தார். பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க, நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் உள்ளிடோர் அங்கு சென்றனர். அப்போது, தன்னை கைக்குலுக்கி வரவேற்ற பெண்களிடம், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறதா? என நிர்மலா சீதாராமன் கேட்ட நிலையில், அனைத்தும் கிடைப்பதாகவும், விலை உயர்வால் சிலிண்டர் வாங்க சிரமப்படுவதாகவும் அவர்கள் பதிலளித்தனர். அப்போது, வெளிநாடுகளில் … Read more

மதுரை | மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

மதுரை: மதுரையில் மூளைச்சாவு அடைந்த சமயநல்லூர் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டன. மதுரை சமயநல்லூர் வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் கார்த்திகா (47). இவரது கணவர் செபாஸ்டின், சில ஆண்டுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார். இரண்டு மகன்கள், ஒரு மகளுடன் கார்த்திகா வசித்து வந்தார். இந்நிலையில் மார்ச் 30ம் தேதி வேலை பார்க்கும் இடத்திற்கு மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தேனூர் பேருந்து நிலையம் அருகே நடந்த விபத்தில் கார்த்திகா பலத்த காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் … Read more

Google நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வழங்கும் இலவச சிற்றுண்டிகள், சலவை சேவைகள் ரத்து: அதிரடி அறிவிப்பு!

கூகிள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வழங்கும் இலவச தின்பண்டங்கள், சலவை சேவைகள், மசாஜ்கள் மற்றும் நிறுவன மதிய உணவுகளை வழங்கும் மைக்ரோ கிச்சன்கள் உட்பட, பல சலுகைகளை நிறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. சலுகைகள் ரத்து கூகிள் தொடர்ந்து உலகின் சிறந்த பணியிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதன் ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்குவதால் இந்த நிறுவனத்தில் பணிபுரிய பலரும் முயல்கிறார்கள். @gettyimages இந்நிலையில், இந்த சலுகைகள் நிறுவனத்திற்கு மிகவும் விலை உயர்ந்தவையாக கருதப்பட்டு, கூகுள் தனது சில ஆடம்பரச் செலவுகளைக் … Read more

தமிழக அரசின் அனைத்து துறைகளும் தங்களுக்கு தேவையான பொருட்களை இ-டெண்டர் மூலம் வாங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

ஏப்ரல் 1 முதல் தமிழக அரசின் அனைத்து துறைகளும் தங்களுக்கு தேவையான பொருட்களை இ-டெண்டர் மூலம் வாங்குவது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இ-டெண்டர் முறைக்கு மாறியுள்ளதை அடுத்து ஏப்ரல் 1 ம் தேதிக்கு முன் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டவை மட்டுமே பழைய நடைமுறையில் பின்பற்றப்படும். இனி எல்லாமே #ETender தான். தமிழ்நாடு அரசு உத்தரவு. டெண்டர்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதன் மூலம் ஊழலை தடுப்பதில் இது ஒரு முக்கியமான முயற்சி. கடந்த பல வருடங்களாக … Read more

4 ஆண்டுகளில் காய்ப்பு வந்து விடும் எலும்பிச்சை சாகுபடியில் இரட்டிப்பு லாபம்: கடவூர், தோகைமலை பகுதியில் விவசாயிகள் ஆர்வம்

தோகைமலை: 4 ஆண்டுகளில் காய்ப்பு வந்து விடும், இரட்டிப்பு லாபம் கிடைப்பதால், கடவூர், தோகைமலை பகுதியில் எலும்பிச்சை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழர்கள் மத்தியில் திருமணங்கள்,மங்கள நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் மற்றும் மருத்துவ குணங்கள், குளிர்பானங்கள் என்று தொன்று தொட்டு எலுமிச்சை பழங்களை பயன்படுத்தி வருவதால் இன்று தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது. இதனால் பொதுமக்களின் தினந்தோறும் பயன்படுத்தி வருவதால் இதன் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், எலும்பிச்சை சாகுபடியில் கூடுதல் லாபம் … Read more

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி!

பெங்களூரு: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 84 ரன்கள் எடுத்தார்.