“இன்னும் 9 மாதங்கள் இருக்கு; அதிமுக-வுடன் கூட்டணி இறுதியாகிவிட்டதென சொல்ல முடியாது!" – அண்ணாமலை

`கூட்டணி குறித்து எதுவும் கூற இயலாது. கூட்டணி குறித்த இறுதி முடிவை பா.ஜ.க தேசியத் தலைமைதான் எடுக்கும்’ என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “அ.தி.மு.க கூட்டணி இறுதியாகிவிட்டதாகக்  கூறமுடியாது. கூட்டணியில் இருக்கிறோம் என்றுதான் அமித் ஷா கூறினாரே தவிர, எதிர் வரும் தேர்தலில் கூட்டணி குறித்து உறுதிசெய்யவில்லை. இதை நீங்கள் புரிந்துகொள்ள இந்தி படித்திருக்க வேண்டும். தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்கள் உள்ள நிலையில், கூட்டணி குறித்து எதுவும் இப்போது … Read more

தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, சேலம், ஈரோடு, நாமக்கல், வேலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு … Read more

நிலம் அளிக்கும் விவசாயிகளுக்கு சுங்கவரியில் பங்கு – மத்திய அரசின் புதிய திட்டம்

புதுடெல்லி: சுங்கச்சாவடிகளுக்கு நிலம் அளிக்கும் விவசாயிகளுக்கு அதில் வசூலிக்கப்படும் சுங்கவரிகளில் பங்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் இந்த புதிய திட்டம் விரைவில் அமலாகிறது. நாடு முழுவதிலும் நகரப் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க ‘பைபாஸ்’ என்றழைக்கப்படும் புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் இவை அமைக்கப்படுகின்றன. இந்த சுங்கச்சாவடிகளை அமைக்கும் தனியார் அல்லது அரசு நிறுவனங்களுக்கு அதில் சுங்கவரி வசூல் செய்ய உரிமை அளிக்கப்படுகிறது. இதற்கான நிலங்கள், விவசாயிகள் மற்றும் … Read more

Vijay Instagram: 100 நிமிடங்களில் மில்லியன் பாலோயர்ஸ்… இன்ஸ்டாகிராமை ஆட்டம்காண வைத்த விஜய்

Actor Vijay Instagram: தற்போது சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தும் காலகட்டம். சினிமா முதல் குழந்தைக்கு காதுகுத்து வரை அனைத்து கொண்டாட்டங்களையும், நிகழ்ச்சிகளையும், சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன், வீடியோக்களுடன், ரீல்ஸ்களுடன் பதிவு செய்வது என்பது தற்போதைய கலாச்சார செயல்பாடாகவே மாறிவிட்டது.  வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ், பேஸ்புக் ஸ்டோரி, இன்ஸ்டா ஸ்டோரி, ஸ்நாப்சாட், ட்விட்டர் என இளைய தலைமுறை மட்டுமின்றி 70s கிட்ஸ் வரையிலும் சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்துகிறது. பிரபலங்களும் முன்பு போல செய்தியாளர் சந்திப்பு ஆகியவற்றை தவிர்தது தற்போது … Read more

தோனி இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை! CSK தோல்வி குறித்து சேவாக் விமர்சனம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணியுடன் தோல்வியை சந்தித்ததற்கு கேப்டன் தோனியின் முடிவுகள் முக்கிய காரணமாக அமைந்தது என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். முதல் போட்டியில் சிஎஸ்கே தோல்வி ஐபிஎல்-லில் 16வது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இந்த போட்டியில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 178 ஓட்டங்கள் … Read more

அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகளை விட தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான் அதிகம் : அண்ணாமலை பேச்சு

அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகளை விட தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான் அதிகம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அண்ணாமலை, அதிமுக கூட்டணி இறுதியாகிவிட்டதாக கூற முடியாது, கூட்டணியில் இருக்கிறோம் என்று அமித்ஷா கூறினாரே தவிர, கூட்டணியை உறுதி செய்யவில்லை என்று விளக்கமளித்துள்ளார். தேர்தலுக்கு 9 மாதம் உள்ள நிலையில் கூட்டணி குறித்து தற்போது எதுவும் கூற இயலாது. இது குறித்த இறுதி முடிவை பாஜக தேசிய … Read more

பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டம் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

மதுரை: மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனியை சேர்ந்தவர் ஜெகதீஸ்(39). இவரது மனைவி மணிமாலா. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. ஜெகதீஸ் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தனது பணம் மற்றும் நண்பர்களிடம் கடனாக பணத்தை பெற்று பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார். ஆனால் பங்குச்சந்தையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடும் மன உளைச்சலிருந்த அவர், நேற்று முன் தினம் காலையில் அவரது வீட்டில் விஷம் குடித்து … Read more

சென்னை சோழிங்கநல்லூர் அருகே விளையாட்டு நகரம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னை சோழிங்கநல்லூர் அருகே விளையாட்டு நகரம் அமைய உள்ள இடத்தை அமைச்சர் உதயநிதி நேரில் ஆய்வு செய்தார். செயின்ட் ஜோசப் கல்லூரி பின்புறம் உள்ள அரசு நிலத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாளை மேல்முறையீடு செய்கிறார் ராகுல்காந்தி

டெல்லி: அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாளை ராகுல்காந்தி மேல்முறையீடு செய்ய உள்ளார். குஜராத் மாநிலம் சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நாளைமேல்முறையீடு செய்கிறார். அவதூறு வழக்கில் கோர்ட் சிறை தண்டனை வழங்கியதை அடுத்து ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி செய்யப்பட்டார்.

படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு

India oi-Vigneshkumar விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிரதேசத்தில் நம்பி கல்வி கற்க வந்த பெண்ணிடமே ஆசிரியர் அத்துமீறியுள்ளார். மேலும், பொய்களைச் சொல்லி திருமணமும் செய்துள்ளார். பெற்றோருக்குப் பிறகு அனைவரது வாழ்க்கையிலும் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். ஒருவரது வாழ்க்கையைச் செதுக்கியதில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. பல இடங்களில் ஆசிரியர்களால் மாணவர்களின் வாழ்க்கையே தலைகீழாக மாறியிருக்கிறது. ஆனால், சில இடங்களில் மாணவிகளிடம் அத்துமீறுவது போன்ற மோசமான செயல்களில் ஆசிரியர்களே ஈடுபடுகின்றனர். ஆந்திரா அப்படியொரு மோசமான சம்பவம் தான் ஆந்திரப் … Read more