Indian 2 Update: தைவானில் தொடங்கிய இந்தியன் 2 ஷூட்டிங்… சீன் பேப்பருடன் வந்த ஷங்கர்!

சென்னை: விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் கமல். ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக இந்தியன் 2 படக்குழு வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தது. தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக இயக்குநர் ஷங்கர் தனது டிவிட்டரில் அப்டேட் கொடுத்துள்ளார். வேகமெடுக்கும் இந்தியன் 2 கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் இந்தியன் படத்தின் இரண்டாம் … Read more

‘70 ஆண்டுகளில் ரூ.48,20,69,00,00,000 கொள்ளை: காங்கிரஸ் ‘ஊழலை’ குறிவைத்து பா.ஜ.க வீடியோ பிரச்சாரம்

‘70 ஆண்டுகளில் ரூ.48,20,69,00,00,000 கொள்ளை: காங்கிரஸ் ‘ஊழலை’ குறிவைத்து பா.ஜ.க வீடியோ பிரச்சாரம் Source link

கழட்டிவிடப்படும் சசிகலா, ஓபிஎஸ்! அப்ப ஒருங்கிணைந்த அதிமுக கூட்டணி – அண்ணாமலை அதிரடி பேட்டி!

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் பதிவிலிருந்து ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து சசிகலா தலைமையில் ஒன்றிணைந்த அதிமுக எம்எல்ஏக்கள், எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தனர்.  பின்னர், அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலாவை ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர். அப்போது திடீர் திருப்பமாக, ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்த, சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். பின்னர் டெல்லியில் சில முக்கிய தலைவர்கள் ஆலோசனைப்படி ஓ பன்னீர்செல்வம் – … Read more

இந்த 15 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது!!

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதால், தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், … Read more

`அலுவல்ரீதியாக ஆங்கிலம் பேசினால் 1 லட்சம் யூரோ அபராதம்…' – இத்தாலி அரசின் முடிவுக்கு என்ன காரணம்?

இத்தாலியப் பிரதிநிதிகள் சபையில் (லோயர் ஹவுஸ்), அந்த நாட்டின் அமைச்சர் ஃபேபியோ ராம்பெல்லி, பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் `பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி’ கட்சியால் கொண்டுவரப்பட்ட சட்டத்தை அறிமுகப்படுத்தி முன்மொழிந்தார். இந்தச் சட்டத்தின்படி, இத்தாலி நாட்டில் உத்தியோகபூர்வ தகவல்தொடர்புகளில் எந்தவொரு வெளிநாட்டு மொழியையும், குறிப்பாக ஆங்கிலத்தைப் பயன்படுத்தினால், 1 லட்சம் யூரோ (ரூ.89 லட்சம்) வரை அபராதம் விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஏனென்றால் ஆங்கில வார்த்தைகளின் பயன்பாடு, இத்தாலிய மொழியை இழிவுபடுத்துவது போல இருக்கிறது என்று `பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி’ குறிப்பிட்டிருக்கிறது. மேலும், நாட்டில் செயல்படும் நிறுவனங்களின் பெயர்கள், குறியீடுகள் உட்பட அனைத்து அதிகாரபூர்வ ஆவணங்களிலும் … Read more

கப்பல் ஊழியரை லாட்ஜில் அடைத்து வைத்து தாக்கிய 9 பேர் கைது..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் கப்பல் ஊழியரை லாட்ஜில் அடைத்து வைத்து விடிய விடிய அடித்து உதைத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்கியதாக 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடியப்பட்டினத்தை சேர்ந்த ஜெயபால் கப்பலில் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், மதுரையைச் சேர்ந்த சக்திவேல் என்பவரிடம் 97 லட்சம்ரூபாய் கடனாக வாங்கி அதில் 90 லட்சம் ரூபாயை திருப்பி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. பாக்கி 7 லட்சம் ரூபாயை தராத நிலையில், நாகர்கோவிலில் … Read more

வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் வரலாம்: இபிஎஸ்

விழுப்புரம்: வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் வரலாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து சேலம் செல்லும் அதிமுக பொது செயலாளர் பழனிசாமிக்கு, விழுப்புரத்தில் இன்று அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியது, ”அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. தொண்டர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நான் செயல்படுவேன். எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்கி நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட … Read more

அவதூறு வழக்கில் நாளை மேல்முறையீடு செய்யும் ராகுல்காந்தி: இடைக்கால தடை கேட்க முடிவு

அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் தண்டனை விதித்தது. இதனால் உடனடியாக எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லி துக்ளக் சாலையில் வசித்து வந்த அரசு பங்களாவையும் காலி செய்ய உத்தரவிடப்பட்டார். அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டவுடன் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை எதிர்த்து சூரத் … Read more

என்னை தன்பாலின ஈர்ப்பாளர் எனக்கூறியது தான் காரணம்! பதவி விலகிய ஸ்கொட்லாந்து பெண் முதல் அமைச்சர்

தன்னைப் பற்றிய பரவிய வதந்திகள் தான் பதவி விலக காரணம் என ஸ்கொட்லாந்து முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டுர்ஜியன் தெரிவித்துள்ளார். நிக்கோலா ஸ்டுர்ஜியன் ஸ்கொட்லாந்தின் முதல் அமைச்சராக இருந்த நிக்கோலா ஸ்டுர்ஜியன், கடந்த பிப்ரவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது அவரது முடிவு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நிக்கோலாவின் முடிவைப் பாதிக்கக்கூடிய பல காரணிகள் இருந்தன. இதனால் அவர் பல முனைகளில் தந்திரமான அரசியல் சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டியிருந்தது. இந்த நிலையில் பதவி விலகியதற்கான … Read more

கொள்ளிடம் பகுதியில் நெல் கொள்முதல் நிறுத்தம்: மீதமுள்ள நெல்மூட்டையை விற்க முடியாமல் விவசாயிகள் அவதி

கொள்ளிடம்: கொள்ளிடம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டதால் மீதமுள்ள நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உரிய இடங்களில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் மூலம் 30க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகள் சம்பா அறுவடை செய்த நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து தொடர்ந்து கொள்முதல் செய்யப்பட்டு வந்தன. சம்பா அறுவடைப்பணி முற்றிலும் முடிந்து விட்டதால் … Read more