பிரிட்டன் மன்னர் 3-ம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர்!

பிரிட்டன் மன்னர் 3-ம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார். இரண்டு நாட்கள் பயணமாக டெல்லி விமான நிலையத்தில் இருந்து மனைவி சுதேஷ் தன்கருடன் புறப்பட்டுச் சென்ற அவர், லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நாளை நடைபெறும் மன்னர் 3-ம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் இந்திய அரசு சார்பில் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், உயர் அதிகாரிகள் என 2 ஆயிரம் பேர் வரை பங்கேற்கின்றனர். கடைசியாக … Read more

மகனின் மனைவியை திருமணம் செய்துகொண்ட மாமனார்; வைரலாகும் வீடியோ

முதியவர் ஒருவர் தனது மருமகளை திருமணம் செய்து கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வைரலாகும் வீடியோ அப்பெண்ணின் கணவர் இறந்த பிறகு தன்னை  கவனித்துக்கொள்ள யாரும் இல்லை என்று தனது மாமனாரை திருமணம் செய்துள்ளார். மேலும் இந்த வீடியோவிற்கு பலரும் தனது கருத்துகளை தெரிவித்து வந்துள்ளனர். இது தெரிந்த ஊடகவியளாலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்துள்ளனர்.   விசாரித்த வேளையில், திருமணம் செய்துக்கொண்ட தம்பதியினர்கள் தனது கருத்துகளை முன்வைத்துள்ளனர். இதன்போது அவர்கள் சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு … Read more

டேன்ஜர் ஜோன்.. ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. குலுங்கிய பூமியால் மக்கள் பீதி.. சுனாமி இல்லை

International oi-Nantha Kumar R டோக்கியோ: ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 என பதிவான நிலநடுக்கத்தால் பூமி குலுங்கியது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓட்டம் பிடித்ததோடு பீதி அடைந்துள்ளனர். இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் சமீபகாலமாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இன்று ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது ஜப்பானின் மத்திய இஷிகாவா பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் நேரப்படி மதியம் … Read more

வெற்றிக்கு புதிய பார்முலாவை கையில் எடுத்த சிரஞ்சீவி

நடிகர் சிரஞ்சீவி தனது இரண்டாவது இன்னிங்ஸில் இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்தாண்டு ஆச்சார்யா, காட்பாதர் என இரண்டு படங்களில் நடித்தார் சிரஞ்சீவி. இதில் ஆச்சார்யா படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. காட்பாதர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது. அதேசமயம் இந்தாண்டு துவக்கத்தில் அவர் நடிப்பில் வெளியான வால்டர் வீரய்யா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது வேதாளம் படத்தின் ரீமேக்காக உருவாக்கி வரும் … Read more

சூடானில் இருந்து இதுவரை 3,862 இந்தியர்கள் மீட்பு| So far 3862 Indians have been rescued from Sudan

கார்துாம்: சூடானிலிருந்து இதுவரை 3,862 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. வட ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே, சமீபத்தில் மோதல் வெடித்தது. இதனால் சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஆப்ரேஷன் காவேரி திட்டம் மூலம் மீட்டு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய விமானப்படை விமானம் மூலம் மேலும் 47 இந்தியர்கள் சூடானில் இருந்து தாயகம் திரும்பியுள்ளனர். இதுவரை 3,862 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக, … Read more

Dil Raju :25 வருட கேரியரில் மிகப்பெரிய தோல்வி.. வெளிப்படையாக பேசிய தில் ராஜு!

சென்னை : வாரிசு படத்தின் மூலம் தமிழில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் தயாரிப்பாளர் தில் ராஜு. இந்தப் படத்தின் ரிலீசின்போது இவர் கொடுத்த பேட்டிகள் படத்திற்கான சிறப்பான விளம்பரங்களாக மாறின. வாரிசு படத்தை தொடர்ந்து சமந்தா நடிப்பில் உருவான சாகுந்தலம் படத்தை இவர் தயாரித்து சமீபத்தில் வெளியிட்டார். சாகுந்தலம் தோல்வி குறித்து பேசிய தில் ராஜு :தயாரிப்பாளர் தில் ராஜு கடந்த 25 ஆண்டுகளாக தயாரிப்பாளராக இருந்து வருகிறார். தெலுங்கில் இவர் முன்னணி தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்துள்ளார். … Read more

‘புத்த ரஷ்மி’ வெசாக் வலயம் ஜனாதிபதியினால் திறந்துவைப்பு

கொழும்பு, ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையினால் வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘புத்த ரஷ்மி’ வெசாக் வலயம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் (03) ஆரம்பமானது. புத்த ரஷ்மி தேசிய வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, காலி முகத்திடல் ஷங்ரிலா பசுமை மைதானம் மற்றும் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மே 03, 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் வெசாக் தோரணங்கள், வெசாக் கூடுகள், பக்திப் பாடல்கள், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த … Read more

தூத்துக்குடி விஏஓ கொலை குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம்! 

தூத்துக்குடி மாவட்டம், சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்த லூர்து பிரான்சிஸ், முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார்.  இவர் மணல் கடத்தலை தடுத்ததாக கூறி கடந்த மாதம் 26ம் தேதி மணல் மாஃபியாக்களால் கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார்.  கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், மணல் மாஃபியாக்கள் ராமசுப்பிரமணியன் , மாரிமுத்து ஆகிய 2 … Read more

இன்று சந்திர கிரகணம்.. நேரம் குறித்த முழு தகவல்கள்.. கோவிலுக்கு செல்லலாமா?

இன்று (மே 5) வெள்ளிக்கிழமை 2023-ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் சித்ரா பௌர்ணமி நிகழ உள்ளது. இது பகுதி சந்திர கிரகணமாக நிகழ உள்ளது. சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் நடைபெறும். ஒரு ஆண்டில் மொத்தம் 4 கிரகணம் நடைபெறும். அதில், இரண்டு சந்திர கிரகணம், இரண்டு சூரிய கிரகணம் நிகழும். ஆனால், சோபகிருது ஆண்டில் 3 சூரிய கிரகணமும் 3 சந்திர கிரகணமும் நிகழும் இகழும் என ஜோதிடம் … Read more