தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், சில இடங்களில் வெப்பநிலையும் உயர வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. மேலும், தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு … Read more

மணிப்பூரில் ராணுவத்தினர் தீவிர ரோந்து – கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு

இம்பால்: மணிப்பூரில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியதையடுத்து, மாநிலம் முழுவதும் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், கலவரக் காரர்களை கண்டதும் சுட மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. மணிப்பூரில் மேதே சமுதாய மக்கள் 53 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி, மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் மத்திய அரசுக்குப் பரிந்துரை அனுப்புமாறு, மாநில அரசுக்கு உயர் … Read more

திராவிட மாடல்னு ஒன்னு இல்லவே இல்லை.. ஸ்டாலினுக்கு ஆளுநர் பதிலடி..!

தமிழ்நாட்டின் DravidianModel-தான் இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக Formula என்றும் இதனை மெய்ப்பிக்கும் நமது ஈராண்டு சாதனைகளை மக்களின் இதயங்களில் பதித்திடுவோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய மடலில் குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டாடுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த இரண்டாண்டு ஆட்சியை பொறுத்தவரை திமுக மீது கலவையான விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. ஒரு பக்கம் இலவச திட்டங்கள், வளர்ச்சி பணிகள் என நல்ல விமர்சனங்களையும் இன்னொரு பக்கம் … Read more

Manobala: நம்பி ஏமாந்துட்டேன் சார்..மனோபாலாவிடம் மனம்விட்டு பேசிய தளபதி..!

அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள் தமிழ் சினிமாவில் அனைவரிடமும் நட்பாகவும் நெருக்கமாகவும் பழக்ககூடிய ஒரு சில மனிதர்களில் மனோபாலாவும் ஒருவர். அதன் காரணமாகவே தான் அவரின் பிரிவை யாராலும் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நேற்று மனோபாலா உடல்நலக்குறைவால் காலமான செய்தியை கேட்ட அனைவரும் உச்சகட்ட சோகத்தில் இருக்கின்றனர். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்ட மனோபாலா ஒரு சிறந்த மனிதராகவும் இருந்துள்ளார். … Read more

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சர்ச்சையை ஏற்படுத்திய சிறுநீரக மோசடி! சத்திரசிகிச்சைகளை இடைநிறுத்த குழு பரிந்துரை

பொரளை தனியார் வைத்தியசாலையொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுநீரக மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு மேற்படி வைத்தியசாலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை தற்காலிகமாக இடைநிறுத்த பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக விசாரணை நடத்தும் குழு பரிந்துரைத்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். சத்திரசிகிச்சைகளை இடைநிறுத்துமாறு எழுத்து மூலம் அறிவிப்பு குறித்த வைத்தியசாலைக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள கடிதத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி குறித்த வைத்தியசாலையினால் சமர்ப்பிக்கப்பட்ட நீதிப்பேராணை மனு நேற்று … Read more

உலகிலேயே முதல் முறையாக தாயின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு அறுவை சிகிச்சை!

அமெரிக்காவில் தாயின் வயிற்றில் இருந்தபோது குழந்தைக்கு உலகிலேயே முதல் முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க தம்பதி அமெரிக்காவின் லூசியானாவில் உள்ள பேடன் ரோக் நகரைச் சேர்ந்தவர் டெரெக். இவரது மனைவி கென்யட்டா கோல்மன். இவர் கொடிய மரபணுக் கோளாறால் பாதிக்கப்பட்டார். இதனால் கர்ப்பமாக கென்யட்டாவின் வயிற்றில் உள்ள குழந்தையும் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கென்யட்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அவர் கர்ப்பமாகி 34 … Read more

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழை

சென்னை தமிழகத்தில் 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழை பெய்யலாம் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. தற்போது தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தவிர தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  இதனால் அப்பகுதிகளில் 7-ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி … Read more

ஜிமிக்கி கம்மலை ஓவர்டேக் செய்த தர்ஷனா

கடந்த 2017ல் மோகன்லால் நடிப்பில் பிரபல மலையாள இயக்குனர் லால் ஜோஸ் டைரக்சனில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான படம் வெளிப்பாடிண்டே புஸ்தகம். இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறினாலும் எதிர்பாராத விதமாக இந்த படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் என்கிற பாடல் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த பாடலுக்கு பெண்கள் பலரும் விதவிதமாக நடனமாடி அவற்றை சோசியல் மீடியாவில் வீடியோக்களாக வெளியிட்டு வைரல் ஆக்கினர். இந்த பாடல் இப்போது வரை யூடியூபில் 110 … Read more

ஜெய்சங்கர், பிலாவல் புட்டோ கைகுலுக்கினர் ?| Jaishankar, Bilawal Bhutto shook hands?

பனாஜி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும், பாக். அமைச்சர் பிலாவல் புட்டோவும் கைகுலுக்கி கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோ நேற்று கோவா வந்தார். ஷாங்காய் அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சார்பில் நேற்று விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த விருந்தின் போது மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும், பாக். அமைச்சர் பிலாவல் புட்டோவும் பரஸ்பரம் கை குலுக்கி கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. … Read more

AishwaryaRajesh: அந்த சவுண்டு கேட்டா கோபம் வருமா… ஜிவி பிரகாஷிடம் பப்ளிக்காக கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

சென்னை: வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ். முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அவர் பின்னர் நடிகராகவும் தனது பயணத்தைத் தொடர்ந்தார். ஆனால், தற்போது முழுக்க முழுக்க இசையமைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காத ஜிவி பிரகாஷ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிடம் பப்ளிக்காக கொஞ்சி விளையாடியது வைரலாகி வருகிறது. ஐஸ்வர்யா ராஜேஷிடம் கொஞ்சி விளையாடிய ஜிவி பிரகாஷ்:வசந்தபாலன் இயக்கிய வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி … Read more