”இந்தியா – நேபாளத்துடனான உறவு இமய மலையின் உயரத்திற்கு கொண்டு செல்ல முயற்சி..” – பிரதமர் மோடி..!

இந்தியா – நேபாளத்துடனான உறவை இமய மலையின் உயரத்திற்கு கொண்டு செல்ல கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசு முறைப்பயணமாக இந்தியா வந்த நேபாள பிரதமர் பிரசன்டாவை ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து, இருதரப்பு விவகாரம் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், நேபாள பிரதமருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, எதிர்காலத்தில் இரு நாடுகளின் உறவை சூப்பர்ஹிட்டாக்கும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறினார். … Read more

Maamannan: "விளையாட்டா நடிக்கத் தொடங்கி விளையாட்டு துறை அமைச்சராகிட்டிங்க"-சிவகார்த்திகேயன்

மாரிசெல்வராஜின் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் படக்குழுவினர் உட்பட திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் இவ்விழாவில் கலந்து பேசியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், உதயநிதி குறித்தும் மார்செல்வராஜ் மற்றும் வெற்றிமாறன் குறித்தும் கலகலப்பாகப் பேசியுள்ளார். மாமன்னன் ஆடியோ வெளியிட்டு விழா இதுகுறித்து விழா மேடையில் பேசிய அவர், “என்னோட இயக்குநர் ராஜ்குமார், ஃபர்ஸ்ட் லுக் வரும்வரை என் முடியோட லுக்கக் காட்டவேணாம். கெட்டப் லாம் சொல்லாதீங்கனு சொல்லிருக்கார் … Read more

அவதூறு வழக்கில் தண்டனை பெற்ற முதல் நபர் நான் தான் : ராகுல் காந்தி

கலிஃபோர்னியா அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி தாம்தான் அவதூறு வழக்கில் தண்டனை பெற்ற முதல் நபர் எனத் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் மோடியின் பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. எனவே மக்களவை எம்.பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.  ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு 10 நாட்கள் சுற்றுப்பயணமாகச் … Read more

கிராபிக் டிசைனர் உடன் தீனாவுக்கு இன்று திருமணம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு நிகழ்ச்சியை தொலைபேசியில் கலாய்த்து புகழ் பெற்றவர் தீனா. பிறகு அந்த நிகழ்ச்சியில் நேரடியாக தோன்றி தனது மிமிக்ரி மற்றும் பாடி லாங்வேஜ் காமெடி மூலம் புகழ்பெற்றார். அதன்பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கிய தீனா கைதி, மாஸ்டர் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார். தற்போதும் பல படங்களில் காமெடி மற்றும் ஹீரோவின் நண்பன் வேடங்களில் நடித்து வருகிறார். திருவாரூரை சேர்ந்த தீனா சமீபத்தில் தனது சொந்த ஊரில் வீடு ஒன்றை … Read more

China on the road to Russia: The second hole in the Earths surface | ரஷ்யா பாதையில் சீனா : பூமியின் மேற்பரப்பில் இரண்டாவது துளை

பெய்ஜிங் : நம் அண்டை நாடான சீனா, பூமிக்கு அடியில் புதிய எல்லைகளை ஆராயும் விதமாக, பூமியின் மேற்பரப்பில் இருந்து, 10 ஆயிரம் மீட்டர் (32,808 அடி) வரை, துளையிடும் பணியை துவக்கி உள்ளது. சீன அதிபர் ஜிஜின்பிங், கடந்த 2021ம் ஆண்டு, நாட்டின் முன்னணி விஞ்ஞானிகளிடம் பேசியபாது, பூமியின் அடிப்பகுதியை ஆய்வு செய்வதில், நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய வேண்டும் என, தெரிவித்து இருந்தார். இதன்படி, மே.,30ம் தேதி, எண்ணெய் வளம் மிக்க, ஜின்ஜியாங் பகுதியில், … Read more

Maamannan: வெளியானது மாமன்னன் பாடல்கள்… இசை வெளியீட்டு விழாவில் குவிந்த பிரபலங்கள்!

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் இம்மாதம் இறுதியில் வெளியாகவுள்ளது. ரெட் ஜெயன்ட் தயாரித்துள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், இந்தப் படத்தில் இருந்து அனைத்துப் பாடல்களும் தற்போது வெளியாகி ஹிட் அடித்து வருகின்றன. மாமன்னன் பாடல்கள் வெளியானது : கோலிவுட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாமன்னன் திரைப்படம் இம்மாதம் இறுதியில் வெளியாகவுள்ளது. … Read more

Maruti Suzuki Sales Report May 2023 – 15 % வளர்ச்சி அடைந்த மாருதி சுசூகி விற்பனை

இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி மே 2023-ல் 143,708 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டை விட 15% விற்பனை அதிகரித்துள்ளது. மே 2022-ல் 124,474 எண்ணிக்கையில் விற்பனை செய்திருந்தது. ஹெட்ச்பேக் மற்றும் சிறிய ரக ஆல்டோ, எஸ் பிரெஸ்ஸோ கார்களின் விற்பனை எண்ணிக்கை குறைய துவங்கியிருந்தாலும், எஸ்யூவி மற்றும் எம்பிவி ரக ஃபிரான்க்ஸ், எர்டிகா, பிரெஸ்ஸா, கிராண்ட் விட்டாரா, XL6 மாடல்கள் மாருதிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. Maruti Suzuki Sales … Read more

Maamannan : `மாமன்னன்' மாதிரி படம் பண்ணுங்க 'சைக்கோ' மாதிரியான படம் பண்ணாதீங்க -மிஷ்கின்

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் மாரிசெல்வராஜ், இயக்குநர் மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, ஏ.ஆர் ரஹ்மான், வடிவேலு, சிவகார்த்திகேயன், சூரி, வெற்றிமாறன், பா.ரஞ்சித் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் இவ்விழா மேடையில் பேசிய இயக்குநர் மிஷ்கின், மாரி செல்வராஜ், உதயநிதி குறித்தும் … Read more

சேலம் பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்த 6 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சேலம் மாவட்டம், சேலம் வட்டம், எஸ்.கொல்லப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசுக் கிடங்கில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் … Read more