முதல்வர் பொய் பேசுகிறார்… 24 மணிநேரத்தில் வெள்ளை அறிக்கை வரும் – அண்ணாமலை அட்டாக்!

Tamilnadu Latest News: தமிழகத்திற்கு குறைவான நிதி அளிக்கப்பட்டுள்ளது என்ற முதலமைச்சர் குற்றச்சாட்டை மறுத்த அண்ணாமலை 24 மணி நேரத்தில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக தெரிவித்தார். 

சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு: மோடி அரசு போலியான நல்லெண்ணத்தை காட்ட வருகிறது என கார்கே கண்டனம்…

டெல்லி: மத்தியஅரசு சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்துள்ளதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும்  நிலையில்,  மக்களிடையே மோடி அரசு போலியான நல்லெண்ணத்தை காட்ட வருகிறது என அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்து உள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து சமையல் எரிவாயு பயனாளர்களுக்கும், மத்தியஅரசு ரூ. 200 கூடுதலாக மானியம் அறிவித்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ200 குறைக்கப்படுவதாக  அறிவித்துள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் … Read more

லியோ படத்திற்கு 17 தீம் மியூசிக் கம்போஸ் செய்த அனிருத்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணி நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இசை விழா சென்னையில் நடைபெற இருப்பதாகவும், அந்த விழாவில் கமல்ஹாசன், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. லியோ படத்திற்காக 17 தீம் மியூசிக் டிராக்குகளை கம்போஸ் செய்து கொடுத்திருக்கிறாராம் அனிருத். இந்த ட்ராக் மியூசிக் அனைத்தும் படத்தில் ஆங்காங்கே முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் என்று … Read more

கணவருக்கு டிமிக்கி.. மாமனாரின் ஹோட்டலிலேயே வேறு நடிகருடன் தங்கிய நடிகை.. கையும் களவுமாக சிக்கிய கதை

சென்னை: கணவருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு மாமனாரின் ஹோட்டலிலேயே வேறு நடிகருடன் தங்கி நடிகை கையும் களவுமாக சிக்கியிருக்கிறார். கடவுள் பெயர் கொண்ட இயக்குநரின் படத்தில் அறிமுகமானவர் அந்த நடிகை. முதல் படத்திலேயே நாகரீகமே இல்லாமல் நடித்து சர்ச்சை நாயகி என்று பெயர் எடுத்தார். அதன் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் பெரிதாக அமையவில்லை. இப்படிப்பட்ட பறவை படத்தில்

மல்வத்து, அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்களிடம் ஜனாதிபதி ஆசி பெற்றார்

மல்வத்து, அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்களிடம் ஜனாதிபதி ஆசி பெற்றார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க   (29) பிற்பகல் மல்வத்து, அஸ்கிரி மகா நாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார். முதலில் மல்வத்து மகாவிகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி, மல்வத்து பீடத்தின் மகாநாயக்க வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். அதனையடுத்துதேரர், பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினார். இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க … Read more

அரிய நிகழ்வான 'புளூ மூன்': இன்று இரவு காணலாம்

சென்னை: ஒரே மாதத்தில் இரண்டு முறை முழு நிலவு தென்படும் புளூ மூன் எனும் வானியல் அரிய நிகழ்வு இன்று (ஆகஸ்ட் 30) நடைபெற இருக்கிறது. பூமியின் துணைக்கோளான நிலா புவியை சுற்றிவர 29.5 நாட்களாகிறது. அதற்கேற்ப ஒவ்வொரு மாதமும் ஒருமுறை முழு நிலவான பவுர்ணமியும், ஒருமுறை அமாவாசையும் வரும். ஆனால், மிகவும் அரிதாக ஒரே மாதத்தில் இருமுறை பவுர்ணமி தோன்றும். அவ்வாறு ஒரே மாதத்தில் 2 முறை முழு நிலவு தோன்றும் போது, 2-வதாக வரும் … Read more

குஜராத்தில் கோடீஸ்வரர் எண்ணிக்கை 49% அதிகரிப்பு

அகமதாபாத்: குஜராத்தில் ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவோர் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 49% அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சிபிடிடி) புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2021-22 மதிப்பீட்டு ஆண்டில் குஜராத்தைச் சேர்ந்த 9,300 பேர் ரூ.1 கோடி அல்லது அதற்கு மேல் வருவாய் ஈட்டியதாக தங்கள் வருமான வரி தாக்கல் படிவத்தில் தெரிவித்திருந்தனர். இது 2022-23 மதிப்பீட்டு ஆண்டில் 49% அதிகரித்துள்ளது. அதாவது கூடுதலாக 4,500 பேர் (மொத்தம் 13,800) … Read more

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக தலைமை அதிகாரியாக கீதிகா ஸ்ரீவஸ்தவா நியமனம்

புதுடெல்லி: பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக தலைமை அதிகாரியாக கீதிகா ஸ்ரீவஸ்தவா நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் திலுள்ள இந்திய தூதரகத்தின் தலைமைப் பொறுப்பில் டாக்டர் எம். சுரேஷ் குமார் உள்ளார். இந்நிலையில் அந்த பொறுப்புக்கு கீதிகா நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து எம். சுரேஷ் குமார் விரைவில் டெல்லி திரும்பவுள்ளார். தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் (எம்இஏ) இணைச் செயலாளராக பணியாற்றி வரும், கீதிகா ஸ்ரீவஸ்தவா விரைவில் புதிய பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019-ம்ஆண்டு ஆகஸ்ட் … Read more