எலக்ட்ரிக் பஸ்ஸை தொடர்ந்து பொது போக்குவரத்துக்கு டெஸ்லா டாக்சிகள் விரைவில் அறிமுகம்… யு.ஏ.இ. அறிவிப்பு…

ஐக்கிய அரபு நாடுகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஷார்ஜாவில் பொது போக்குவரத்திற்கு எலெக்ட்ரிக் பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2027 ம் ஆண்டு துபாயில் அனைத்து டாக்சிகளும் சுற்றுசூழலுக்கு ஏற்றவகையில் மின்சார வாகனங்களாக மாற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், ஷார்ஜாவில் புதிதாக மின்சாரத்தில் இயங்கக்கூடிய இரண்டு பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் 10 எலக்ட்ரிக் டாக்ஸிகளை ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிமுகம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 750க்கும் மேற்பட்ட … Read more

பாலியல் குற்ற பின்னணியில் உருவாகும் 'தொடு தூரம்'

ரித்விக் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ” தொடு தூரம் “. முகமரியான் படத்தை இயக்கிய சாய் மோரா இந்த படத்தை இயக்குகிறார். கேரள நாட்டிளம் பெண்களுடனே, சாயம், பட்டதாரி போன்ற படங்களில் நடித்த அபி சரவணன் தனது பெயரை விஜய் விஷ்வா என மாற்றிக் கொண்டு இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, மொட்ட ராஜேந்திரன், சாய் தீனா, மைம் கோபி, விஜய் டிவி பாலா, தீனா, ஆரஞ்சு மிட்டாய் … Read more

'போர் தொழில்' OTT Release: போர்த்தொழில் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்பொழுது? அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு!!

சென்னை: நடிகர்கள் சரத்குமார், அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்துள்ள படம் போர் தொழில். சைக்கோ த்ரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படம் கடந்த ஜூன் 9ம் தேதி வெளியாகி ஹிட்டடித்தது. விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

Angus Cloud: தந்தை இறந்த ஒரே வாரத்தில் மறைந்த 25 வயது ஹாலிவுட் நடிகர் – சோகப் பின்னணி!

HBOவில் நெடுந்தொடராக ஒளிப்பரப்பாகும் `Euphoria’ தொடர் மூலம் பிரபலமானவர் அமெரிக்காவைச் சேர்ந்த நடிகர் ஆங்கஸ் க்ளவுட் (Angus Cloud). இவரது தந்தை உடல்நலக் குறைவால் கடந்த வாரம் காலமானார். ஆங்கஸ், தன் தந்தையின் மீது அதிகப் பிரியம் கொண்டவர். இருவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்தவர்கள். திடீரென நிகழ்ந்துவிட்ட தந்தையின் மறைவவை ஆங்கஸால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக தனது குடும்பத்தினருடன் சரியாகப் பேசாமல் தனிமையேலேயே மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். ஆங்கஸ் க்ளவுட் இந்நிலையில் தந்தை … Read more

மேட்டூர் | காவிரி ஆற்றை ஒட்டிய படித்துறையில் தேங்கிக் கிடக்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு

மேட்டூர்: மேட்டூர் அணை காவிரி ஆற்றை ஒட்டியுள்ள படித்துறை பகுதியில் தேங்கிக் கிடக்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18-ம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்நாளில் காவிரி ஆற்றில் புதுமணத் தம்பதி புனித நீராடுவதும், காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பூஜைகளும் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு விழா, வரும் நாளை மறுதினம் (ஆகஸ்ட் 3-ம் தேதி) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் … Read more

ஹரியாணா கலவரம் | மசூதிக்கு தீ வைப்பு; பலி 5 ஆக அதிகரிப்பு – அரசு அவசர ஆலோசனை

சண்டிகர்: ஹரியாணா மாநிலத்தின் குருகிராமில் கலவரக்காரர்களால் மசூதிக்கு தீ வைக்கப்பட்டத்தில் துணை இமாம் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். ஹரியாணா கலவரத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்தனர்; 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஹரியாணா மாநிலம் குருகிராமை ஒட்டியுள்ளது நூ (Nuh). இந்தப் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா நடைபெற்றது. இந்த யாத்திரை குருகிராம் – ஆல்வார் இடையே வந்தபோது இளைஞர்கள் குழு ஒன்று தடுத்து நிறுத்தியது. தேசிய நெடுஞ்சாலைப் பகுதியான அங்கு ஊர்வலத்தின் … Read more

ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் … Read more

"சாத்தானின் பிள்ளைகள்".. பூதாகரமாகும் சீமானின் பேச்சு.. சீறிப்பாய்ந்த செல்வப்பெருந்தகை!

சென்னை: முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் பேசியது தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி வரும் நிலையில், இதற்கு காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று (31.07.2023) போராட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் எனப் பேசி இருக்கிறார். … Read more

மோடியுடன் ஒரே மேடையில் சிரித்து பேசிய சரத் பவார்.. இப்போ தானே கூட்டணி ரெடியாச்சு.. அதுக்குள்ளயா?

புணே: பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணியை அமைத்திருக்கும் நிலையில், அக்கூட்டணியின் முக்கிய தலைவரான சரத் பவார் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரே மேடையை பகிர்ந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை எப்படியாவது அகற்றிவிட வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் குறியாக இருக்கின்றன. இதன் ஒருபகுதியாக, தங்களுக்குள் இருக்கும் ஈகோ பிரச்சினைகளை புறந்தள்ளிவிட்டு காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய … Read more

Jailer: ஜெயிலர் படத்திற்காக ரஜினி செய்த காரியம்..பாராட்டும் திரையுலகம்..!

ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தை தான் தற்போது ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கு இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. என்னதான் ரஜினி சமீபகாலமாக ஹிட் கொடுக்கவில்லை என்றாலும், நெல்சனின் முந்தைய படம் சரியாக போகவில்லை என்றாலும் இவ்விருவரின் கூட்டணியில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருக்கின்றது. இப்படத்தின் மூலம் இருவரும் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கு ஏற்றாற்போல இப்படத்தில் மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என மிகப்பெரிய நட்சத்திர … Read more