தெலங்கானாவில் வேட்பு மனு தாக்கல் நிறைவு

ஹைதராபாத்: தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. தெலங்கானா மாநிலத்தில் மொத்தமுள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வரும் 30-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்நடைபெற உள்ளது. இங்கு ஆளும் கட்சியான பிஆர்எஸ்,எதிர்க்கட்சிகளான காங்கிரஸ்,பாஜக ஆகிய 3 கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், கடந்த 3-ம் தேதி இங்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நேற்று பிற்பகல் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. வரும் 13-ம் தேதி … Read more

ஒரு லட்சம் இந்திய தொழிலாளர்களை பணியமர்த்த தைவான் அரசு திட்டம்

புதுடெல்லி: கிழக்கு ஆசிய நாடான தைவானை ஆக்கிரமிக்க சீனா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதன் காரணமாக ராணுவ, வர்த்தக ரீதியாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் தைவான் நட்பு பாராட்டி வருகிறது. தைவானில் உற்பத்தித் துறை, வேளாண்மை, மீன் பிடித் துறையில் தொழிலாளர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கு தீர்வு காண இந்தியாவில் இருந்து ஒரு லட்சம் தொழிலாளர்களை பணியமர்த்த அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக இந்தியா, தைவான் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. … Read more

வைகையில் வெள்ளம் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது தொடர் மழை காரணமாக, 71 அடி உயரம் கொண்ட வைகை அணை, நேற்று அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் உபரிநீராக வெளியேற்றப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்படுவதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், வைகை ஆற்றில் யாரும் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யானைக்கல் தரைப்பாலம் … Read more

\"அவங்க பிளானே வேற..\" இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சொன்ன அந்த ஒரு வார்த்தை! உற்று பார்க்கும் உலக நாடுகள்

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே சண்டை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வரும் நிலையில், போர் குறித்தும் தனது வருங்கால திட்டம் குறித்தும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். கடந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது. ஒரு பக்கம் ஏவுகணைகளை Source Link

Modis telephonic conversation with the President of Brazil | பிரேசில் அதிபருடன் மோடி தொலை பேசியில் உரை

புதுடில்லி: பிரதமர் மோடி ,பிரேசில் அதிபருடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.இஸ்ரேல்-பாலஸ்தீன போர் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டிசில்வாவிடம் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.இஸ்ரேல்-பாலஸ்தீன போரில் இடம் பெயர்ந்தவர்கள் , மறு குடியமர்வு ,மேற்காசிய நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். புதுடில்லி: பிரதமர் மோடி ,பிரேசில் அதிபருடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.இஸ்ரேல்-பாலஸ்தீன போர் கடந்த … Read more

சுரேஷ்கோபி பற்றி தவறாக பேசினேனா ? கொந்தளிக்கும் ஷாஜி கைலாஷ்

மலையாளத்தில் கடந்த 33 வருடங்களாக முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷாஜி கைலாஷ். மோகன்லாலை வைத்து 7 படங்களையும் மம்முட்டியை வைத்து ஆறு படங்களையும் இயக்கியுள்ளார். ஆனாலும் ஷாஜி கைலாஷின் பேவரைட் ஹீரோ என்றால் அது சுரேஷ்கோபி தான்.. அவரை வைத்து 18 படங்களை இயக்கியுள்ள ஷாஜி கைலாஷ், கடந்த சில வருடங்களாக இறங்கு முகத்தில் இருந்த போதும் தற்போது முன்புப்போல பிசியான இயக்குனராக மாறி படங்களை இயக்கி வருகிறார். இந்த நிலையில் நடிகர் சுரேஷ் கோபியை … Read more

Actor Ganga: அதிர்ச்சி!! பிரபல நடிகர் கங்கா காலமானார்… திரையுலகினர் சோகம்…

சென்னை: 1980களில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கங்கா. டி ராஜேந்தரின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவராக வலம் வந்த கங்கா, ஹீரோ உள்ளிட்ட கேரக்டர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் கங்கா திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கங்காவின் மறைவு செய்தியை அறிந்த திரையுலகினர், அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கங்கா மறைவு: 1980களில் தமிழ்

ஒடிசாவில் பயங்கரம் மாணவியை கற்பழித்த 2 ஆசிரியர்கள் 'போக்சோ'வில் கைது

புவனேஸ்வர், ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 11 வயது பழங்குடியின மாணவி ஒருவர் 6-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 9-ந்தேதி பள்ளியின் தலைமை ஆசிரியரும் மற்றொரு ஆசிரியரும் மாணவியை பாலியல் வன்கொடுமை உள்ளனர். மாணவி இது குறித்து பெற்றோரிடம் எதுவும் கூறவில்லை. சிறுமிக்கு அடிவயிற்றில் வலி ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு டாக்டர்கள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம் என்று கூறி உள்ளனர். … Read more

இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்வதாக ஐசிசி அறிவிப்பு

துபாய், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெளியேறியது. இதில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி 55 ரன்னில் ஆல்-அவுட் ஆகி மோசமாக தோற்றது அந்த நாட்டு அரசியல் மட்டத்திலும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கோர்ட்டு இந்த நடவடிக்கைக்கு தடை விதித்தது. இருப்பினும் இலங்கை கிரிக்கெட் … Read more