50MP கேமரா, 5000mAh பேட்டரி… 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே…! Redmi -ன் ரகசிய பிளான் லீக்

Redmi தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை ரகசியமாக அறிமுகப்படுத்தியுள்ளது. Redmi 13C ஸ்மார்ட்போன் பற்றி பேசுகிறோம். நிறுவனம் Redmi 13C ஐ நைஜீரியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ரெட்மி ஃபோன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே, 50 மெகாபிக்சல் சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பு மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது MediaTek Helio G85 செயலியில் இயங்குகிறது. ரேம் மற்றும் ஸ்டோரேஜ் அடிப்படையில் இந்த போன் மூன்று வகைகளில் … Read more

ஆன்லைன் ரம்மி தடை ரத்து எதிர்த்து மேல்முறையீடு! அமைச்சர் ரகுபதி தகவல்

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி பலர் உயிரிழந்த நிலையில்,  தமிழக அரசுஆன்லைன்  சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்றியது. இதை எதிர்த்து ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திறமை சார்ந்த ரம்மி, போக்கர்போன்ற விளையாட்டுகளை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு என்று கூறி தடை விதித்து தமிழக … Read more

பாகிஸ்தானில் தொடரும் 'சம்பவங்கள்'.. இந்தியாவுக்கு எதிரான மேலும் ஒரு லஷ்கர் பயங்கரவாதி சுட்டுக் கொலை!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வந்த மேலும் ஒரு லஷ்கர் இ தொய்பா இயக்க பங்கரவாதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக பல்வேறு பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. கனடாவில் இருந்து சீக்கியர்களுக்கான தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் செயல்படுகின்றனர். பாகிஸ்தானில் Source Link

25 lakh donation announced by Tamil Nadu government scientist Weeramuthuvel | தமிழக அரசு அறிவித்த ரூ.25 லட்சம் விஞ்ஞானி வீரமுத்துவேல் நன்கொடை

பெங்களூரு : தமிழக அரசு அறிவித்த 25 லட்சம் ரூபாயை, தான் படித்த நான்கு கல்லுாரிகளுக்கு ‘சந்திரயான் – 3’ திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் நன்கொடையாக வழங்கினார். ‘இஸ்ரோ’வில் சிறப்பாக பணிபுரிந்த ஒன்பது தமிழக விஞ்ஞானிகளுக்கு, தமிழக அரசு சார்பில், முதல்வர் ஸ்டாலின் சென்னையில் ரொக்கப் பரிசு வழங்கி கவுரவித்தார். அனைவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இது தொடர்பாக, தமிழக அரசு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளை தொடர்பு கொண்டு பணம் வழங்குவதற்கான விபரங்களை பெறும் … Read more

கதை மீது பயம் வந்ததால் இயக்குனர் ஷங்கரை தேடி சென்றேன்: கார்த்திக் சுப்புராஜ்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெகு சில படங்களிலேயே தனது திறமையை நிருபித்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்தை வைத்து ‛பேட்ட' படத்தை இயக்கும் அளவிற்கு வெகு விரைவில் முன்னேறினார். அதைத் தொடர்ந்து அவர் அடுத்தடுத்து இயக்கிய ஜகமே தந்திரம், மகான் ஆகிய படங்கள் வரவேற்பை பெற தவறின. இந்நிலையில் தற்போது ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமாக ஜிகர்தண்டா டபுளஎக்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இன்று (நவ-10) அந்த படம் வெளியாகி உள்ளது. இன்னொரு … Read more

BB 7 Show: வாய் திறந்தா எல்லாமே காலி.. நீயா நானா.. அடித்துக் கொண்ட மணி -நிக்சன்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றைய தினம் 40வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. கடந்த மாதம் 1ம் தேதியே இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்ட நிலையில் நித்தம் ஒரு டாஸ்க்குடன் நிகழ்ச்சி களைகட்டி வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கோர்ட் டாஸ்க் தற்போது நடந்து வருகிறது. இதில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி விவாதங்களை

பலசரக்குகள் தொழில்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வசதிகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது

  • இலங்கை பலசரக்குகள் சங்கத்தின் 19 ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு. பண்டைய காலங்களில் நாட்டின் பிரதான வருமான மூலமாக இருந்த பலசரக்குகள் தொழில்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு விரிவான வேலைத்திட்டம் தேவை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதற்கான சரியான திட்டத்தை தயாரிக்குமாறு இலங்கை பலசரக்குகள் சங்கத்திற்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, தேவையான வசதிகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், தனியார் துறைகளை ஒன்றிணைத்து இந்த வேலைத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் … Read more

சட்டமன்ற இருக்கை விவகாரம்: இபிஎஸ் தொடர்ந்த வழக்கில், சபாநாயகர் அப்பாவு பதிலளிக்க ஹை கோர்ட் உத்தரவு!

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி, அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி சட்டமன்றச் செயலாளர், சபாநாயகர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், `2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 66 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக அ.தி.மு.க … Read more

எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கோரிய வழக்கு: சபாநாயகர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கோரிய வழக்கில், வரும் டிச.12ம் தேதிக்குள் சட்டமன்ற செயலாளர், சபாநாயகர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 66 அதிமுக எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. 2021-ம் ஆண்டு மே மாதம் நடந்த … Read more

தெலங்கானாவில் வெற்றி பெற்றால் 6 மாதங்களுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: காங்கிரஸ் வாக்குறுதி

ஹைதராபாத்: தெலங்கானாவில் சிறுபான்மையினர் நலனுக்கான பட்ஜெட் தொகை ரூ.4,000 ஆயிரம் கோடியாக உயர்த்தப்படும் என்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதும் ஆறு மாதங்களுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சித் தெரிவித்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் இந்தமாதம் கடைசியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அங்கு தேசிய, பிரந்திய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமை சிறுபான்மையினர் பிரகடனத்தை வெளியிட்டது. அதில் … Read more