‛அன்பே ஆருயிரே' நிலாவுக்கு மார்ச் மாதம் திருமணம்

எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்த அன்பே ஆருயிரே என்ற படத்தில் அறிமுகமானவர் நிலா எனும் மீரா சோப்ரா. நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினரான இவர், அதன்பிறகு ஜாம்பவான், மருதமலை, காளை, இசை, கில்லாடி உட்பட பல படங்களில் நடித்தார். பின்னர் தெலுங்கு, ஹிந்தியில் நடித்து வந்த நிலாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக சரியான பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் வெப் சீரியல்களில் நடித்து வந்தவர் தற்போது திருமணத்திற்கு தயாராகி உள்ளார். தனது திருமணம் மார்ச் மாதம் ராஜஸ்தானில் நடைபெறுவதாக … Read more

Heeramandi web series: சஞ்சய் லீலா பன்சாலியின் ஹீராமண்டி வெப் சீரிஸ்.. கலர்புல் பர்ஸ்ட் லுக் வீடியோ!

சென்னை: பாலிவுட்டில் மிகப்பெரிய இயக்குநராக ரசிகர்களை கவர்ந்து வருபவர் சஞ்சய் லீலா பன்சாலி. பாலிவுட்டில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் இவருடைய படங்களுக்கு மேக்கிங்கிற்கு அதிகமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். கடந்த 2022ம் ஆண்டில் ஆலியா பட்டின் கங்குபாய் காதிவாடி படத்தை இயக்கி ஏராளமான ரசிகர்களின் பாராட்டுக்களையும் சிறப்பான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்றிருந்தார் சஞ்சய் லீலா பன்சாலி. இந்தப்

புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் மூவர் ஜனாதிபதியிடம் நன்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்

இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் புதிய உயர்ஸதானிகர்கள் மற்றும் தூதுவர்கள் மூவர் நேற்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர். எசுவாத்தினி இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர், கிரிகிஸ், ருமேனியா, துர்க்மெனிஸ்தான் நாடுகளின் புதிய தூதுவர்களே இவ்வாறு புதிதாக நியமனம் பெற்றுள்ளனர். இன்று நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தவர்களின் பெயர்கள் பின்வருமாறு, 01- மென்சி சிபோ டிலாமினி – எசுவாத்தினி இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர்Mr. Menzie Sipho Dlamini High Commissioner of the Kingdom of Eswatini) … Read more

Vijay: `ஒரே குடும்பத்தினர்தான் தலைவராக இருக்க வேண்டுமா?’ – விஜய் அரசியல் என்ட்ரி குறித்து தமிழிசை

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள பண்பாட்டு மைய கருத்தரங்க அறையில், ‘தொழில் திறன் மேம்பாட்டில் உளவியல் பயன்பாடு’ குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு இன்று துவங்கியது. அதை துவக்கி வைத்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழகத்தில் அதிகமானவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். இதை நான் தொடந்து வலியுறுத்தி வந்துள்ளேன், நடிப்பவர்களும் அரசியலுக்கு வரலாம். தமிழகத்திற்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுகின்றார்கள், ஒரு குடும்பத்தை சார்ந்தவர்கள்தான் தலைவராக இருக்க வேண்டும் என்பது இல்லை. நிறைய தலைவர்கள் … Read more

கேரளாவில் களைகட்டிய மஞ்சு விரட்டு: பாரம்பரியத்தை கொண்டாடி மகிழ்ந்த தமிழர்கள்

மூணாறு: கேரளா மாநிலம் மூணாறு அருகே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான மஞ்சு விரட்டு வெகு விமரிசையாக நடைபெற்றது. தேனி மாவட்டம் அருகே கேரளாவின் இடுக்கி மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான தமிழர்கள் பல தலைமுறையாக வசித்து வருகின்றனர். கேரளாவைப் பொறுத்தளவில் ஓணம் பண்டிகை உள்ளிட்ட முக்கிய தினங்களில் அம்மாநில பாரம்பரியப்படி படகுப்போட்டி, கதகளி, களரி மோகினியாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். இந்நிலையில் தமிழர்கள் தங்கள் பகுதியில் தங்களின் பூர்வீக நிகழ்வுகளை முக்கிய தினங்களில் கொண்டாடி வருகின்றனர். இதன்படி … Read more

“மேயர் தேர்தலிலேயே முறைகேடு எனில், பிற தேர்தல்களில்…” – பாஜக மீது கேஜ்ரிவால் சாடல்

புதுடெல்லி: சண்டிகர் மேயர் தேர்தல் குறித்து பாஜகவை சாடிய டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், “மேயர் தேர்தலிலேயே முறைகேடு செய்கிறவர்கள் சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் எந்த எல்லை வரைக்கும் செல்வார்கள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னதாக இந்தப் போராட்டம் அங்கிருந்து சில நூறு மீட்டர்கள் தள்ளியுள்ள டிடியு மார்க்கில் … Read more

வேலை போயிடும் மிரட்டும் மனோகரி! நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட்!

Ninaithen Vandhai Serial Update: ரவுடிகளிடம் சிக்கிய சுடர்.. காக்க வந்த எழிலுக்கு விழுந்த அடி – நினைத்தேன் வந்தாய் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

தேர்தல் ஆணையத்தில் விஜய்யின் கட்சி பதிவு! அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?

டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் அவரது கட்சியை பதிவு செய்ததையடுத்து கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.  

Dhanya Balakrishna: "தொழில் மேல் சத்தியம்…" – சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த நடிகை தன்யா பாலகிருஷ்ணா

ரஜினி கெளரவ கதாபத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்தில் நடிகை தன்யா நடித்துள்ளார். அவரது பெயரிலான பதிவு ஒன்றில் “தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள். மின்சாரத்திற்காகப் பிச்சை எடுக்கிறீர்கள். எங்கள் பெங்களூரை ஆக்ரமித்து கொச்சைப்படுத்துகிறீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால். இதையும் தருகிறோம். உங்களுக்கு வெட்கமாக இல்லையா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி ‘தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன்’ என்று தன்யா கூறியதகாவும் சமூகவலைதளங்கில் பேசுபொருளாகி ‘HateDhanya’ எனும் ஹாஷ்டாக் ட்ரெண்டிங்கானது. தன்யா பாலகிருஷ்ணா 12 வருடங்களுக்கு … Read more

50 வருடங்களுக்கு பிறகு காவேரி வன விலங்கு சரணாலயத்தில் புலிகள் தென்பட்டன

காவேரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தில் ஓசூர் வனக்கோட்டத்தில் ஜுவாலகிரி காப்புக்காடுகள் சரக பகுதியில் 50 வருடங்களுக்கு பிறகு இரண்டு புலிகள் தென்பட்டது. ஜூவாலகிரி காப்புக்காடுகள் சரக பகுதியில் 4 முதல் 5 வயதுள்ள மற்றும் 8 முதல் 9 வயதுள்ள இரண்டு ஆண் புலிகளின் புகைப்படங்கள் பதிவாகி உள்ளதாக ஓசூர் வன உயிரினக்காப்பாளர் மற்றும் தலைமை வன உயிரினக்காப்பாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். ஜுவாலகிரி காப்புக்காடுகள் சரக பகுதியில் ஜனவரி 2024- இல் பொருத்தப்பட்ட கேமரா பதிவுகள் மூலம் … Read more