cVIGIL | நாடு முழுவதும் சி-விஜில் செயலியில் இதுவரை 79,000+ விதிமீறல் புகார்கள் பதிவு

புதுடெல்லி: தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களைத் தெரிவிக்க சி-விஜில் (cVIGIL) செயலி மக்களிடத்தில் சிறந்த கருவியாக மாறியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 79,000-க்கும் மேற்பட்ட விதிமீறல் புகார்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்தப் புகார்களில் 99 சதவீத புகார்கள் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், அவற்றில் 89 சதவீத புகார்கள் 100 நிமிடங்களுக்குள் தீர்க்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்த தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, 58,500 புகார்கள் (மொத்த புகார்களில் … Read more

'ஊழல் பற்றி அவர்கள் பேசவே கூடாது…' பொள்ளாச்சியில் பாஜகவை பொளந்தெடுத்த கனிமொழி

Kanimozhi Election Campaign: விபத்தாக பாஜக ஆட்சி அமைந்தால் நிதி தமிழகத்திற்கு வராது என்று பொள்ளாச்சியில் தேர்தல் பரப்புரையின் போது எம்.பி., கனிமொழி பேசியுள்ளார். 

சின்னசாமியில் ஆர்சிபியை மீண்டும் சின்னாபின்னமாக்கிய கேகேஆர் – நொந்து போன விராட் கோலி!

RCB vs KKR Highlights: ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா அணி 19 பந்துகளை மீதம் வைத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. The streak is broken! @KKRidersbecome the first team to register an away win in #TATAIPL 2024 Scorecardhttps://t.co/CJLmcs7aNa#RCBvKKR pic.twitter.com/svxvtA409s — IndianPremierLeague (@IPL) March 29, 2024

கோவையில் திமுக வெற்றி உறுதி : கனிமொழி

கோவை திமுக துணைச் செயலர் கனிமொழி கோவையில் திமுக வெற்றி பெறுவது உறுதி எனக் கூறியுள்ளார். திமுக துணைப் பொதுச் செயலர் கனிமொழி கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, பிரச்சாரம் மேற்கொண்டார்.பிறகு கனிமொழி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். பேட்டியில் கனிமொழி.- ”நடை பெற உள்ள தேர்தலில் கோவையில் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி இருக்கும் என்பது தெளிவாகியுள்ளது. திமுக அரசு கடந்த மூன்றாண்டுகளில் மக்களுக்கு செய்திருக்கின்ற திட்டங்கள் அனைத்தும் … Read more

பொய் வழக்கு பதிவு.. குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை.. நீதிமன்றம் அதிரடி

அகமதாபாத்: குஜராத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டில் போதை பொருள் வைத்திருந்ததாக வழக்கறிஞர் மீது பொய் வழக்கு பதிவு செய்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டம் பலான்பூர் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் சாமர்சிங் ராஜ் புரோகித் என்ற வழக்கறிஞர் தங்கியிருந்தார். ராஜஸ்தானை Source Link

விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம்

இலங்கையில் செயல்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பற்றி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது. அதேபோல வானொலி அறிவிப்பாளராக பணியாற்றிய இசைப்பிரியா பற்றியும் படங்கள் வந்திருக்கிறது. தற்போது இந்த அமைப்பின் அடுத்த கட்ட தலைவர்கள் பற்றிய படம் தயாராகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தளபதியாக இருந்த பிரிகேடியர் பால்ராஜ் மற்றும் பிரிகேடியர் தமிழினி ஆகியோர் வாழ்க்கையை மையமாக வைத்து 'செஞ்சமர்' என்ற படம் தயாராகிறது. இதில் ஜெகநாதன், முருகன், பகலவன், குட்டி ராதிகா, சாக்ஷி அகர்வால், மைம் … Read more

Aadujeevitham: முதல் நாளிலேயே பட்டையை கிளப்பிய ஆடு ஜீவிதம் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

சென்னை: நடிகர் பிரித்விராஜ், அமலா பால் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஆடு ஜீவிதம் படம் நேற்றைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய வெற்றிக்கான அஸ்திவாரத்தை போட்டுள்ளது. 16 ஆண்டுகளாக இந்த படத்திற்காக நடிகர் பிரித்விராஜ் மற்றும் படத்தின் இயக்குனர் பிளெஸ்ஸி ஆகியோர் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது அந்த

பிரதமரைக் கிண்டல் செய்து இன்ஸ்டா போஸ்ட்? – மன்னிப்பு கோரிய பூஜா வஸ்ட்ராகர்!

மத்தியப் பிரதேசம் மற்றும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் விளையாடுபவர் பூஜா வஸ்ட்ராகர். 2018ம் ஆண்டில் இருந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். பூஜா வெளியிட்டுள்ள சோசியல் மீடியா பதிவு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் வெளியான தேர்தல் பத்திரத்தை மையப்படுத்தி அவர் வெளியிட்டு இருக்கும் பதிவிற்கு `வசூலி டைட்டான்’ என்று பெயரிட்டுள்ளார். அதில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா மற்றும் பா.ஜ.க தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள இப்பதிவு இரவோடு … Read more

செய்தித் தெறிப்புகள்: காங்கிரஸுக்கு ஐ.டி நோட்டீஸ் முதல் தங்கம் விலை புதிய உச்சம் வரை

ரூ.1,823 கோடி நிலுவை – காங்கிரஸுக்கு ஐ.டி நோட்டீஸ்: 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு காலக்கட்டத்துக்கான வரி நிலுவை மற்றும் அபராதமாக ரூ.1,823 கோடியை செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த ஆண்டுகளுக்கான வரிக் கணக்குகளில் உள்ள முரண்பாடுகளுக்காக இந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சி தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, “பாஜக வரி பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறது” … Read more

சமோசா ரூ.15, பிரியாணி ரூ.150… பிற மாநிலங்களில் வேட்பாளர் செலவின விலைப் பட்டியல் எப்படி?

புதுடெல்லி: மக்களவையைத் தேர்ந்தெடுக்கும் திருவிழாவுக்கு நாடே தயாராகி வருகிறது. அரசியல் கட்சிகள் பரபரப்பாக பிரச்சாரத்தில் இருக்கும் நேரத்தில் வேட்பாளர்களின் தேர்தல் செலவு குறித்து விலைப் பட்டியலை நிர்ணயித்துள்ளது தேர்தல் ஆணையம். அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் இந்த விலைப் பட்டியலை நிர்ணயம் செய்து கண்காணித்தும் வருகின்றனர். அவற்றில் உணவு குறித்த விவரம் பார்ப்போம். டீ, சமோசா தொடங்கி சைவம், அசைவம், லஸ்ஸி, தந்தூரி, தோதா, தால் மக்னி என வகை வகையாய் நீள்கிறது பட்டியல். தமிழகம், ஆந்திரா … Read more